செய்திகள் :

கபினி அணை நீர்மட்டம் உயர்வு; தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்த கர்நாடகா!

post image

தமிழ்நாட்டிற்கு, கர்நாடகாவிலிருந்து காவிரி நீர் தற்போது திறந்துவிடப்பட்டிருக்கிறது. கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடகாவின் குடகு மாவட்ட காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாகக் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Kabini Dam
Kabini Dam

அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையை அடைந்துள்ளதால் தமிழ்நாட்டிற்கு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே காவிரி நீர் பகிர்வு தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்து வரும் சூழலிலேயே இந்த நீர் திறப்பு நிகழ்ந்துள்ளது.

மேலும், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் உத்தரவு மற்றும் கர்நாடகாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

DK Shivakumar
DK Shivakumar

ஆனால், அதற்கு முன்பாகவே தமிழ்நாட்டிற்கு நீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. கனமழை காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்ததால், கபினி அணையில் இருந்து கர்நாடகா சுமார் 10,000 முதல் 12,000 கனஅடி தண்ணீரைத் திறந்துவிடத் தொடங்கியுள்ளது.

"தீண்டாமைச் சுவரை உடனே அகற்றுங்கள்" - அமைச்சர் ராஜ்மோகன் காலில் விழுந்து கெஞ்சிய நபர்; என்ன நடந்தது?

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் அருகில் உள்ள சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் 22-வது ஆண்டு புத்தக கண்காட்சி ... மேலும் பார்க்க

`நாளையிலிருந்து கோழி இறைச்சி கிடைக்காதா?' - கோழி வணிகர்களின் கூட்டமைப்பு சொல்வது என்ன?

தஞ்சையில் கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் ஒரு வார காலத்திற்கு கோழி இறைச்சி விற்பனையை முழுமையாக நிறுத்தி போராட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பள்ளி அருகில் வடாபாவ், சமோசா விற்க தடை; பிறந்தநாளில் சாக்லேட் வழங்கவும் கட்டுப்பாடு

மகாராஷ்டிராவில் புதிய உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக துகாராம் முண்டே பதவிக்கு வந்த பிறகு மாநிலம் முழுவதும் உணவகங்களில் அதிரடி ரெய்டு நடத்தி வருகிறார். மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப்பில்... மேலும் பார்க்க

தமிழக அரசின் உத்தரவை மீறி கர்நாடகாவுக்கு கனிமங்கள் கடத்தல்; வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்!

அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்களை கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு மூன்று மாதங்களுக்கு தற்காலிகத் தடை விதித்துள்ளது கேரளா, கர்நாடக அரசுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனிமம் கடத்திய வாகனங்கள் பறிமுதல... மேலும் பார்க்க

'ரயில் நிலையத்திற்குச் சென்று தட்கல் டிக்கெட் எடுப்பவரா நீங்க?' - இனி ஆகஸ்ட் 1 முதல் டோக்கன் நடைமுறை

வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்குப் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. என்ன நடைமுறை? இனி பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் டிக்கெட் புக் செய்ய நீண்ட நே... மேலும் பார்க்க

`முதல்வர் விஜய் குறித்து பேசினால் நடவடிக்கை; அதே சீமான் பற்றி பேசினால் இல்லையா?' - நீதிமன்றம் கேள்வி

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் ஒன்றை செய்திருந்தார். அதில், `நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் மு.... மேலும் பார்க்க