செய்திகள் :

'மீண்டும் ஒன்று சேரலாம் வா...' - விவாகரத்தான மனைவியை அழைத்துச் சென்று கொன்று புதைத்த கணவன்!

post image

பஞ்சாப் மாநிலம், பாசில்கா மாவட்டத்தைச் சேர்ந்த சரோஜ் (42) என்ற பெண் தனது கணவர் குர்மீத் சிங்கிடமிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று தனது பெற்றோருடன் வசித்து வந்தார். குர்மீத் சிங் திடீரென தனது முன்னாள் மனைவியிடம் பேசி மீண்டும் சேர்ந்து வாழலாம் என்றும், சமரசம் பேச நேரில் வருமாறு கேட்டுக்கொண்டார். அவரது பேச்சை நம்பிய சரோஜ் அவர் அழைத்த இடத்திற்கு சென்றார். பாசில்கா மாவட்டத்தில் உள்ள ஜண்ட்வாலா மீரா சங்லா கிராமத்தில் புதர்களுக்கு அருகில் உள்ள ஒதுங்கிய பகுதிக்கு குர்மீத் தனது முன்னாள் மனைவியை அழைத்துச் சென்றார்.

அங்கு கூரிய முனைகள் கொண்ட ஆயுதத்தால் சரோஜை கொன்றுவிட்டு உடலை வயல்வெளியில் புதைத்துவிட்டார். இக்கொலையின் போது சரோஜ் சத்தம் கேட்டு அருகில் ஆடு மேய்க்கும் ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் வருவதை பார்த்த குர்மீத் அவசர அவசரமாக சரோஜ் உடலை புதைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். ஆடு மேய்ப்பவர் இது குறித்து கிராம மக்களுக்கு தகவல் கொடுத்தார். உடனே கிராம மக்கள் போலீஸாரின் துணையோடு சரோஜ் உடலை தோண்டி

எடுத்தனர். அதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் பின்னர் கைது செய்யப்பட்டார். கொலை செய்யப்படுவதற்கு முன்பு இரண்டு பேரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர். அவர்கள் ஒற்றுமையாக இருப்பது போன்று காட்டிக்கொண்டனர். கைது செய்யப்பட்ட குர்மீத்திடம் என்ன காரணத்திற்காக கொலை செய்தார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சிவகாசி: திருமணம் மீறிய உறவு; 3 வயது பெண் குழந்தையை கொன்ற கொடூரன்- நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள சின்னக்கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி என்பவருக்கும் சுவாதி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 வயதில் விஷ்... மேலும் பார்க்க

மார்க்கெட்டிங் நிறுவனத்தில் கொடுமை; வீடியோ வெளியிட்ட விருதுநகர் சிறுவன் - மீட்ட குமரி போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ராமன்பறம்பு பகுதியில் செயல்பட்டு வரும் மார்கெட்டிங் நிறுவனத்தில் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடந்த மார்ச் மாதம் பணிக்கு சேர்ந்துள்ளார். முதலில் மேற்பார்வ... மேலும் பார்க்க

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மாணவிக்குப் பாலியல் தொல்லை; ஆய்வகப் பொறுப்பாளர் போக்சோவில் கைது

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ள சேர்க்காட்டில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் ஆய்வகப் பொறுப்பாளராக காட்பாடி கீழ்வடுகன்குட்டை பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன்... மேலும் பார்க்க

திருடு போன ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள்; CCTV-யால் சிக்கிய எலி; இன்ஸ்டாவைக் கலக்கிய திருட்டு!

கர்நாடகா மாநிலம் துமகுரு என்ற இடத்தில் நகைக்கடை வைத்திருப்பவர் விஷ்வாஸ். இவர் முதல் நாள் இரவு கடையை அடைத்து மறுநாள் வந்து கடையைத் திறந்து வியாபாரத்தைக் கவனித்தபோது கடையிலிருந்த வைரக்கல் பதித்த தங்க ஆப... மேலும் பார்க்க

இளையான்குடியில் போதை பொருள் தயாரிப்பு ஆய்வகம் கண்டுபிடிப்பு - கடத்தலில் ஈடுபட்ட 10 பேர் கைது!

ராமநாதபுரம் காவல்துறையின் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கடந்த 27-ம் தேதி கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ராமநாதபுரம் நகராட்சி குடிநீர் தொட்டி அருகே திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மார்த்... மேலும் பார்க்க

உருளைகிழங்கு மூடைகளுடன் கடத்தி வரப்பட்ட கஞ்சா பார்சல்கள் - 3 பேரை கைது செய்த க்யூ பிரிவு போலீஸ்!

சமீப காலமாக தமிழக கடலோர பகுதிகளில் இருந்து கஞ்சா, வலி மாத்திரைகள் மற்றும் மெத்தமைன், ஐஸ் போன்ற போதை மருந்துகள் இலங்கைக்கு கடத்தி செல்லப்படுவது அதிகரித்து வருகிறது. கடற்பரப்பில் நடைபெறும் கடத்தல் சம்பவ... மேலும் பார்க்க