ஜந்தர் மந்தர் போராட்டம்: குழந்தைகளை மன்னித்த மோடி; குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்க...
குறைந்தது வெளிநாட்டு முதலீடு வெளியேற்றம் - இந்தியப் பங்குச் சந்தை இறக்கம் இனி குறைந்து ஏற்றம் வருமா?
இந்தியப் பங்குச் சந்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்ற, இறக்கமாகவே இருந்து வருகிறது. இந்தியப் பங்குச் சந்தையின் முக்கியமான குறியீடான நிஃப்டி 26500 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமானது. ஆனால், பிற்பாடு அமெரிக்க இறக்குமதி வரி உயர்வுப் பிரச்னையினால் குறியீடு 22500 என்கிற அளவுக்குக் குறைந்தது. அதன்பிறகு அமெரிக்க - ஈரான் பிரச்னை காரணமாகவும் இந்தியப் பங்குச் சந்தை இறக்கம் கண்டு, தற்போது 24400 என்கிற அளவில் எஃப்.டி குறியீடு வர்த்தகமாகி வருகிறது.

இந்தியப் பங்குச் சந்தையின் இறக்கத்துக்கு இன்னொரு முக்கியமான காரணம், எஃப்.ஐ.ஐ.கள் இந்தியப் பங்குச் சந்தையில் செய்திருந்த முதலீட்டைத் திரும்ப எடுத்துக்கொண்டே இருந்தது. இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றத்தின் போக்கில் இருக்க வேண்டும் எனில், வெளிநாட்டு நிறுவன முதலீடு மிகவும் அவசியம். கடந்த 10, 15 ஆண்டுகளில் இந்தியப் பங்குச் சந்தையின் வளர்ச்சியினால் கிடைத்த லாபத்தை அதிகம் அடைந்தவர்கள் இந்தியர்களைவிட வெளிநாட்டு முதலீட்டாளர்கள்தான் என்று சொல்லலாம்.
எஃப்.ஐ.ஐ.கள் இந்தியப் பங்குச் சந்தையில் தொடர்ந்து வெளியேறுவதற்கு முக்கியமான காரணம், இந்தியாவைவிட பிற ஆசிய நாடுகளில் உள்ள பங்குச் சந்தைகள் மூலம் அதிக லாபம் கிடைத்ததுதான். உதாரணமாக, தைவான், கொரியா நாடுகளில் ஏ.ஐ பங்குகள் மூலம் அதிக லாபம் கிடைத்ததால், இந்தியாவில் இருந்து முதலீட்டை எடுத்து அந்த நாடுகளில் போட்டனர்.
தவிர, இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக கடுமையாக இறக்கம் காணத் தொடங்கியது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக 9 சதவிகிதத்துக்கு மேல் இறக்கம் கண்டது. என்னதான் முதலீட்டின் மதிப்பு உயர்ந்தாலும் டாலரின் ரூபாயின் மதிப்பு குறைவதால், எஃப்.ஐ.ஐ.களுக்குக் கிடைக்க வேண்டிய லாபம் பெருமளவில் குறைந்தது. இந்தக் காரணத்தினாலும் எஃப்.ஐ.ஐ.கள் அதிகளவில் தங்கள் முதலீட்டைத் திரும்பப் பெற்றனர்.
மேலும், அமெரிக்காவில் வட்டி உயர்த்தப்படும் என்கிற எதிர்பார்ப்பினாலும் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து முதலீட்டைத் திரும்ப எடுத்தனர். இந்தியாவில் கஷ்டப்பட்டு 4% லாபம் பார்ப்பதைவிட அமெரிக்காவில் கஷ்டப்படாமல் அதை சம்பாதிக்க முடியும் என்று நினைத்ததாலும் எப்.ஐ.ஐ.கள் அதிகளவில் பணத்தைத் திரும்ப எடுத்தனர்.

எஃப்.ஐ.ஐ.கள் இந்த காலண்டர் ஆண்டில் மட்டும் அதாவது 2026-ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 2.59 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குத் தங்கள் முதலீட்டைத் திரும்ப எடுத்திருக்கின்றனர். இந்த ஆண்டில் எந்தெந்த மாதத்தில் எவ்வளவு முதலீட்டை எஃப்.ஐ.ஐ.கள் விற்றிருக்கின்றனர் என்பதைப் பார்ப்போம்.
ஜனவரி - ரூ.35,961.80 கோடி
பிப்ரவரி - ரூ.22,614.92 கோடி
மார்ச் - ரூ.1,17,774.65 கோடி
ஏப்ரல் - ரூ.60,847.44 கோடி
மே - ரூ.32,963.48 கோடி
ஜூன் - ரூ.49,340.45 கோடி
ஜூலை - ரூ.15,412.06 கோடி
எஃப்.ஐ.ஐ.கள் இந்திய பங்குச் சந்தையில் இதுவரை 12.3 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்திருக்கிறார்கள். அந்த முதலீட்டில் இருந்து கிட்டத்தட்ட ரூ.2.59 லட்சம் கோடியைத்தான் திரும்ப எடுத்திருக்கிறார்கள். அவர்கள் செய்துள்ள முதலீடு ரூ.10 லட்சம் கோடி இன்னும் இந்தியப் பங்குச் சந்தையில் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால், கடந்த மூன்று மாதங்களாக இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து எஃப்.ஐ.ஐ.கள் வெளியேறுவது கணிசமாகக் குறைந்துகொண்டே வருவதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. கடந்த ஏப்ரல் மாதம் வரை மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீட்டைத் திரும்ப எடுத்துவந்த எஃப்.ஐ.ஐ.கள் கடந்த மாதத்தில் அதாவது, ஜூலை மாதத்தில் முதலீட்டைத் திரும்ப பெறுவதைக் குறைத்திருக்கின்றனர். கடந்த ஜூலை மாதத்தில் வெறும் 15,412 கோடி ரூபாய்க்கு மட்டுமே அவர்கள் தங்கள் முதலீட்டைத் திரும்ப பெற்றிருக்கின்றனர். இது இந்த ஆண்டிலேயே இல்லாத அளவுக்குக் குறைவான தொகை ஆகும்.
இதே போக்கு இந்த ஆகஸ்ட் மாதத்திலும் தொடருமா என்பதை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அப்படித் தொடரும் பட்சத்தில் இந்தியப் பங்குச் சந்தை எஃப்.ஐ.ஐ.களின் வெளியேற்றத்தினால் இறங்குவதை நிச்சயம் குறையும். மாறாக, எஃப்.ஐ.ஐ.களின் முதலீடு அதிகரிக்கும் பட்சத்தில் இந்தியப் பங்குச் சந்தை 24400 என்கிற நிலையில் இருந்து ஏற்றம் காணத் தொடங்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஏற்கெனவே இந்திய முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் மாதந்தோறும் ரூ.32000 கோடிக்கு மேல் முதலீடு செய்து வருகிறார்கள். இந்தத் தொகை மாதந்தோறும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த முதலீட்டுத் தொகையும் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் செய்யும் முதலீடும் சேரும்பட்சத்தில், இந்தியப் பங்குச் சந்தை இறக்கம் காண்பதற்கு பதிலாக ஏற்றத்தின் போக்கில் செல்லும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்!
எனவே, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் இதுவரை முதலீட்டை மேற்கொள்ளாதவர்கள் இனி நிச்சயம் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம்!

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யணுமா?
வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டை சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...
வெளிநாட்டில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri
இந்தியாவில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
Labham Youtube Channel: www.youtube.com/@labham_money
Labham Website: https://labham.money/tamil
முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!




















