செய்திகள் :

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் 'ஜெகன் மோகினி' குகை; 'குணா குகை'க்கு முன்பே பிரபலமான குகை தெரியுமா?

post image

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைந்ததால் தண்ணீரில் மூழ்கியிருந்த ஜெகன் மோகினி குகை வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

ஒகேனக்கல்
ஒகேனக்கல்

கர்நடகாவில் உற்பத்தி ஆகும் காவிரி ஆறு, தருமபுரி மாவட்டம் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்து மலைகளுக்கிடையே நீர்வீழ்ச்சியாக விழும் ஒகேனக்கல் பகுதி இயற்கை அழகு மிகுந்த முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

இங்கு காவிரியில் குளித்து பரிசலில் பயணம் செய்து, காவிரியில் பிடிக்கப்பட்ட மீன்கள் சுடச்சுட சமைத்து தரப்படுவதால் அவற்றை ருசியாக உண்டு மகிழ்வதற்காக தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநில சுற்றுலப்பயணிகள் திரண்டு வருகிறார்கள்.

ஜெகன் மோகினி குகை
ஜெகன் மோகினி குகை

2000 கன அடிக்குமேல் தண்ணீர் வந்துகொண்டிருந்த ஒக்கேனக்கலில் சமீப நாட்களாகப் போதிய மழை இல்லாததாலும், கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறந்து விடாததாலும் நீர்வரத்து 200 கன அடியாக குறைந்ததால் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பொழிவிழந்து சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றமடையச் செய்து வருகிறது.

அதேநேரம், தண்ணீருக்குள் மூழ்கியிருந்த ஜெகன்மோகினி குகை வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அது என்ன ஜகன்மோகினி குகை? என்று இளைய தலைமுறையினர் கேட்கலாம். கொடைக்கானல் குணா குகைக்கு முன்பே மிகவும் பிரபலமான ஒகேனக்கலில் உள்ள ஜெகன்மோகினிக் குகை ஆகும். இது சமணர் குகைபோல இயற்கையாக அமைந்த குகை அல்ல.

 ஒகேனக்கல்
ஒகேனக்கல்

பேய் படங்கள், மாயாஜாலப் படங்களுக்குப் புகழ்பெற்ற ஆந்திராவைச் சேர்ந்த இயக்குநர் விட்டலச்சார்யா இயக்கி வெளியாகி தென்னிந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடி பரபரப்பை ஏற்படுத்திய ஜெகன் மோகினி திரைப்படத்திற்காக 1978 ஆம் ஆண்டு இங்குள்ள மலைப்பாறையில் உருவாக்கப்பட்டதுதான் இந்தக் குகை.

தண்ணீரில் இதைப் பார்க்கும்போது த்ரில்லான அழகாக இருக்கும். அன்றிலிருந்து இது ஜெகன் மோகினி குகை என்று அழைக்கப்படுகிறது.

ஐவர் பாணி அருவி, மெயின் அருவி, முதலைப்பண்ணை ஆகியவற்றை பரிசலில் சென்று சுற்றிப் பார்க்கும் சுற்றுலாப் பயனிகளை இந்த ஜெகன் மோகினி குகை தற்போது கவர்ந்து வருகிறது.

எஸ். ஜானகி: மனித உணர்வுகளுக்குக் குரல் கொடுத்த இசைத் தவசி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

காற்றினிலே வரும் கீதம்...

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

'எந்த மோதலும் இல்லை' - ஜானி மாஸ்டர் பதிவு; நடன சங்கப் பஞ்சாயத்தை தீர்த்து வைத்த சிரஞ்சீவி

தெலுங்குத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடனக் கலைஞர்கள் சங்கத்தில் சமீபத்தில் ஒரு பிரச்னை. அந்தச் சங்கத்தின் தலைவர் நடன இயக்குநர் ஜானி மாஸ்டரின் மனைவி சுமலதா ஆவார். சங்கத்தில் சில நிர்வாகிகளுக்கான தே... மேலும் பார்க்க

Vikatan Cinema Awards மேடையில் 'South Indian Icon' நடிகை கீர்த்தி சுரேஷ்! | Photo Album

Vikatan Cinema Awards: "அடுத்த படத்துல இருந்து எனக்கு சம்பளம் தரணும்!" - 'சிறை' அக்‌ஷய் குமார் கலகல| Live மேலும் பார்க்க

'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' எஸ்.ஜானகி மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்!

புகழ்பெற்ற பின்னணி பாடகியான எஸ். ஜானகி 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.முதல்வர் விஜய் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், `இந்தியத் திரையிசை உலகில் த... மேலும் பார்க்க