செய்திகள் :

CWG: காமன்வெல்த் போட்டியில் அடுத்தடுத்து தங்கம்; சாதனை படைத்த ப்ரீத்தி பவார், ஜாஸ்மின்!

post image

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 முதல் நடைபெற்று வருகின்றன.

இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் பங்கேற்றிருக்கின்றனர். இதில், குத்துச்சண்டையில் மட்டுமே 10 இந்தியர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தனர்.

ப்ரீத்தி பவார்
ப்ரீத்தி பவார்

இந்நிலையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் குத்துச்சண்டை பிரிவில் இந்திய வீராங்கனைகள் வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளனர்.

மகளிர் 54 கிலோ எடைப் பிரிவின் இறுதிப்போட்டியில் அபாரமாகச் செயல்பட்ட ப்ரீத்தி பவார், கனடாவின் ஸ்கார்லெட் டெல்கடோவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியிருக்கிறார்.

இவரைத் தொடர்ந்து, மகளிர் 57 கிலோ எடைப் பிரிவின் இறுதிப்போட்டியில் களமிறங்கிய மற்றொரு இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, நடப்பு சாம்பியனான வட அயர்லாந்தின் மைக்கேலா வால்ஷை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தியிருக்கிறார்.

ஜாஸ்மின் லம்போரியா
ஜாஸ்மின் லம்போரியா

ஒரே நாளில் குத்துச்சண்டையில் அடுத்தடுத்து இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று இந்திய அணி காமன்வெல்த் தரவரிசையில் தனது பதக்க வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறது.

தந்தையின் கனவு, மகளின் வரலாறு... ஜூடோவில் இந்தியாவுக்கு முதல் காமன்வெல்த் தங்கம் வென்ற அஸ்மிதா டே!

ஜூடோவில் இந்தியா இதுவரை எட்டாத உச்சத்தை, 23 வயதான அஸ்மிதா டே எட்டியுள்ளார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. மகளிர் 48 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் வரலாற்று நிகழ்வு: கால்பந்து போட்டியில் பிரேசிலை எதிர்கொள்ளும் இந்தியா!

ஐந்து முறை FIFA உலகக் கோப்பையை வென்று உலக கால்பந்தை தன் விரல் நுனியில் ஆட்டி வைக்கும் பிரேசில் அணி, முதன் முறையாக இந்திய ஆண்கள் தேசிய கால்பந்து அணியை, அதிகாரபூர்வ சர்வதேச நட்புப் போட்டியில் எதிர்கொள்ள... மேலும் பார்க்க

காமன்வெல்த்: '11 மாதக் குழந்தையின் அம்மா; PhD மாணவி' - தடைகளைத் தாண்டி சாதித்த சீமா; யார் இவர்?

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் பெண்களுக்கான தட்டு எறிதல் பிரிவில் ஹரியானாவின் சீமா காலிராம்னா பங்கேற்றார். போட்டியில் 58.... மேலும் பார்க்க

“அப்பா லோடுமேன், அம்மா கூலி தொழிலாளி!” - CWG வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டியின் நெகிழ்ச்சி பயணம்

“வெள்ளி பதக்கம் வாங்கியது சந்தோஷம்தான்… ஆனா தங்கத்தை தவறவிட்டுட்டோமேன்னு இன்னும் வருத்தமா இருக்கு. என்னோட அடுத்த இலக்கு ஒன்றுதான்… இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லணும்!”காமன்வெல்த் விளையாட்ட... மேலும் பார்க்க

CWG 2026 : 10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் வரலாற்றுச் சாதனை!

உலக தடகளத்தின் மிகக் கடினமான பிரிவாகக் கருதப்படும் 10,000 மீட்டர் நீண்ட தூர ஓட்டத்தில் இந்தியா புதிய வரலாற்றை எழுதத் தொடங்கியுள்ளது.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆண்கள் 10,000 மீட்டர் ஓட்டத்தில்... மேலும் பார்க்க

ISSF உலகக் கோப்பை : இந்தியாவின் பதக்க வேட்டை; தங்கம் வென்ற ஈஷா சிங்... வெண்கலம் சேர்த்த மனு பாக்கர்!

சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ISSF உலகக் கோப்பை (ரைஃபிள்/பிஸ்டல்/ஷாட்கன்) துப்பாக்கிச் சுடுதல் தொடரில், இந்திய வீராங்கனைகள் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஈஷா சிங் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி... மேலும் பார்க்க