செய்திகள் :

7,000 மாணவர்களுக்கு HIV தொற்று; கர்நாடகாவில் அதிர்ச்சி... கல்லூரிகளில் பரிசோதனைக்கு உத்தரவிட்ட அரசு!

post image

கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 7,000-க்கும் மேற்பட்டோருக்கு ஹெச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் ஹெச்.ஐ.வி பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்களை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

HIV

சமீபத்திய அதிகாரபூர்வ தரவுகளின்படி, 7,000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் இந்தத் தொற்று வேகமாகப் பரவி வருவது பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் கர்நாடகா 3-வது இடத்தில் உள்ளது. 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களுக்கே ஹெச்.ஐ.வி தொற்று மிக வேகமாக உயர்ந்து வருகிறது என KSAPS தரவுகள் சொல்கின்றன.

சமீபத்தில் 18-25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று இருப்பது உறுதியானதால், கல்லூரி வளாகங்களிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

HIV
HIV

கல்லூரிகளில் விழிப்புணர்வு, ஆலோசனை மற்றும் ஹெச்.ஐ.வி பரிசோதனை முகாம்களை ஏற்பாடு செய்வது நிறுவனங்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டிருந்தாலும், மாணவர்கள் தங்களின் சம்மதத்தைத் தந்தால் மட்டுமே பரிசோதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்வதை ஊக்குவிப்பது மற்றும் தொற்று உள்ளவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதே இதன் முதன்மை நோக்கம் என அரசு கூறியுள்ளது.

`'Energy Drink' என்ற பெயரை நீக்க வேண்டும்' - ரெட் புல், ஸ்டிங் நிறுவனங்களுக்கு FSSAI உத்தரவு!

'எனர்ஜி ட்ரிங்க்' (Energy Drink) என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படும் பானங்களின் பிராண்டிங்கில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (FSSAI), பெப்சிகோ,... மேலும் பார்க்க

Doctor Vikatan: அடிக்கடி வரும் வாய்ப்புண்... புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமா?

Doctor Vikatan:எனக்கு அடிக்கடி வாய்ப்புண் வருகிறது. சூடான உணவுகளைச் சாப்பிடவே முடிவதில்லை. இதற்கு என்ன காரணம்... வாய்ப்புண், புற்றுநோயாக மாற வாய்ப்பு உண்டா?பதில் சொல்கிறார்இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்... மேலும் பார்க்க

Doctor Vikatan: தூக்கத்தில் பற்களைக் கடிப்பது மனநல பாதிப்பின் அறிகுறியா?

Doctor Vikatan: என்15 வயது மகளுக்கு தூக்கத்தில் பற்களை நறநறவெனக் கடிக்கும் வழக்கம் இருக்கிறது. இப்படிப் பற்களைக் கடிப்பதற்கு மன அழுத்தம் காரணமாக இருக்குமா... இது மனநல பாதிப்பின் அறிகுறியா?பதில் சொல்கி... மேலும் பார்க்க

Doctor Vikatan: எப்போதும் 100-க்கு மேல் இருக்கும் இதயத்துடிப்பு... கவலைப்பட வேண்டிய விஷயமா?

Doctor Vikatan: எனக்கு இதயத்துடிப்புஎப்போதும் 100-க்கு மேல் உள்ளது. இசிஜி எடுத்துப் பார்த்தால் அதில் நார்மல் என்றே காட்டுகிறது. பிளட் பிரஷர் 140 / 100 என உள்ளது. எனக்கு சர்க்கரைநோய் கிடையாது. இந்நிலைய... மேலும் பார்க்க

Doctor Vikatan: 50 ப்ளஸ் வயதில் எலும்புகள் பலவீனமாவதை எப்படித் தடுப்பது?

Doctor Vikatan:என் வயது 50. பொதுவாகவே இந்த வயதுக்குப் பிறகு, குறிப்பாக பெண்களுக்குஎலும்புகள் பலவீனமாகும், எளிதில் உடையும் என்றெல்லாம் சொல்கிறார்கள். எலும்புகள் பலவீனமடைவதைத் தடுக்க நான் என்னவெல்லாம் ச... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஓவர் சுத்தம்... ஓசிடி பிரச்னை... மனநோயா, மீள்வது எப்படி?

Doctor Vikatan: என் 23 வயது மகளுக்கு விசித்திரமான பிரச்னை இருக்கிறது. எப்போதும், எதிலும் அதீத சுத்தம் எதிர்பார்க்கிறாள். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்காவிட்டால் டென்ஷன் ஆகிக் கத்துகிறாள். தன்னுடை... மேலும் பார்க்க