செய்திகள் :

நெல்லை: பள்ளி மாணவர் மீது சக மாணவர்கள் தாக்குதல் - சாதிய மோதலா? தீவிர விசாரணை!

post image

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பருத்திப்பாடு கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் ஒருவர் பயின்று வருகிறார். அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவருடன் நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அதுவே இருவருக்கும் இடையே கைகலப்பாக மாறியது. அதில் ஆத்திரமடைந்த ஒரு மாணவர், அங்கு கிடந்த மரக்கட்டையால் சக மாணவரைத் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவருக்கு தலை மற்றும் காது பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆசிரியர்கள் தலையிட்டு காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதலில் ஈடுபட்ட இரு மாணவர்களும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த மோதலுக்கு சாதிய பின்னணி ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளி மாணவர்களிடையே சாதிய மோதல்கள் நடப்பது வாடிக்கை. ஆனாலும் மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை, காவல்துறை ஆகியோர் இணைந்து மேற்கொண்ட முயற்சிகளால் கடந்த சில மாதங்களாக பள்ளிகளில் அமைதியான சூழல் நிலவியது. இந்த நிலையில், மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்துள்ள இந்த சம்பவத்தால் மீண்டும் அத்தகைய சூழல் உருவாகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், "மாணவர்களுக்குள் வகுப்பறையில் ஏற்பட்ட ஒரு சாதாரண சண்டைதான் இது. இதில் எந்தவிதமான சாதிய பின்னணியும், சாதிய மோதலும் இல்லை. எந்த முன் விரோதத்தாலும் இந்த முதல் நடக்கவில்லை" என்று தெரிவித்தனர்.

நெல்லை
நெல்லை

இந்த மோதல் தொடர்பாக தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை கூறுகையில், "என் மகன் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் சக மாணவனால் தாக்கப்பட்டுள்ளார். என் மகனை சில வாரங்களாகவே குறிப்பிட்ட மாணவன் அடிப்பது, அவதூறாகப் பேசுவது, சாதிப் பெயரைச் சொல்லித் திட்டுவது என தொந்தரவு செய்து வந்துள்ளார். அதை எதிர்த்துக் கேட்டதால் கடுமையாக தாக்கியுள்ளனர். என் மகனின் காதில் ரத்தம் வந்துகொண்டிருக்கிறது. இது ஒரு மாணவன் செய்திருக்க முடியாது. இதன் பின்னணியில் உள்ள மாணவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகனுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் உறவினர் கூறுகையில், `மூலக்கரைப்பட்டி பள்ளியில் சாதிய மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது அங்குள்ள தலைமையாசிரியருக்கும் இது தெரியும். ஆனால் அவரால் அதை முழுமையாகத் தடுக்க முடியவில்லை. அங்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியதால் என் மகனை பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் சேர்த்தேன். அது போல எல்லோராலும் செய்ய முடியாது என்பதால், அந்தப் பள்ளியில் மாணவர்களைப் பாதுகாக்க அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

நெல்லையில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாணவன் தாக்குதலுக்குள்ளான சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டம் டு தமிழ்த்தாய் வாழ்த்து.! மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, இன்று காலை தொடங்குவதற்கும் முன்பே இரண்டு முக்கிய விவகாரங்களால் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டம் வழங்கும் நடைமுறை தொடர்பாக ம... மேலும் பார்க்க

பீகார்: 'ஜனநாயகத்தின் மீது கொடூர தாக்குதல்' மாணவர் போராட்டத்தில் காவலர் கையில் AK-47 - என்ன நடந்தது?

நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடிகளை எதிர்த்து பீகாரில் அகில இந்திய மாணவர் சங்கம் (AISA) 'பீகார் பந்த்' என்கிற பெயரில் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த ஜூலை 25-ம் தேதி, பீகாரின் சிவான் மாவட்டத்த... மேலும் பார்க்க

"அமைச்சரானதும் ஊர்க்கிணற்றைப் பூட்டிட்டாங்க ஜெகதீஸ்வரி" - வருந்தும் சொந்த கிராம‌ மக்கள்

தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்குவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மிகச் சமீபமாக அமைச்சர் ஜெகதீஸ்வரி சொந்தக் கட்சி நிர்வாகியிடம் பேசியதாக வெளியான ஆடியோ ஒன்று சமூக ஊடகங்கள... மேலும் பார்க்க

M Sand, ஜல்லி: தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல இடைக்காலத் தடை - 9 காரணங்கள்!

தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்து செல்ல தமிழ்நாடு அரசு 3 மாதங்கள் இடைக்காலத் தடை விதித்துள்ளது. என்ன உத்தரவு? சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தில் 'தமிழ்நாடு சட்டவிரோதக... மேலும் பார்க்க

'ATM மூலம் அரிசி, கோதுமை பெற்றுக்கொள்ளலாம்' - ஒடிசா போன்று கேரளத்தில் நடைமுறைப்படுத்த திட்டம்

​ஏ.டி.எம் மூலம் ​பணம் எடுப்பதைப் போல அரிசி, கோதுமை போன்ற தானியங்களையும் ஏ.டி.எம் மூலம் வழங்க கேரள அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்கான தானிய ஏ.டி.எம்-களை கேரள மாநில உணவுத் துறை நிறுவ உள்ளது. இதற்கா... மேலும் பார்க்க