செய்திகள் :

"தீண்டாமைச் சுவரை உடனே அகற்றுங்கள்" - அமைச்சர் ராஜ்மோகன் காலில் விழுந்து கெஞ்சிய நபர்; என்ன நடந்தது?

post image

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் அருகில் உள்ள சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் 22-வது ஆண்டு புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நேற்று மாலை தொடங்கி வைத்துள்ளார்.

நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் ராஜ்மோகன் காலில் திடீரென விழுந்த நபர் ஒருவர், "விருதுநகர் மாவட்டத்தில் பட்டியல் சமுதாய குழந்தைகள் கல்வி கற்க தடையாக உள்ள தீண்டாமைச் சுவரை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை மனு அளித்தேன். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் தற்போது ஈரோடு மாவட்டம் வரை வந்து மனு அளிக்கிறேன். தீண்டாமைச் சுவரை அகற்ற உடனடியாக உத்தரவிடுங்கள்" எனக் கோரிக்கையை வலியுறுத்தினார்.

அமைச்சர் ராஜ்மோகன்
அமைச்சர் ராஜ்மோகன்

இது குறித்து அவரிடம் பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன், "ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து நீங்கள் என்னைத் திட்டி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டிருந்தாலும் பரவாயில்லை, குழந்தைகளின் கல்விக்காக நீங்கள் வைக்கும் இந்த நியாயமான கோரிக்கையை நான் ஏற்கிறேன். உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க சொல்கிறேன்" என உறுதியளித்திருக்கிறார்.

கோரிக்கை மனு அளித்த நபர் குறித்தும் விருதுநகர் மாவட்டத்தில் எந்தப் பகுதியில் அந்தத் தீண்டாமைச் சுவர் உள்ளது என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

`நாளையிலிருந்து கோழி இறைச்சி கிடைக்காதா?' - கோழி வணிகர்களின் கூட்டமைப்பு சொல்வது என்ன?

தஞ்சையில் கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் ஒரு வார காலத்திற்கு கோழி இறைச்சி விற்பனையை முழுமையாக நிறுத்தி போராட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பள்ளி அருகில் வடாபாவ், சமோசா விற்க தடை; பிறந்தநாளில் சாக்லேட் வழங்கவும் கட்டுப்பாடு

மகாராஷ்டிராவில் புதிய உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக துகாராம் முண்டே பதவிக்கு வந்த பிறகு மாநிலம் முழுவதும் உணவகங்களில் அதிரடி ரெய்டு நடத்தி வருகிறார். மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப்பில்... மேலும் பார்க்க

தமிழக அரசின் உத்தரவை மீறி கர்நாடகாவுக்கு கனிமங்கள் கடத்தல்; வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்!

அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்களை கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு மூன்று மாதங்களுக்கு தற்காலிகத் தடை விதித்துள்ளது கேரளா, கர்நாடக அரசுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனிமம் கடத்திய வாகனங்கள் பறிமுதல... மேலும் பார்க்க

'ரயில் நிலையத்திற்குச் சென்று தட்கல் டிக்கெட் எடுப்பவரா நீங்க?' - இனி ஆகஸ்ட் 1 முதல் டோக்கன் நடைமுறை

வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்குப் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. என்ன நடைமுறை? இனி பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் டிக்கெட் புக் செய்ய நீண்ட நே... மேலும் பார்க்க

`முதல்வர் விஜய் குறித்து பேசினால் நடவடிக்கை; அதே சீமான் பற்றி பேசினால் இல்லையா?' - நீதிமன்றம் கேள்வி

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் ஒன்றை செய்திருந்தார். அதில், `நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் மு.... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு வழங்கிய அரசு பணி ரத்து! - நீதிமன்றம் கூறியதென்ன?

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கிஉயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க தடை விதிக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தீரன் திருமுருகன் மற்றும் வழக்கறிஞர் சீனி அகமது ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர... மேலும் பார்க்க