செய்திகள் :

மாண்டெக் சிங் தலைமையில் தமிழ்நாடு வருவாயை உயர்த்த உயர்மட்ட குழு! யார் இவர், உறுப்பினர்கள் யார் யார்?

post image

தமிழ்நாட்டில் 'வருவாய் பெருக்குக் குழு' ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மரிய வில்சன் என்ன சொல்கிறார்?

இந்தக் குழு குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன், "கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்நாட்டின் மாநிலத்தின் சொந்த வருவாய் (State's Own Tax Revenue - SoTR) மற்றும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) விகிதத்தில் ஏற்பட்டுள்ள சரிவை சரிசெய்து, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப வருவாய் வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில், தமிழக அரசு உயர்மட்ட 'வருவாய் பெருக்குக் குழு' (Revenue Augmentation Committee) ஒன்றை அமைத்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் மரிய வில்சன்
அமைச்சர் மரிய வில்சன்

தமிழ்நாட்டின் வருவாயை உயர்த்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பில், புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் மாண்டெக் சிங் அலுவாலியா அமர்த்தப்பட்டுள்ளார்.

இவருடன் இன்னும் ஐந்து உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள்...

முனைவர் கே.பி.கிருஷ்ணன்,

அர்பிந்த் மோடி,

ஓய்வுப்பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி நஜிப் ஷா,

எம்.ஏ.சித்திக் ஐ.ஏ.எஸ்,

முனைவர் சுரேஷ் பாபு.

யார் இவர்கள்?

மாண்டெக் சிங் அலுவாலியா - பொருளாதார நிபுணர், மத்திய திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர்.

முனைவர் கே.பி.கிருஷ்ணன் - தேசியப் பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சி மன்றத்தின் (NCAER) பொருளாதாரவியல் துறைத் தலைவர் பேராசிரியர் மற்றும் புது டெல்லியில் உள்ள கொள்கை ஆராய்ச்சி மையத்தின் (CPR) கௌரவப் பேராசிரியர்.

அர்பிந்த் மோடி - வரிக்கொள்கை நிபுணர், வருமான வரிச் சட்டத்தை மாற்றி அமைப்பதற்கான பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் (2017-18), சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிதி விவகாரத் துறையின் பொருளாதார நிபுணர்.

மாண்டெக் சிங்
மாண்டெக் சிங்

நஜிப் ஷா - ஓய்வுப்பெற்ற இந்திய வருவாய்ப் பணி அதிகாரி, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) முன்னாள் தலைவர், நவா ஷேவா துறைமுகத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு சுங்க இல்லத்தின் (JNCH) சுங்கத் துறை ஆணையர், கூடுதல் தலைமை இயக்குநர் (வரி ஏய்ப்புத் தடுப்புப் பிரிவு, மும்பை), இந்திய அரசின் நிதியமைச்சகத்தில் இணைச் செயலாளர் (வரித் திரும்பப் பெறுதல் பிரிவு).

எம்.ஏ.சித்திக் ஐ.ஏ.எஸ் - கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித் துறை, தமிழ்நாடு அரசு.

முனைவர் சுரேஷ் பாபு - இயக்குநர், சென்னை வளர்ச்சி ஆய்வுக் கழகம், சென்னை.

இவர்களது பணி என்ன?

> மாநிலத்தின் சொந்த வரி மற்றும் வரிசாரா வருவாயைப் பெருக்குவதற்கும், வருவாய் நெகிழ்ச்சி (revenue buoyancy), திறன் மற்றும் தற்சார்பை மேம்படுத்துவதற்கென கொள்கை மற்றும் நிர்வாக அளவிலான நடவடிக்கைகளில் அரசுக்கு ஆலோசனை வழங்குதல்.

> புதிய மற்றும் முழுமையாகப் பயன்படுத்தப்படாத வருவாய் ஆதாரங்களைக் கண்டறிதல்; மேலும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்காதாயம் (PSU dividends), நிலம் மற்றும் சொத்துகளைப் பணமாக்குதல் (land and asset monetisation), பயனீட்டாளர் கட்டணங்களைச் சீரமைத்தல் ஆகிய வரிசாரா வழிகளை ஆராய்தல்.

வருவாய்
வருவாய்

> வருவாய் ஈட்டும் துறைகளில் உள்ள முறைமை சார்ந்த கசிவுகள், வரி ஏய்ப்பு மற்றும் நிர்வாகத் திறனின்மைகளை அடைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் வருவாய் பாதுகாப்பிற்கான வழிகளைப் பரிந்துரைத்தல்; இதில் தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் நிர்வாகத்தில் முறைமை சார்ந்த மாற்றங்களை மேற்கொள்ளுதல் அடங்கும்.

> மனித நுகர்வுக்கான மதுபான ஒழுங்குமுறை மற்றும் வரி விதிப்புக் கொள்கைகளில் மாற்றங்களைச் செய்வதன் மூலம், மதுபானங்கள் வழியிலான வருவாயை அதிகரிப்பதற்கான வழிகளைப் பரிந்துரைத்தல்.

பீகார்: 'ஜனநாயகத்தின் மீது கொடூர தாக்குதல்' மாணவர் போராட்டத்தில் காவலர் கையில் AK-47 - என்ன நடந்தது?

நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடிகளை எதிர்த்து பீகாரில் அகில இந்திய மாணவர் சங்கம் (AISA) 'பீகார் பந்த்' என்கிற பெயரில் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த ஜூலை 25-ம் தேதி, பீகாரின் சிவான் மாவட்டத்த... மேலும் பார்க்க

"அமைச்சரானதும் ஊர்க்கிணற்றைப் பூட்டிட்டாங்க ஜெகதீஸ்வரி" - வருந்தும் சொந்த கிராம‌ மக்கள்

தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்குவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மிகச் சமீபமாக அமைச்சர் ஜெகதீஸ்வரி சொந்தக் கட்சி நிர்வாகியிடம் பேசியதாக வெளியான ஆடியோ ஒன்று சமூக ஊடகங்கள... மேலும் பார்க்க

M Sand, ஜல்லி: தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல இடைக்காலத் தடை - 9 காரணங்கள்!

தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்து செல்ல தமிழ்நாடு அரசு 3 மாதங்கள் இடைக்காலத் தடை விதித்துள்ளது. என்ன உத்தரவு? சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தில் 'தமிழ்நாடு சட்டவிரோதக... மேலும் பார்க்க

'ATM மூலம் அரிசி, கோதுமை பெற்றுக்கொள்ளலாம்' - ஒடிசா போன்று கேரளத்தில் நடைமுறைப்படுத்த திட்டம்

​ஏ.டி.எம் மூலம் ​பணம் எடுப்பதைப் போல அரிசி, கோதுமை போன்ற தானியங்களையும் ஏ.டி.எம் மூலம் வழங்க கேரள அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்கான தானிய ஏ.டி.எம்-களை கேரள மாநில உணவுத் துறை நிறுவ உள்ளது. இதற்கா... மேலும் பார்க்க

மருத்துவர் முதல் அரசியல் வரை: ராமதாஸ் அரசியல் பயண முழு வரலாறு! | Timeline

1939-ல் விழுப்புரம் மாவட்டம் கீழ்விசிறி கிராமத்தில் ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்தில் ராமதாஸ் பிறந்தார்.1960-களில் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் முடித்து, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் 3... மேலும் பார்க்க