செய்திகள் :

கோவை மெட்ரோ: `அனுமதி கிடைக்காததற்கு முறையான திட்ட அறிக்கை தயாரிக்காததே காரணம்!’ – வானதி சீனிவாசன்

post image

பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதை சிலர் நமது இரு நகரங்களுக்கும் எதிரான தீர்ப்பாக சித்தரிக்க முயல்கின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறான புரிதலாகும். கடந்த ஆண்டு DPR திருப்பி அனுப்பப்பட்டபோதும் ஏற்கனவே நான் கூறியதுபோல, தீர்வு என்பது நமது திட்ட அறிக்கைகள் மற்றும் ஆவணங்களில் உள்ள தொழில்நுட்ப மற்றும் கொள்கை குறைபாடுகளைச் சரிசெய்வதில்தான் உள்ளது. மாறாக உள்கட்டமைப்பு திட்டமிடலை மத்திய அரசு அல்லது பா.ஜ.க-வுக்கு எதிரான அரசியல் முழக்கமாக மாற்றுவதில் இல்லை.

கடந்த 2025 நவம்பரில், MoHUA முதல் DPR-களை முழுமையான ஆய்வுக்குப் பிறகு திருப்பி அனுப்பியது. அப்போது அதில் மக்கள் தொகை, தினசரி பயணிகளின் பயன்பாடு, உயர்மட்ட நிலையங்கள் அமைப்பதில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்ட முக்கியமான குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன. ஆனால் இதற்குப் பிறகு, மீண்டும் கடந்த மே மாதத்தில் மாநில அரசு திருத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் சமர்ப்பித்தது.

ஆனால் ஏற்கனவே கூறப்பட்ட பிரச்சினைகள் எதுவும் சரிசெய்யப்படவில்லை. இதன் அடிப்படையில், கோவை மற்றும் மதுரையில் Bus Rapid Transit System (BRTS) உள்ளிட்ட பேருந்து மையப்படுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து அமைப்புகளை வலுப்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளது. எனவே தற்போதைய தரவுகள் அடிப்படையில் மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியவில்லை என்பதே அதன் நிலைப்பாடு.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இந்த சூழலில், போபால், இந்தூர், பாட்னா, கொச்சி மற்றும் ஆக்ரா போன்ற நகரங்களில் மக்கள் தொகை தரவுகளை சரியாகப் பயன்டுத்தி, Comprehensive Mobility Plan சமர்ப்பித்தும் தங்களது நகரங்களின் மெட்ரோ திட்டங்களுக்கான ஒப்புதலைப் பெற்றன. ஆனால் கோவைக்கான சரியான திட்டமிடலை வெளிப்படுத்தும் வகையில் முறையான DPR தயாரிக்கப்படவில்லை. நடைமுறைக்கு ஏற்ற Origin-Destination தரவுகள் பயன்படுத்தப்படவில்லை.

நமது சாலைகளின் உண்மையான அகலத்தை கொண்டு பாதை அமைப்புகள் வடிவமைக்கப்படவில்லை. எந்தப் பொறியாளரும் ஆய்வுக்குழுவின் முன் நியாயப்படுத்த முடியாத யூகங்களின் அடிப்படையில்தான் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. மேலும், நாடாளுமன்றத்திலும் இந்த DPR-களில் குறிப்பிட்ட தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பது பதிவு செய்யப்பட்டது.

மத்திய பா.ஜ.க. அரசு சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது முதல், தமிழ்நாட்டில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே முதலீடுகள் வரை, மாநிலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. மெட்ரோ ரயில் பாலிசியின்கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள மக்கள்தொகை, பயணிகள் பயன்பாடு, பொறியியல் சாத்தியக்கூறு மற்றும் பொருளாதார சாத்தியக்கூறு ஆகிய அளவுகோல்களை பூர்த்தி செய்யும் எந்தப் பொதுப் போக்குவரத்து திட்டத்திற்கும் மத்திய அரசு முழுமையான ஆதரவை வழங்கத் தயாராகவே உள்ளது.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

எனவே போபால், இந்தூர், பாட்னா, கொச்சி மற்றும் ஆக்ரா போன்ற நகரங்களுக்கு மெட்ரோ திட்டத்தை பெற்றுத்தந்த அதே ஒழுங்குமுறையுடன் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு முந்தைய DPR-களில் ஏற்பட்ட தவறுகளைச் சரிசெய்து தற்போதைய Comprehensive Mobility Plan-ஐ அடிப்படையாகக் கொண்டு, Local Planning Area மற்றும் Urban Agglomeration மக்கள் தொகைத் தரவுகளின் அடிப்படையில் DPR-களை மறுசீரமைக்க வேண்டும். மேலும் 20 லட்சம் மக்கள்தொகை அளவுகோலுக்கு ஏற்ப உண்மையான தரவுகளுடன் அறிக்கையும், பொறியியல் வடிவமைப்புகள், பயணிகளின் எண்ணிக்கை, பயண நேரச் சேமிப்பு ஆகியவற்றை மீண்டும் மறுக்க முடியாத ஆய்வாக DPR தயாரித்து அனுப்பி மதுரை, கோவை மக்களின் மெட்ரோ ரயில் போக்குவரத்து கனவினை நனவாக்க முழு முயற்சி எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி: டாஸ்மாக் டெண்டர், பார் ஒப்பந்தங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு! - FIR விவரங்கள்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் IAS உள்ளிட்ட 7 பேர் மீது டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும... மேலும் பார்க்க

'கொசுவை திமுகக்காரனா லாரியில கடத்திட்டு வரான்?' - திமுக கவுன்சிலர் கலகல

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் நடந்திருந்தது. இதில் பேசிய 181 வது வார்டு திமுக கவுன்சிலர் விஸ்வநாதன் 'எதற்கெடுத்தாலும் திமுக மீது பழி போடுகிறார்கள்!' என நகைச்சுவையாக பேச... மேலும் பார்க்க

`மேட்டூர் திறக்காததால் கடும் வறட்சி; ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும்!' - ஜி.கே.வாசன்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் த.மா.க-வின் டெல்டா மண்டல செயல்வீரர்கள் கூட்டம், அதன் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் என்.ஆர்.ரெங்கராஜன், சுரேஷ் மூப்பனார் உள்ளிட்ட பலர் கலந்துகொண... மேலும் பார்க்க

'அம்மா உணவகத்தால் சென்னை மாநகராட்சிக்கு 1140 கோடி ரூபாய் இழப்பு!' - முதல்வருக்கு துணை மேயர் மெசேஜ்!

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய துணை மேயர் மகேஷ், அம்மா உணவகங்களால் ரூபாய் ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறியி... மேலும் பார்க்க

மக்களவையில் நிறைவேறிய தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா 2026 - விவரம் என்ன?

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த 'பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) திருத்த மசோதா 2026', மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறப்பட்டது. பொதுத் தேர்வுகளில் நடக்கும் வினாத்தாள் கசிவு... மேலும் பார்க்க

"ஆந்திராவில் பா.ம.க ; மருத்துவர் ஐயா வாழும் காலத்திலேயே பாமக ஆள வேண்டும்!" - அன்புமணி

மாமல்லப்புரத்தில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூலை.29) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும், பொருளாளராக திலகபாமாவும், பாமக தலைவராக அன்புமணி ராமதாஸும் தேர்வு... மேலும் பார்க்க