செய்திகள் :

தஞ்சை: வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது காஸ் வெடித்த விபத்து - 3 பேர் உயிரிழப்பு!

post image

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள சின்னஅம்மன்குடி, லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகையன் (51) விவசாயி. இவரது மனைவி செல்வி (41) இவர்களது மகள் அபிநயா 10ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டின் முன்பகுதியில் கீற்றுக்கொட்டகை அமைத்து அதில் சமையல் செய்து வந்துள்ளனர். கடந்த 30ம் தேதி இரவு மூவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் கீற்றுக்கொட்டகை தீ பிடித்து எரிந்துள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட வீடு

தூக்கத்தில் இருந்தவர்கள் கண் விழித்து கீற்றுக் கொட்டகை எரிவதை கண்டு அதிர்ச்சியில் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்க வீடுகளில் இருந்தவர்கள் ஓடி வந்து மூவரையும் பாதுகாப்பாக வெளியே மீட்டனர். அத்துடன் தீயை அணைக்க முயன்றனர். இந்த படபடப்பில் சமையலுக்கு பயன்படுத்திய காஸ் தீ பிடித்த கொட்டகையில் இருந்ததை கவனிக்கவில்லை. இந்நிலையில் தீயில் காஸ் வெடித்து சிதறியது.

இதில் முருகையன் மனைவி செல்வி, மகள் அபிநயா, தீயை அணைக்க முயன்ற அப்பகுதியை சேர்ந்த காசிநாதன், ராஜசேகர், பழனிவேல், வேம்பையன், கலையரசி, புவனேஷ், செல்வராஜ், காளியம்மாள் உள்ளிட்ட பத்து பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்றனர்.

தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக், எஸ்.பி.,சுந்தரவதனம் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் பார்வையிட்டனர். மாவட்ட ஆட்சியர் ரேவதி சிகிச்சையில் இருப்பவர்களை நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார். இந்த விபத்து குறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிவேல், காசிநாதன், வேம்பையன் ஆகிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. காஸ் வெடித்த விபத்தில் ஒரே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மழை வெள்ளத்தில் சென்ற கார்: மரத்தை பிடித்து உயிர் தப்பிய கணவர், இழுத்துச்செல்லப்பட்ட மனைவி, மகள்கள்

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. அஹில்யாநகர் மாவட்டத்தின் லோனி என்ற இடத்திற்கு அவினாஷ் என்பவர் தனது மனைவி ... மேலும் பார்க்க

மும்பை: 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; 9 பேர் உள்ளே சிக்கி உயிரிழந்த சோகம்!

மும்பை அருகில் உள்ள பீவாண்டி என்ற இடத்தில் 4 மாடிகள் கொண்ட கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. ஏற்கெனவே பீவாண்டி மாநகராட்சியால் ஆபாயகரமான கட்டடம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் ... மேலும் பார்க்க

நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து; சிலிண்டர் வெடித்ததில் தீயை அணைத்தவர்கள் உட்பட 10 பேர் காயம்!

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள சின்னஅம்மன்குடி, லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகையன் (51) விவசாயி. இவர் மனைவி செல்வி (41), இவர்களது மகள் அபிநயா 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள... மேலும் பார்க்க

உத்தரகாண்ட்: ரூ.16 கோடியில் கட்டப்பட்ட பாலம்; திறக்கப்பட்ட 16 நாள்களில் சேதம்; அதிர்ச்சியில் மக்கள்

வடமாநிலங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது அல்லது கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களில் இடிந்துவிழுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அது போன்ற ஒரு சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந... மேலும் பார்க்க

சிக்கிம் சுரங்கப்பாதை நிலச்சரிவு: சுரங்கத்தில் சிக்கிய 25 பேர்; 10 பேர் பலி? - தலைவர்கள் இரங்கல்

சிக்கிம் மாநிலத்தின் நாமச்சி மாவட்டத்தில் உள்ள சமர்துங் பகுதியில், 'என்ஹெச்பிசி டீஸ்டா கட்டம் VI' நீர்மின் திட்டத்திற்காக 'ADIT-3' என்ற சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், நிலச்ச... மேலும் பார்க்க

கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து; தீக்கிரையான வீடுகள்; நடந்தது என்ன?

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகர் பகுதியில் 4 லைன் ஓட்டு வீடுகள் உள்ளன. இதில் தமிழர்கள் மற்றும் வட மாநிலத்தவர்கள் குடியிருந்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 10 மணியளவில் நாகராஜ... மேலும் பார்க்க