செய்திகள் :

Gen Z: "இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லாதீர்கள்" - விமர்சனங்களுக்கு கங்கனா ரனாவத் பதில்

post image

நடிகையும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத், சமீபத்தில் Gen z இளைஞர்களின் போராட்ட முறைகள் மற்றும் வாழ்க்கை முறையை விமர்சித்து பேசிய சில கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தி இருந்தன.

இதனைத்தொடர்ந்து நெட்டிசன்கள் சிலர், 'கங்கனா' திரைப்படங்களில் நடித்த சில கவர்ச்சியான கதாபாத்திரங்களின் காட்சிகளைப் பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்

இந்நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் கங்கனா பதில் கொடுத்திருக்கிறார்.

அதில், "கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு, பலத்த பாதுகாப்புடன் ஒரு நடிகையாக திரைப்படக் கதாபாத்திரங்களில் நான் நடித்த காட்சிகளைப் பயன்படுத்தி, வளரும் இளம் தலைமுறையினரைத் தவறாக வழிநடத்த முயலாதீர்கள்.

திரையில் ஒரு கதாபாத்திரமாக நடிப்பது வேறு; நிஜ வாழ்க்கையில் பள்ளிகளிலோ, பொது வீதிகளிலோ அல்லது மதுபானக் கூடங்களிலோ நடப்பது வேறு.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லாதீர்கள். இன்று நீங்கள் மற்றவர்களின் குழந்தைகளைத் தவறாக வழிநடத்தினால், நாளை அது உங்கள் சொந்தக் குழந்தைகளுக்கே நடக்கும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

Ramayana: "முழுமையான நேர்மையோடு அணுகுவதே எனது பொறுப்பாக இருந்தது" - ராமாயணா இயக்குநர்

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் நடித்திருக்கும் 'ராமாயணா' படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை ரிலீஸாக வருகிறது. திட்டமிடல்களுடன் உலகமெங்கும் இப்படத்தை ரிலீஸ் செய்திடவும் படக்குழு... மேலும் பார்க்க

"நான் அசிங்கமான பெண் என்று கூறி பிரிந்து சென்றார்" - கணவரின் நினைவுகளைப் பகிர்ந்த நடிகை அபராமேத்தா

பாலிவுட் நடிகையும், டிவி நடிகையுமான அபரா மேத்தா பாலிவுட் நடிகர் தர்சன் ஜரிவாலா என்பவரை 1982ம் ஆண்டு திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆனால் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளாமல் கட... மேலும் பார்க்க

"சுருள் முடி கொண்ட சீதையைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை!" - சாய் பல்லவி பற்றி பாலிவுட் நடிகை

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகிவரும் 'ராமாயணா' படத்தின் முதல் பாகத்தை இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்குத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டு வருகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் பிரத்ய... மேலும் பார்க்க

நீட் போராட்டம்: "இளைஞர்களின் சத்தம் புறக்கணிக்க முடியாதது; புறக்கணிக்கவும் கூடாது" - கரீனா கபூர்

டெல்லியில் நீட் முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கரீனா கபூரும் தனது ஆதரவைத் தெரிவித... மேலும் பார்க்க

டெல்லி போராட்டம்: "மாணவர்களின் தைரியமான, துணிச்சலான செயல் இது"- சல்மான் கான் ஆதரவு

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர்... மேலும் பார்க்க

`1000 ஊசிகள் போட்டுக்கொண்டேன்..!' - செயற்கை முறையில் குழந்தை பெற்ற வேதனையைப் பகிர்ந்த பாலிவுட் நடிகை

பாலிவுட் நடிகை தேஜஸ்வினி கோலாபுரே, நடிகர் பங்கஜ் சரஸ்வத் என்பவரை 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு 2015ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை நீண்ட போரா... மேலும் பார்க்க