செய்திகள் :

``ராகுலை கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்க வையுங்க" - இர்பானிடம் கலகலப்பாகப் பேசிய பிரியாங்கா காந்தி

post image

டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, ஊடகங்களிடம் போராட்டத்தில் கலந்துகொண்ட பலரும் உரையாற்றினர். அதில் ஒருவர்தான் இர்பான். பள்ளி சென்று கல்வியறிவை பெறாத இவர், தன் அனுபவம், ஆர்வம் மூலம் ஆழமான அரசியல் அறிவைப் பெற்றிருக்கிறார். அந்தப் பேட்டியில், நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும், குறிப்பாக உழைக்கும் வர்கத்தினர் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றியும் வெளிப்படையாகப் பேசியிருந்தார். அவர் பேச்சு சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளானது. அவர் குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் தேடப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் பெயர் இர்பான் என்றும், சாலையில் ஐஸ் விற்கும் தொழில் செய்பவர் என்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இர்பானை அவரின் இல்லத்துக்குச் சென்று சந்தித்தார்.

ராகுல் காந்தி - இர்பான்
ராகுல் காந்தி - இர்பான்

ராகுல் காந்தியுடனான உரையாடலின்போது, ​​``எனக்கு எந்தத் தனிப்பட்ட கோரிக்கைகளும் இல்லை. தொழிலாளர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தொடர்ந்து முன்னிலைப்படுத்தி தீர்வை நோக்கி நகர வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

ராகுல் காந்தியை சந்தித்ததற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இர்பான், ``ராகுல் காந்தி சார் வருவதற்கு முன்பு பிரியாங்கா காந்தி என்னிடம் போனில் பேசினார். அப்போது `ராகுல் காந்தியைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லுங்க இர்பான். என் பேச்சைக் கேட்பதில்லை. அவரை எப்படியாவது சம்மதிக்க வையுங்கள்' என என்னிடம் வேடிக்கையாகக் கேட்டார். ராகுல் காந்தி திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க வேண்டும் என்று நான் விரும்புவதாக அவரிடம் கூறினேன்." என நகைச்சுவையாகக் கூறினார்.

`அடிமையாக்கும்’ வகையில் வடிவமைப்பு'- இன்ஸ்டா, பேஸ்புக்குக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை!

இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக ஊடக தளங்கள் பயனர்களை தங்களுக்கு அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) குற்றம் சாட்டியுள்ளது. ஐரோப்பிய ஆணையம் மெட்டா நிறுவனத்திற்க... மேலும் பார்க்க

காட்டு யானைக்குக் கண்ணீர் அஞ்சலி: வயநாட்டை நெகிழ வைத்த 'லட்சுமி'யின் மரணம்

கேரளாவின் வனப்பகுதிகளில் மனித-விலங்கு மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து, பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், வயநாடு காட்டு எல்லையில் உள்ள ஒரு சிறிய கிராமம் மனிதநேயத்திற்கும், விலங்கினப் பாசத்திற்கும்... மேலும் பார்க்க

நெரிசலில் தவித்த உயிர்... ஓடும் பேருந்திலிருந்து குதித்து காப்பாற்றிய தேவதைகளின் நெகிழ்ச்சி சம்பவம்!

சாலைகளில் போக்குவரத்து நெரிசல் என்பது நமக்கு எரிச்சலையும் தாமதத்தையுமே தந்து பழகியிருக்கிறது. ஆனால், அதே நெரிசலில் ஒரு மனிதனின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தபோது, இரண்டு செவிலியர்கள் காட்டிய அசாத்திய துண... மேலும் பார்க்க

மதுரை: காதல் கோட்டை க்ளைமேக்ஸ் ரீ-கிரியேஷன்; ரீல்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டான ரயில் நிலையம்!

மதுரை ரயில்வே நிலையத்தில் நாள்தோறும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மதுரை ரயில் நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில... மேலும் பார்க்க

MTC பேருந்தில் பயணிக்கு வந்த வலிப்பு; துரிதமாகச் செயல்பட்ட நடத்துநர்; சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்!

சென்னையில் ஓடும் பேருந்துகளில் தினமும் ஆயிரக்கணக்கான சுவாரசியமான, நெகிழ்ச்சியான சம்பவங்கள் அரங்கேறுவது வழக்கம். ஆனால், சமீபத்தில் கிளாம்பாக்கம் - திருவான்மியூர் வழித்தடத்தில் இயக்கப்பட்ட மாநகரப் பேருந... மேலும் பார்க்க