செய்திகள் :

"கர்நாடகம் சென்று காவிரியைக் கையோடு எடுத்து வந்துவிடலாம் என நினைத்தாரோ?" - விஜய்யைச் சாடும் ஸ்டாலின்

post image

மேகதாது விவகாரம் தமிழ்நாடு - கர்நாடகா என இரு மாநிலங்களுக்கிடையேயும் தீவிரமாகி வருகிறது. காவிரி டெல்டா பகுதி நீர் வரத்தின்றி வரண்டுவருகிறது. விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடகா இதுவரை தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடவில்லை. இதற்கிடையில், கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமாரைச் சந்திக்க தமிழ்நாடு முதல்வர் விஜய் ஏற்பாடுகளைச் செய்திருந்த நிலையில், கர்நாடகாவில் தற்போது சூழல் சரியில்லை. எனவே, தமிழ்நாடு முதல்வர் இப்போது வரவேண்டாம் என வெளிப்படையாகச் சொல்லிவிட்டார் டி.கே.சிவக்குமார்.

இதற்கிடையில், தவெக அமைச்சர் நிர்மல் குமார், காவிரி தண்ணீருக்காக தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தை நாடுவது தொடர்பாக ஆலோசித்து வருகிறது எனத் தெரிவித்திருக்கிறார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்த நிலையில், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம்.

கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தோம். தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்த காலத்தில் நாம் பெற்ற படிப்பினை.

உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள். ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ... நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார்.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும், "நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்" என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் எச்சரித்தோம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இனியேனும் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்னையான காவிரி விவகாரத்தை முதலமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும். நமது முதலமைச்சரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதலமைச்சர் அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார். முதல்வர் விஜய் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

"அது காணிக்கையல்ல; அரசியல் சாசன ஆவணம்" - வேளாண் பட்ஜெட்டுடன் திருப்பதி சென்ற அமைச்சர்; சு.வெ கண்டனம்

தமிழ்நாடு அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 6-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வேளாண் துறை அமைச்சர் வினோத் அதன் வரைவு ஆவணத்தை திர... மேலும் பார்க்க

"வழக்கத்தை விட 4 மடங்கு வரை மின்கட்டணம் உயர்ந்துள்ளது" - தவெக அரசுக்கு சீமான் கண்டனம்

200 யூனிட் வரை மின்சார கட்டணம் இலவசம் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தப்போதும் மின் கட்டணம் அதிகமாக வந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மின் கட்டண அதிகரிப்புக்கு அரசியல் தலைவர்கள் தொடர்ந... மேலும் பார்க்க

வேளாண் பட்ஜெட்டுடன் திருப்பதி சென்ற அமைச்சர் விநோத்… சர்ச்சைக்குள்ளான அமைச்சரின் செயல்

தமிழ்நாடு அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 6-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கு முன்னதாக, வேளாண் துறை அமைச்சர் வினோத், வேளாண் பட்ஜெட்டின் வரைவு ஆவணத்தை எடுத்த... மேலும் பார்க்க

டெல்லிக்குப் புகாரளித்த ஸ்டாலின்; 4வது நாளாகச் சரிபார்க்கப்படும் கொளத்தூர் EVM மெஷின்கள்

கொளத்தூர் தொகுதியின் 14 பூத்-களின் EVM மெஷின்களை மீண்டும் சரிபார்த்து பரிசோதனை செய்து கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம். திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த புகாரின் பேரில் இந்தச் செயல்முறை நடத்தப்பட்டு வருகிற... மேலும் பார்க்க

`பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வாங்குவதில் புது ரூல்ஸ்' - மக்களவையில் மசோதா நிறைவேற்றம்; பின்னணி என்ன?

பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்ந்து பல ஆண்டுகள் கழித்துப் பதிவு செய்யும் முறையைக் கடினமாக்கும் வகையில், பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (திருத்த) மசோதா 2026 நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பிறப்பு மற்றும் இறப்... மேலும் பார்க்க

மேகதாது விவகாரம்: 'தமிழ்நாடு அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?' - அமைச்சர் நிர்மல் குமார் பதில்

திருநெல்வேலியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வருகை தந்தபோது, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், ``சுமார் 3,70,000 மின் கட்டணப் புகார்கள் வந்திருப்பதாக தி.ம... மேலும் பார்க்க