செய்திகள் :

மீண்டும் செயல்படத் தொடங்கிய அறக்கட்டளை; அடுத்த வருஷம் திருமணம்? - ‘பரம்பொருள்’ மகா விஷ்ணு அப்டேட்

post image

சூப்பர் டீலக்ஸ், எனிமி, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா, ரோமியோ முதலான படங்களில் நடித்த மிருணாளினி ரவி ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவுடனான தனது காதலை நேற்று அறிவித்தார்.

‘உன்னை நேசிப்பது கடைசியில் என்னையே  நான் நேசிப்பது போல’ என அவர் வெளியிட்டிருந்த பதிவுக்கு வாழ்த்துக்களைச் சொல்லி ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் பள்ளி ஒன்றில் தன்னம்பிக்கை பேச்சு பேசுவதாகச் சொல்லி சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியதையடுத்து கைதுசெய்யப்பட்டவர் மகா விஷ்ணு.

தொடர்ந்து அவருடைய ட்ரஸ்ட் குறித்தும், அந்த ட்ரஸ்டுக்குப் பணம் எப்படி வருகிறது என்பன குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியானது நினைவிருக்கலாம்.

மகா விஷ்ணு

கடைசியில் ட்ரஸ்ட்டை மூடுவதாக அறிவித்தார் மகா விஷ்ணு. அதன் பிறகு அவர் குறித்த தகவல் எதுவும் வெளியாகாத நிலையில்தான் தற்போது மிருணாளினியுடனான காதல் செய்தி வந்துள்ளது.

இந்த நிலையில் பரம்பொருள் அமைப்பில் நிர்வாகிகளாக இருந்த சிலரிடம் பேசினோம்.

‘’மகா விஷ்ணு கைதைத் தொடர்ந்து பரம்பொருள் சேனலைத்தான் முடக்கி வச்சிருந்தோம். சாரிடபிள் ட்ரஸ்ட் இயங்கிட்டுதான் இருந்தது. வெளியில தப்பும் தவறுமா எங்களைப் பத்தி பல தகவல்கள் வெளியாகிட்டிருந்ததால் கொஞ்ச நாளைக்கு அமைதியா இயங்கலாம்னு முடிவு செய்து வழக்கமான எங்களுடைய பணிகளைச் செஞ்சிட்டிருந்தோம்.

மகா விஷ்ணு - MahaVishnu

இப்ப சேனலும் பழையபடி இயங்கத் தொடங்கிடுச்சு. கடந்த மாதம் 2ம் தேதியில இருந்து முழுவீச்சில் செயல்படத் தொடங்கியிருக்கோம்’ என்ற அவர்களிடம், மகாவிஷ்ணுவின் காதல் குறித்தும் கேட்டோம், 

‘அதுதான் சம்பந்தப்பட்டவங்களே உலகத்துக்கு அறிவிச்சுட்டாங்களே. அடுத்த வருஷம் திருமணம் செய்யலாம்னு இருக்காங்க’ என்கிறார்கள்.   

`பெத்தி' படப்பிடிப்பின் போது நடந்த விபத்து; கோவை மருத்துவமனையில் நடிகர் ராம் சரணுக்கு அறுவை சிகிச்சை

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண், 'பெத்தி' திரைப்பட படப்பிடிப்பின்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கினார். அவரது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. பின்னர் நடந்த மருத்துவப் பரிசோதனையில் அறுவ... மேலும் பார்க்க

`தங்கம் கடத்தலை மையமாகக்கொண்டு உருவான கலீஃபா' - பிரித்விராஜ், மோகன்லால் படம் ஓணம் பண்டிகைக்கு ரிலீஸ்

பிரித்விராஜ், வைசாக் மற்றும் ஜினு ஆபிரகாம் கூட்டணியில் உருவாகும் சினிமா 'கலீஃபா. ​'பழிவாங்குதல் பொன் எழுத்துக்களால் எழுதப்படும்' என்ற டேக்லைனுடன் உருவாகும் இந்த சினிமாவில், 'மாம்பறக்கல் ஆமிர் அலி' என்... மேலும் பார்க்க

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் 'ஜெகன் மோகினி' குகை; 'குணா குகை'க்கு முன்பே பிரபலமான குகை தெரியுமா?

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைந்ததால் தண்ணீரில் மூழ்கியிருந்த ஜெகன் மோகினி குகை வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. ஒகேனக்கல் கர்நடகாவில் உற்பத... மேலும் பார்க்க

எஸ். ஜானகி: மனித உணர்வுகளுக்குக் குரல் கொடுத்த இசைத் தவசி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

காற்றினிலே வரும் கீதம்...

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

'எந்த மோதலும் இல்லை' - ஜானி மாஸ்டர் பதிவு; நடன சங்கப் பஞ்சாயத்தை தீர்த்து வைத்த சிரஞ்சீவி

தெலுங்குத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடனக் கலைஞர்கள் சங்கத்தில் சமீபத்தில் ஒரு பிரச்னை. அந்தச் சங்கத்தின் தலைவர் நடன இயக்குநர் ஜானி மாஸ்டரின் மனைவி சுமலதா ஆவார். சங்கத்தில் சில நிர்வாகிகளுக்கான தே... மேலும் பார்க்க