செய்திகள் :

"என் பதவி பறிக்கப்பட்ட காரணத்தை திமுக தலைமை சொல்லட்டும்" - தோப்பு வெங்கடாசலம்

post image

முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அ.தி.மு.க-வில் இருந்து விலகி‌ ஈரோடு மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளராகப் பதவி வகித்து வந்த நிலையில், அந்தப் பதவியிலிருந்து விடுவிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று காலை அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை செய்தியாளரைச்‌‌ சந்தித்து பேசிய தோப்பு வெங்கடாசலம், "நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் அலை காரணமாக மட்டுமே தி.மு.க ஆட்சியை இழக்கவில்லை. பல தொகுதிகளில் அனைத்தையும் மீறி தி.மு.க வென்றிருக்கிறது.

ஈரோட்டில் இந்த அளவிற்குத் தோல்வியை அடைய காரணம் கட்சிக்குள் நடந்த உள்ளடிதான். தி.மு.க-வைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் சொந்த கட்சிக்குச் சரியாக வேலை செய்யாமல், எதிர்க்கட்சிக்காக வேலை பார்த்தார்கள்.

தோப்பு வெங்கடாசலம்
தோப்பு வெங்கடாசலம்

இது தொடர்பாக ஒன்றிய மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் என்னிடம் புகார் மனுக்களைக் கொடுத்தார்கள். விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு நான் கட்சி மேலிடத்திற்கு அனுப்பி வைத்திருந்தேன். மீண்டும் அ.தி.மு.க-விற்கோ அல்லது தமிழக வெற்றிக் கழகத்திற்குச் செல்லவோ தற்போதைக்கு எண்ணமில்லை.

பதவியிலிருந்து என்னை நீக்கியது எனக்கு நல்லதா... அல்லது கட்சிக்கு நல்லதா என்பதை காலம் பதில் சொல்லும். என்ன காரணத்திற்காக என்னை நீக்கினார்கள் என்பதை தி.மு.க தலைமைதான் சொல்ல வேண்டும். பதவி பறிக்கப்பட்ட உடன் கட்சித் தலைமை குறித்தும் நிர்வாகிகள் குறித்தும் அவதூறாகப் பேசுவது ஏற்புடையதாக இருக்காது" என்றார்.

"’பரிதாபங்கள்’ ட்ரோல் காயப்படுத்துச்சு; ஆனா..." - விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மகன் அக்ஷய்

’சட்டமன்றத்தின் கதவுகளைப் பூட்டுவதாகச் சொல்கிறார்கள், பூட்டிப் பாருங்கள், உங்களது எலும்பை உடைக்கறோம்’ எனப் பொது மேடையில் முதல்வர் விஜய் குறித்து பேசிய விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்க... மேலும் பார்க்க

"இதே நிலை நீடித்தால் உங்களை அதிகாரத்திலிருந்து கீழிறக்குவார்கள்" - மோடியைச் சாடிய பிரகாஷ் ராஜ்

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடிற்கு எதிராக நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியை 15 வயதுடைய சிறுமி அவதூறாகப் பேசியதாக அந்தச் சிறுமி மீது நொ... மேலும் பார்க்க

கோவை எண்​ணெய் குழாய்: ``போராடும் விவசாயிகளைக் கைது செய்வதா?" - தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

பாரத் பெட்​ரோலி​யம் நிறுவனம் சார்​பில் கோவை மாவட்டம் இரு​கூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை 340 கிமீ தொலை​வுக்கு பூமிக்​கடி​யில் எண்​ணெய் குழாய் அமைக்​கும் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கி... மேலும் பார்க்க

கொளத்தூர் EVM அதிர்ச்சி: "பரிசோதிக்கப்பட்ட 3 இயந்திரங்களில் பிரச்னை" - வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ

சென்னை கொளத்தூர் தொகுதியில் இவிஎம் மிஷின்களை ஆய்வு செய்த பொழுது பிரச்னைகள் இருப்பது தெரியவந்துள்ளதாக திமுக-வைச் சேர்ந்த வழக்கறிஞர்என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்... மேலும் பார்க்க

"அவதூறாகப் பேசிவிட்டேன்; இதுதான் கடைசி தவறு" - மோடியிடம் மன்னிப்புக் கேட்ட 15 வயது சிறுமி

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடிற்கு எதிராக நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியை 15 வயதுடைய சிறுமி அவதூறாகப் பேசியதாக அந்தச் சிறுமி மீத... மேலும் பார்க்க

CJP: ``ரீல்ஸில் மட்டும்தான் பிரதமர் மன்னிப்பாரா?" - போராட்ட வழக்குகள் குறித்து அபிஜித் தீப்கே கேள்வி

டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், பிரதமருக்கு எதிராக அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக நொய்டாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி மீது காவல்துறை 'ஜீரோ எஃப்.ஐ.ஆர்' பதிவு செய்தது. ... மேலும் பார்க்க