செந்தில் பாலாஜி: டாஸ்மாக் டெண்டர், பார் ஒப்பந்தங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு! ...
'அம்மா உணவகத்தால் சென்னை மாநகராட்சிக்கு 1140 கோடி ரூபாய் இழப்பு!' - முதல்வருக்கு துணை மேயர் மெசேஜ்!
சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய துணை மேயர் மகேஷ், அம்மா உணவகங்களால் ரூபாய் ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

நேரமில்லா நேரத்தின் இறுதியில் பேசிய துணை மேயர் மகேஷ் குமார், `அம்மா உணவகங்களின் மீது இந்த அரசுதான் கவனம் செலுத்துவதைப் போலவும், இவர்களின் வருகைக்குப் பிறகுதான் வருவாய் உயர்ந்திருப்பதைப் போலவும் தோற்றத்தை உண்டாக்குகின்றனர்.
எங்களின் தலைவர் முதல்வராக இருந்தபோது சைதாப்பேட்டையிலுள்ள அம்மா உணவகத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அவற்றை புனரமைக்க உத்தரவிட்டார். அம்மா உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து சென்னை மாநகராட்சி 1445 கோடி ரூபாயை அதற்காக செலவளித்திருக்கிறது. ஆனால், அம்மா உணவகங்கள் மூலம் 305 கோடி ரூபாய் மட்டும்தான் வருவாயாக வந்திருக்கிறது.
மாநகராட்சிக்கு 1140 கோடி இழப்புதான் ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் சென்னை மாநகராட்சிக்கு மட்டும் அம்மா உணவகத்தால் 90 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி ஆணையர் சமீரன் முதல்வரிடம் பேசி அம்மா உணவகத்துக்கென்று கூடுதல் நிதியை வாங்கித் தர வேண்டும்' என்றார்.













