செய்திகள் :

`என் போராட்டங்கள் அண்ணன் விஜய்க்கு தெரிந்திருந்தால்..!’ - தவெகவில் நீக்கப்பட்ட பெண் வழக்கறிஞர்

post image

`அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டுதான் நியமிக்கிறார்கள்' என்று, த.வெ.க-வின் விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், `இணையதளம் வழியாக த.வெ.க-வில் உறுப்பினராக இணைந்தவர் சந்திரமோகன் மனைவி ஞானசௌந்தரி. `எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியும், கட்சியின் கொள்கைகள், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்.

முதல்வர் விஜய்

மேலும் கட்சியின் எந்த நிர்வாகியும் அல்லது உறுப்பினரும் கட்சி சார்பாக அவரிடம் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது' என்று இன்று காலை அறிக்கை வெளியிட்டிருந்தார் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் `குஷி' மோகன்ராஜ்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக த.வெ.க-வில் இருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் வழக்கறிஞர் ஞானசௌந்தரி, அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறார். அதில், `தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிய முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இருப்பினும், என் மனதில் தலைவர் அண்ணன் விஜய் அவர்கள் மீது வைத்துள்ள மரியாதையையும், பாசத்தையும், நம்பிக்கையையும் யாராலும் நீக்க முடியாது. இந்த முடிவு எடுக்கப்பட்ட சூழ்நிலையை எண்ணி நான் மிகவும் வருத்தமடைகிறேன்.

குறிப்பாக, ஒரு பெண்ணாகவும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவளாகவும் நான் மேற்கொண்ட போராட்டங்கள் தலைவர் அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை. அப்படி தெரிவிக்கப்பட்டிருந்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்குமா என்று என் மனதில் கேள்வி எழுகிறது.

விஜய், மோகன்ராஜ்

அண்ணன்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மோகன்ராஜ் இருவரும் நல்ல செயல்பாட்டாளர்கள் என்பதை நான் மதிக்கிறேன். ஆனாலும் ஒரு தலித் பெண்ணாகிய எனக்கு இந்த நிலை ஏற்பட்டிருப்பது மனஉளைச்சலையும், வேதனையையும் தருகிறது. ஆனாலும் என் கொள்கைகளிலும், மக்கள் சேவையிலும் எந்த மாற்றமும் இல்லை. தலைவர் அண்ணன் தளபதி விஜய் அவர்கள் எடுத்துரைக்கும் நல்லாட்சி, சமூகநீதி மற்றும் மக்கள் நலப்பாதையில் என் பயணம் என்றும் தொடரும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வன்னி அரசு!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அண்ணா நகர் என்ற பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி அமைந்துள்ளது. இதனிடையே அப்பகுதியைச் சேர... மேலும் பார்க்க

வாரிய தலைவர் பதவிக்கு 5 'அன்பு பரிசு'கள்; முதல்வருக்கு நெருக்கத்தில் ஜரூராக நடக்கிறதா வசூல் வேட்டை?

'யாராவது லஞ்சம் கேட்டா உங்க அண்ணன் விஜய்யோட ஆட்சி நடக்குதுன்னு சொல்லுங்க...' என முதல்வர் விஜய் கரூரில் பேசியிருந்தார். ஆனால், கோட்டையில் முதல்வரின் நெருக்கமான வட்டத்திலேயே ஒரு முக்கிய புள்ளியின் பெயரி... மேலும் பார்க்க

"தேர்தலுக்கு 5 வருஷம் காத்திருக்க தேவையில்ல; திமுகவுக்கு ஆசை காட்டும் பாஜக.!"- கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் திருப்பத்தூரில் இன்று (ஜூலை. 18) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "என்னுடைய புரிதல் என்னவென்றால் திமுகவுடன், பாஜக பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது. 'தொ... மேலும் பார்க்க

’எவ்வளவு அவதூறு பரப்பினாலும் வைகோவை நேசித்துக் கொண்டே இருப்போம்’ - அமைச்சர் வன்னி அரசு விளக்கம்!

கோவை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் வருத்தமளிக்கின்றது என திருமாவளவன் சொல்லியிப்பது குறித்த கேள்வ... மேலும் பார்க்க

`கரூர் கம்பெனி வேலைக்காரர்கள்போல் நடத்தப்பட்டோம்'- திமுகவிலிருந்து கோவை மாநகராட்சி கவுன்சிலர் விலகல்

கோவை மாநகராட்சி 22 வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு செல்வக்குமார் என்பவர், தி.மு.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “2020 ஆம் ஆண்டிலிருந்து திராவிடன் அறக்கட்டளையைத்... மேலும் பார்க்க

'BC மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் அதிகாரம் இல்லை!' - பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சர்ச்சை பதில்!

ஆணவப்படுகொலைகளுக்கு எதிராகவும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சர்ச்சைக்குரிய... மேலும் பார்க்க