செய்திகள் :

CWG: வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழ்நாட்டு வீரர்கள்; டிரிபிள் ஜம்ப் போட்டியில் இரண்டு பதக்கங்கள்!

post image

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் டிரிப்பிள் ஜம்ப் இறுதிப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கமும், செல்வ பிரபு திருமாறன் வெண்கலப் பதக்கமும் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றனர்.

ஆடவர் டிரிப்பிள் ஜம்ப் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பிரவீன் சித்ரவேல் 16.58 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும், செல்வ பிரபு திருமாறன் 16.52 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றி இருக்கின்றனர்.

பிரவீன் சித்ரவேல்
பிரவீன் சித்ரவேல்

இந்த வெற்றி எளிதாகக் கிடைத்ததல்ல. முதல் மூன்று முயற்சிகள் முடிவில் பிரவீன் சித்ரவேல் ஐந்தாவது இடத்தில் இருந்தார். பதக்க வாய்ப்பு மங்கியிருந்த நிலையில், நான்காவது முயற்சியில் 16.58 மீட்டர் பாய்ந்து நேரடியாக இரண்டாவது இடத்துக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்.

மறுபுறம், செல்வ பிரபு திருமாறனின் நான்காவது முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனால், ஐந்தாவது முயற்சியில் 16.52 மீட்டர் தாண்டி பதக்கப் பட்டியலில் இடம்பிடித்தார். குறிப்பாக, நியூசிலாந்தின் ஈதன் ஒலிவியரை வெறும் 2 சென்டிமீட்டர் வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளி வெண்கலத்தைக் கைப்பற்றியது போட்டியின் பரபரப்பான தருணமாக அமைந்தது.

பிரவீன் சித்ரவேல்

24 வயதான பிரவீன் சித்ரவேல், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். விவசாயக் கூலித் தொழிலாளியின் மகனான இவர், 2018 கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் கவனம் பெற்றார்.

அதே ஆண்டில் யூத் ஒலிம்பிக்கில் டிரிப்பிள் ஜம்ப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார். தற்போது தேசிய சாதனையாளராகவும், ஒலிம்பியனாகவும் இருக்கும் பிரவீன், ஏற்கெனவே ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம், ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி, FISU உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

செல்வ பிரபு திருமாறன்
செல்வ பிரபு திருமாறன்

செல்வ பிரபு திருமாறன்

மதுரையைச் சேர்ந்த செல்வ பிரபு திருமாறனும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவரே. 2022 உலக ஜூனியர் (U-20) தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற இவர், பின்னர் ஆசிய தடகள சங்கத்தின் சிறந்த 20 வயதுக்குட்பட்ட ஆண் வீரர் விருதையும் பெற்றார்.

அமெரிக்காவின் கான்சாஸ் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று வரும் அவர், இந்த ஆண்டின் NCAA Division I வெளிப்புற தடகள சாம்பியன்ஷிப்பிலும் பட்டம் வென்று, 17 மீட்டர் தடையைத் தாண்டிய இந்திய வீரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் டிரிப்பிள் ஜம்ப்பில் எல்தோஸ் பால் தங்கமும், அப்துல்லா அபூபக்கர் வெள்ளியும் வென்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து, 2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியிலும் டிரிப்பிள் ஜம்ப்பில் இந்தியா இரண்டு பதக்கங்களை வென்றிருப்பது, இந்தப் பிரிவில் இந்தியா தொடர்ந்து வலுவான அணியாக உருவெடுத்து வருவதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.

CWG: "என் கவலைகளை ChatGPT- உடன் பகிர்ந்தேன்" - டெகாத்லான் போட்டியில் வெண்கலம் வென்ற தேஜஸ்வின் சங்கர்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் டெகாத்லான் (Decathlon) பிரிவில் 7,976 புள்ளிகள் குவித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர். இந்தப் பிரிவில் இந்தியா சார்பில் பதக்கம் வெல்வ... மேலும் பார்க்க

CWG: காமன்வெல்த் போட்டியில் அடுத்தடுத்து தங்கம்; சாதனை படைத்த ப்ரீத்தி பவார், ஜாஸ்மின்!

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் பங்கேற்றிருக்கின்றனர். இதில், குத்துச... மேலும் பார்க்க

தந்தையின் கனவு, மகளின் வரலாறு... ஜூடோவில் இந்தியாவுக்கு முதல் காமன்வெல்த் தங்கம் வென்ற அஸ்மிதா டே!

ஜூடோவில் இந்தியா இதுவரை எட்டாத உச்சத்தை, 23 வயதான அஸ்மிதா டே எட்டியுள்ளார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. மகளிர் 48 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் வரலாற்று நிகழ்வு: கால்பந்து போட்டியில் பிரேசிலை எதிர்கொள்ளும் இந்தியா!

ஐந்து முறை FIFA உலகக் கோப்பையை வென்று உலக கால்பந்தை தன் விரல் நுனியில் ஆட்டி வைக்கும் பிரேசில் அணி, முதன் முறையாக இந்திய ஆண்கள் தேசிய கால்பந்து அணியை, அதிகாரபூர்வ சர்வதேச நட்புப் போட்டியில் எதிர்கொள்ள... மேலும் பார்க்க

காமன்வெல்த்: '11 மாதக் குழந்தையின் அம்மா; PhD மாணவி' - தடைகளைத் தாண்டி சாதித்த சீமா; யார் இவர்?

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் பெண்களுக்கான தட்டு எறிதல் பிரிவில் ஹரியானாவின் சீமா காலிராம்னா பங்கேற்றார். போட்டியில் 58.... மேலும் பார்க்க

“அப்பா லோடுமேன், அம்மா கூலி தொழிலாளி!” - CWG வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டியின் நெகிழ்ச்சி பயணம்

“வெள்ளி பதக்கம் வாங்கியது சந்தோஷம்தான்… ஆனா தங்கத்தை தவறவிட்டுட்டோமேன்னு இன்னும் வருத்தமா இருக்கு. என்னோட அடுத்த இலக்கு ஒன்றுதான்… இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லணும்!”காமன்வெல்த் விளையாட்ட... மேலும் பார்க்க