பீகார்: 'ஜனநாயகத்தின் மீது கொடூர தாக்குதல்' மாணவர் போராட்டத்தில் காவலர் கையில் A...
மருத்துவர் முதல் அரசியல் வரை: ராமதாஸ் அரசியல் பயண முழு வரலாறு! | Timeline

1939-ல் விழுப்புரம் மாவட்டம் கீழ்விசிறி கிராமத்தில் ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்தில் ராமதாஸ் பிறந்தார்.
1960-களில் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் முடித்து, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் 3 ஆண்டுகள் பணியாற்றினார்.

1960-களின் பிற்பகுதியில் அரசுப் பணியை விலகி, சொந்தமாக க்ளினிக் தொடங்கி ஏழை மக்களுக்கு ரூ.2 கட்டணத்திலும், இலவசமாகவும் மருத்துவம் பார்த்தார்.

1980 ஜூலை 20-ல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் சமுதாயத்தின் பின்தங்கிய நிலையைப் போக்க 'வன்னியர் சங்கம்' என்ற அமைப்பைத் தொடங்கினார்.
1980-ல் ஈரோடு கருங்கல்பாளையத்தில் வன்னியர் சமுதாயத்துக்கான 'தனி இட ஒதுக்கீடு' கோரி முதல் மாநாட்டை நடத்தினார்

1984-ல் தனி இட ஒதுக்கீடு கோரி சென்னை மெரினாவில் பட்டினிப் போராட்டம் நடத்தினார்.

1985-ல் சென்னையில் லட்சக்கணக்கானோருடன் பிரம்மாண்ட பேரணி மற்றும் மாநாடு நடத்தினார்.

1986-ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், பட்டை நாமப் போராட்டம், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு எதிரான கறுப்புக்கொடி போராட்டம், ஒரு நாள் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களை நடத்தினார்.

1980 - 1987 வரை வன்னியர்கள் அதிகம் வாழும் 30,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு நேரில் சென்று மக்களைச் சந்தித்தார். `கனல்’ என்ற இதழைத் தொடங்கி எழுதினார்.

1988-ல் கும்பகோணம் குடிதாங்கி கிராமத்தில், வன்னிய மக்களின் எதிர்ப்பையும் மீறி பட்டியலினத்தவரின் சடலத்தைச் சுமந்து சென்று அடக்கம் செய்தார். இதனால் திருமாவளவனால் `தமிழ்க் குடிதாங்கி’ என அழைத்தார்.
1989 ஜூலை 16-ல் வன்னியர் சங்கத்தை 'பாட்டாளி மக்கள் கட்சி' (பா.ம.க) என்ற அரசியல் கட்சியாக மாற்றினார். சென்னை சீரணி அரங்கில் நடந்த தொடக்க விழாவில் 10 லட்சம் பேர் பங்கேற்றனர்.

வாழ்நாளில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன், நானும் என் வாரிசுகளும் கட்சிப் பதவிக்கோ, சட்டமன்ற /நாடாளுமன்றத்திற்கோ வரமாட்டோம் என வாக்குறுதி அளித்தார்.

மார்க்ஸ், அம்பேத்கர், பெரியாரை வழிகாட்டிகளாக அறிவித்து, கட்சியின் பொதுச் செயலாளராக பட்டியலினத்தைச் சேர்ந்தவரே இருக்க வேண்டும் என கட்சி விதிகளை உருவாக்கினார்.

1991-ல் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பண்ருட்டி தொகுதியில் மட்டும் வென்று பண்ருட்டி ராமச்சந்திரன் பா.ம.க-வின் முதல் எம்.எல்.ஏ-வாகத் தேர்வானார்.

1992-ல் `தமிழர் வாழ்வுரிமை மாநாடு’ நடத்தி, தனித்தமிழீழ ஆதரவுத் தீர்மானம் மற்றும் பிரபாகரன் படத்துடன் பேரணி நடத்தியதால் ஜெயலலிதாவால் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1995-ல் ராமதாஸ் 'பசுமை தாயகம்' அமைப்பைத் தொடங்கி, அதன் தலைவராக அன்புமணியை பொறுப்பேற்க வைத்தார். பின்னர் அன்புமணி இளைஞரணித் தலைவரானார்.

2004-ல் அன்புமணி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்க வைத்தார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி, தோல்வியை சந்தித்தார்.

அன்புமணி தனது மனைவி சௌமியாவை அரசியலுக்கு கொண்டுவர, அதற்குப் போட்டியாக, ராமதாஸ் தனது மகள்வழி பேரனான முகுந்தனைக் கட்சிக்குள் கொண்டுவந்தது மோதலை உருவாக்கியது.

2026- சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ராமதாஸ் - அன்புமணிக்கு இடையே கட்சியின் உரிமையாளர் யார் என்பது தொடர்பாக விரிசல் ஏற்பட்டது. சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானப்பிறகு விரிசல் கலந்து இருவரும் ஒன்று சேர்ந்தனர்.

கட்சியின் தலைமைப் பொறுப்பை அன்புமணியிடம் கொடுத்த ராமதாஸ், அரசியலிலிருந்து விலகி, துறவறம் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.














