செய்திகள் :

மின்னஞ்சல் காலத்திலும் மங்காத கையெழுத்துக் கடிதங்கள்; டிரெண்டாகும் 'ஸ்நெயில் மெயில்' - பின்னணி என்ன?

post image

"Typing..." என்ற மூன்று புள்ளிகளைப் பார்ப்பதற்குப் பதிலாக, தபால்காரரின் மணி சத்தத்தைக் கேட்டு கடிதத்துக்காகக் காத்திருக்கும் அனுபவம் மீண்டும் பலருக்குப் பிடித்திருக்கிறது. டிஜிட்டல் உலகின் வேகத்துக்கு நடுவே, மெதுவாகப் பயணிக்கும் 'ஸ்நெயில் மெயில்' ஏன் மீண்டும் கவனத்தை ஈர்க்கிறது?

ஒரு காலத்தில் தொலைதூர உறவுகளையும் நட்புகளையும் இணைத்த பாலமாக இருந்தது கையெழுத்துக் கடிதங்கள். செல்போன், மின்னஞ்சல், வாட்ஸ்அப், சமூக வலைதளங்கள் ஆகியவை வந்த பிறகு, தபால் பெட்டியைத் திறக்கும் பழக்கம் படிப்படியாக மறைந்துவிட்டது. ஆனால், தற்போது அந்த பழக்கம் மீண்டும் உயிர்பெற்று வருகிறது.

'ஸ்நெயில் மெயில்' (Snail Mail) என்பது தபால் துறை மூலம் அனுப்பப்படும் கையெழுத்துக் கடிதங்கள், வாழ்த்து அட்டைகள், புகைப்படங்கள், சிறிய நினைவுப் பரிசுகள் ஆகியவற்றின் பரிமாற்றத்தைக் குறிக்கிறது. வேகமாகச் செல்லும் இணைய உலகுடன் ஒப்பிடும்போது இது மெதுவாகப் பயணிப்பதால், இதற்கு 'Snail Mail' என்ற பெயர் வந்தது.

காலை எழுந்ததும் மொபைல்... இரவு தூங்கப் போறதுக்கு முன்னாடியும் மொபைல்... இதுதான் இப்போ பலருடைய வாழ்க்கை. ஒரு மெசேஜ் அனுப்பின சில நொடிகளில் ரிப்ளை வந்துடும். ஆனா, அதே நேரத்துல ஒரு கடிதத்துக்காக சில நாட்கள் காத்திருக்கிற அந்த சந்தோஷம் வேற லெவல்.

தொடர்ந்து மொபைல் திரையைப் பார்த்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை முறையிலிருந்து சிறிது நேரம் விலகி, மெதுவாக வாழ்வதை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும் இந்தப் போக்குக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. சில நிமிடங்களில் மறைந்து போகும் டிஜிட்டல் செய்திகளுக்கு மாறாக, கையெழுத்துக் கடிதங்கள் பல ஆண்டுகள் நினைவுகளாக பாதுகாக்கப்படுகின்றன.

AI

குறிப்பா Gen Z இளைஞர்களே இந்த டிரெண்டை மீண்டும் கொண்டுவந்திருக்காங்க. வண்ணமயமான காகிதங்கள், ஸ்டிக்கர்கள், சிறிய ஓவியங்கள், பூ இதழ்கள், புகைப்படங்கள் என அலங்கரிச்சு கடிதம் அனுப்புறது இப்போ ஒரு ஹாபியாகவே மாறியிருக்கு.

எல்லாமே உடனுக்குடன் கிடைக்கிற காலத்துல, கொஞ்சம் பொறுமையா காத்திருந்து ஒரு கடிதத்தை வாங்குற அந்த உணர்வு... அது எந்த நோட்டிபிகேஷனாலும் கொடுக்க முடியாத மகிழ்ச்சி. அதனால்தான், மின்னஞ்சல் வேகமா ஓடுற இந்தக் காலத்துல கூட, மெதுவா பயணிக்கும் 'ஸ்நெயில் மெயில்' இன்னைக்கும் பலருடைய மனசுல தனி இடத்தைப் பிடிச்சிருக்கு.

150 வருட தாமதம்; நூலகத்துக்கு திரும்பிய புத்தகம்; அபராதம் எவ்வளவு தெரியுமா? - ஆஸ்திரேலிய சுவாரஸ்யம்

"ஒரு புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்க மறந்துவிட்டேன்!" என்று யாராவது சொன்னால், அது சில நாள்களோ, சில மாதங்களோ தாமதமாக இருக்கலாம். ஆனால், ஆஸ்திரேலியாவின் கடலோர நகரமான கியாமாவில் செயல்பட்டு வரும் கியாமா ந... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பனிச்சரிவு விபத்து: உயிரிழந்த பிரபல மலையேற்ற வீரர்; யார் இந்த நிர்மல் புர்ஜா?

பிரபல மலையேற்ற வீரரான நிர்மல் புர்ஜா பாகிஸ்தானில் உள்ள 'ப்ராட் பீக்' மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன.இந்நிலையில் நிர்மல் புர்ஜா உயிரிழந்துவிட்டதாக 'எலைட் எக்... மேலும் பார்க்க

மும்பை: கடற்கரையோர வீடுகளில் ஆர்வம் - கோடிகளை முதலீடு செய்யும் பாலிவுட் பிரபலங்கள்!

மும்பை பாந்த்ரா பகுதியில் பாலிவுட் பிரபலங்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். பாந்த்ரா கடற்கரை பகுதியான பேண்ட்ஸ்டாண்ட், பாலி ஹில், ஒர்லி, ஜூகு மற்றும் வெர்சோவா பகுதிகளில் பாலிவுட் பிரபலங்கள் கோடிகளை ... மேலும் பார்க்க

Parithabangal: சர்ச்சையான காணொளி; குறிப்பிட்ட காட்சியை நீக்கிய பரிதாபங்கள் டீம் - பின்னணி என்ன?

'பரிதாபங்கள்' யூடியூப் சேனலில் இருந்து வெளிவந்திருந்த 'ஆடி மாத பாவங்கள்' காணொளியில் இருந்த குறிப்பிட்ட பகுதி மட்டும் இணையத்தில் சர்ச்சையாகியிருந்தது. தற்போது அக்காட்சியை மட்டும் 'பரிதாபங்கள்' யூடியூப்... மேலும் பார்க்க

CJP நிறுவனர் அபிஜித்துடன் வீடியோ காலில் பேசிய உத்தவ்; வீட்டுக்கு வருமாறு அழைப்பு!

காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே, டெல்லியில் மாணவர்களை ஒன்று திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தி, மத்திய அரசையே இறங்கி வரச் செய்தார். இப்போராட்டத்தால் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் த... மேலும் பார்க்க

Hockey: காவி கலருக்கு மாறிய இந்திய ஹாக்கி அணி; சர்ச்சைக்கு விளக்கமளித்த நிர்வாகம்!

இந்திய ஹாக்கி அணி இதுவரை நீல கலர் உடையணிந்துதான் விளையாடிக்கொண்டிருந்தது. ஆனால் திடீரென அதன் உடை காவி கலருக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. அடுத்த மாதம் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள எஃப்.... மேலும் பார்க்க