செய்திகள் :

"ஆந்திராவில் பா.ம.க ; மருத்துவர் ஐயா வாழும் காலத்திலேயே பாமக ஆள வேண்டும்!" - அன்புமணி

post image

மாமல்லப்புரத்தில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூலை.29) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும், பொருளாளராக திலகபாமாவும், பாமக தலைவராக அன்புமணி ராமதாஸும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

இந்நிலையில் பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி, ``தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிப்பு சட்டமன்றத்திலே ஆளுநர் உரையில் வந்திருக்கிறது என்றால் அதற்கு முழு காரணம் மருத்துவர் ஐயா (ராமதாஸ்) அவர்களும், பாட்டாளி மக்கள் கட்சியும் தான்.

அனுபவம் இல்லாத தவெக அரசுக்கு நாம் ஆக்கப்பூர்வமான ஆலோசனை வழங்கி வருகிறோம். எனக்கு ஈகோ இல்லை. தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது இலக்கு.

பாமகவில் நிரந்தர தலைவர் என யாரும் இல்லை. நம்முடைய கட்சி ஜனநாயகக் கட்சி. இனி பேசும்போது என்னை நிரந்தர தலைவர் என யாரும் குறிப்பிட வேண்டாம். மருத்துவர் ஐயா வாழும் காலத்திலேயே பாமக தமிழ்நாட்டை ஆள வேண்டும்.

2031-ல் பாமக ஆட்சி அமைக்கும் வகையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும். இன்னும் ஒரு சில மாதங்களில் ஆந்திராவில் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படும்.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

மக்கள் அங்கு அவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள். வருகின்ற சனிக்கிழமை பனையூரில் 100 முக்கிய நபர்கள் வந்து சந்திக்க இருக்கிறார்கள். மூன்று மாதங்களாக வேலை நடந்துக்கொண்டிருக்கிறது. அடுத்தக் கட்டத்திற்கு இதனை நாம் எடுத்து செல்லவேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

மக்களவையில் நிறைவேறிய தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா 2026 - விவரம் என்ன?

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த 'பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) திருத்த மசோதா 2026', மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறப்பட்டது. பொதுத் தேர்வுகளில் நடக்கும் வினாத்தாள் கசிவு... மேலும் பார்க்க

NEET 2026 முறைகேடு: 13 கைது, 360 சாட்சிகளுடன் குற்றப்பத்திரிகை - CBI சொல்வது என்ன?

டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கி கடந்த ஒரு மாதமாக இந்தியாவையே உலுக்கி எடுத்தப் போராட்டம், 'நீட் வினாத்தாள் கசிவிற்கு எதிரான காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம்'.இந்தப் போராட்டத்தின் வெற்றியாக கடந்த சனிக்க... மேலும் பார்க்க

'ஆர்த்தோ டாக்டர்களுடன் சட்டமன்றத்தை நடத்த வேண்டியிருக்கும்!' - முதல்வரை எச்சரித்த திமுக கவுன்சுலர்!

சென்னை ரிப்பன் பில்டிங்கில் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் அதியமான் முதல்வர் விஜய்யை எச்சரிப்பதை போல பேசியிருந்தார்.மாமன்ற கூட்டம்நேரமில்லா நே... மேலும் பார்க்க

'சென்னை மாநகராட்சியில் அம்பேத்கர் படம் ஓரங்கட்டப்பட்டதா?' - மனம் வருந்திய விசிக கவுன்சிலர்!

சென்னை மாநகராட்சியின் ரிப்பன் பில்டிங்கில் ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் விசிக கவுன்சிலர் கோபிநாத், மாநகராட்சி மாமன்ற அரங்கில் அம்பேத்கர் படம் ஓரங்கட்டப்படுவதா... மேலும் பார்க்க

`இளைஞர்களின் கருத்தை முட்டாள்கள் கேட்பதில்லை; அமித் ஷா அவைக்கு வராதது ஏன்?'- நாடாளுமன்றத்தில் ராகுல்

நாடாளுமன்றத்தில் பொதுத்தேர்வு திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "அமித் ஷா அவைக்கு வராதது ஏன்? அவருக்கு துணிச்சல் இல்லையா? நீட் ... மேலும் பார்க்க

மன்னார்குடி: டி.ஆர்.பாலு மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாகவா?

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 41 இடங்களில் இன்று ஊழல் தடுப்புமற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.இந்தச் சோதனையின் ஒரு பகுதியாக தி... மேலும் பார்க்க