செய்திகள் :

மதுரை: `என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது' - பாதுகாப்பு கோரி மனு கொடுத்த தவெக எம்.எல்.ஏ

post image

உசிலம்பட்டி தொகுதி தவெக எம்.எல்.ஏ விஜய் மகாலிங்கம் மதுரை மாவட்ட எஸ்பி-யை நேற்று சந்தித்து மனு ஒன்றை வழங்கினார். அதில்,"  தொகுதியில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு, நேரில் சந்திக்கும் நிகழ்வுகளின் போது, சிலர் இடையூறு ஏற்படுத்த முயற்சிப்பதுடன், ஏற்கெனவே நிலவி வரும் முன்விரோதம் மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பழிவாங்கும் நோக்கில் சில சூழ்ச்சிகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதன் காரணமாக எனது உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, நான் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு, மக்களைச் சந்திக்கும் நிகழ்வுகளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில், எனக்கு தனிப்பட்ட காவல் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளர்.  

தவெக எம்.எல்.ஏ விஜய் மகாலிங்கம்

தவெக எம்எல்ஏ-க்களுடனான குதிரை பேர விவகாரத்தில் உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏ விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மதுரையைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

இந்த சூழலில் அரசியல் காழ்புணர்ச்சியால் தன்னை பழி வாங்கும் நோக்கில் சூழ்ச்சி நடைபெறுவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"அடிப்படைப் புரிதல் இல்லாத கூட்டம் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது!"- வெளுத்து வாங்கும் வேல்முருகன்

நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து, கரப்பான் ஜனதா கட்சியினர் நாடுமுழுக்க நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும் சென்னையில் அவர்களது கட்சித் தலைமை அலுவலகத்திலேயே தொடர் போர... மேலும் பார்க்க

"இஸ்ரேலும் கைகோக்கிறது: ஈரான் போருக்கு தயார்; ஆனாலும் நிறுத்துகிறோம்" - ட்ரம்ப் கூறும் காரணம் என்ன?

போர்... போர் நிறுத்தம்... புரிந்துணர்வு ஒப்பந்தம்... போர் நிறுத்தம்... போர்... மூன்று நாள்களுக்கு போர் நிறுத்தம்... மீண்டும் போர் - இது தான் கடந்த 155 நாள்களாக ஈரான் - அமெரிக்கா போரில் நடந்து வரும் சம... மேலும் பார்க்க

"தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள்தான்" - தமிழ்நாடு வந்த ராகுல் காந்தி விமர்சனம்

மாமல்லபுரத்தில் இன்று (ஆகஸ்ட்.1) நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.பிறகு செய்தியாளர்... மேலும் பார்க்க

"என் பதவி பறிக்கப்பட்ட காரணத்தை திமுக தலைமை சொல்லட்டும்" - தோப்பு வெங்கடாசலம்

முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அ.தி.மு.க-வில் இருந்து விலகி‌ ஈரோடு மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளராகப் பதவி வகித்து வந்த நிலையில், அந்தப் பதவியிலிருந்து விடுவிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர்... மேலும் பார்க்க

"’பரிதாபங்கள்’ ட்ரோல் காயப்படுத்துச்சு; ஆனா..." - விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மகன் அக்ஷய்

’சட்டமன்றத்தின் கதவுகளைப் பூட்டுவதாகச் சொல்கிறார்கள், பூட்டிப் பாருங்கள், உங்களது எலும்பை உடைக்கறோம்’ எனப் பொது மேடையில் முதல்வர் விஜய் குறித்து பேசிய விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்க... மேலும் பார்க்க

"இதே நிலை நீடித்தால் உங்களை அதிகாரத்திலிருந்து கீழிறக்குவார்கள்" - மோடியைச் சாடிய பிரகாஷ் ராஜ்

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடிற்கு எதிராக நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியை 15 வயதுடைய சிறுமி அவதூறாகப் பேசியதாக அந்தச் சிறுமி மீது நொ... மேலும் பார்க்க