செய்திகள் :

’எவ்வளவு அவதூறு பரப்பினாலும் வைகோவை நேசித்துக் கொண்டே இருப்போம்’ - அமைச்சர் வன்னி அரசு விளக்கம்!

post image

கோவை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் வருத்தமளிக்கின்றது என திருமாவளவன் சொல்லியிப்பது குறித்த கேள்விக்கு, “எங்களுடைய தலைவரின் நிலைப்பாடு தான் என்னுடைய நிலைப்பாடு. எங்கள் தலைவர் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு நாங்கள் கட்டுப்பட கூடியவர்கள். தலைவரின் முடிவில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை” என பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “பள்ளிகளில் வழங்கப்படும் டைரிகளில் சாதி பெயர் கேட்கப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சொல்லி இருக்கிறார். சாதி தொடர்பான அணுகுமுறை, பாகுபாடு இருக்கக் கூடாது. அந்த அடிப்படையில் செயல்படுகிறோம். சமூகநீதி மாணவர் விடுதியில் பல  கோரிக்கைகள் பரிசீலனையில் இருக்கிறது. கோவையில் அம்பேத்கர் சிலை வைக்கப்படுவது குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருடன் பேசி இருக்கிறோம். கோவையில்  அவர் இதை முன்னெடுத்து செய்ய வேண்டும் என சொல்லியிருக்கிறார். மக்களின் விருப்பம் விரைவில் நிறைவேறும்.

வன்னி அரசு
வன்னி அரசு

கோவை இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக நீண்ட காலமாக விடுதலை சிறுத்தைகள் இயக்கம் வலியுறுத்துகிறது. இஸ்லாமிய சிறைவாசிகளின் குடும்பத்தினர், பல்வேறு அமைச்சர்களை சந்தித்து மனுக்கள் கொடுத்திருக்கிறார்கள். முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். எத்தனை பேரை விடுதலை செய்யலாம் என்ற லிஸ்ட் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள், விடுதலை விரைவில் இருக்கும். இரட்டைக் குவளை விவகாரம் தொடர்பாக திராவிட இயக்கங்கள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். இரட்டைக் குவளை முறை எங்காவது இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சொல்லியிருக்கின்றார். தீண்டாமையை கடைப்பிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பழங்குடி மக்களின் வாழ்வாதாரம், அவர்களின் தேவைகள் கோரிக்கைகள் குறித்து மலைப்பகுதியாக சென்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதுவரை எந்த அமைச்சரும் மலைப்பகுதிகளுக்கு சென்றது கிடையாது. நாங்கள் நேரடியாக சென்று கேட்டுக்கொண்டு இருக்கிறோம். சிறப்பு கவனம் எடுக்கும் அரசாக இருக்கும். அண்ணன் வைகோ அவர்களை எப்பொழுதும் நேசிக்க கூடியவர்கள் நாங்கள். அவர் எங்கள் மீது எந்த விமர்சனம், அவதூறு பரப்பினாலும் அவரை நாங்கள் நேசித்துக் கொண்டே இருப்போம்” என்றார்.

சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வன்னி அரசு!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அண்ணா நகர் என்ற பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி அமைந்துள்ளது. இதனிடையே அப்பகுதியைச் சேர... மேலும் பார்க்க

வாரிய தலைவர் பதவிக்கு 5 'அன்பு பரிசு'கள்; முதல்வருக்கு நெருக்கத்தில் ஜரூராக நடக்கிறதா வசூல் வேட்டை?

'யாராவது லஞ்சம் கேட்டா உங்க அண்ணன் விஜய்யோட ஆட்சி நடக்குதுன்னு சொல்லுங்க...' என முதல்வர் விஜய் கரூரில் பேசியிருந்தார். ஆனால், கோட்டையில் முதல்வரின் நெருக்கமான வட்டத்திலேயே ஒரு முக்கிய புள்ளியின் பெயரி... மேலும் பார்க்க

"தேர்தலுக்கு 5 வருஷம் காத்திருக்க தேவையில்ல; திமுகவுக்கு ஆசை காட்டும் பாஜக.!"- கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் திருப்பத்தூரில் இன்று (ஜூலை. 18) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "என்னுடைய புரிதல் என்னவென்றால் திமுகவுடன், பாஜக பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது. 'தொ... மேலும் பார்க்க

`என் போராட்டங்கள் அண்ணன் விஜய்க்கு தெரிந்திருந்தால்..!’ - தவெகவில் நீக்கப்பட்ட பெண் வழக்கறிஞர்

`அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டுதான் நியமிக்கிறார்கள்' என்று, த.வெ.க-வின் விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி சென்னை உயர் நீத... மேலும் பார்க்க

`கரூர் கம்பெனி வேலைக்காரர்கள்போல் நடத்தப்பட்டோம்'- திமுகவிலிருந்து கோவை மாநகராட்சி கவுன்சிலர் விலகல்

கோவை மாநகராட்சி 22 வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு செல்வக்குமார் என்பவர், தி.மு.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “2020 ஆம் ஆண்டிலிருந்து திராவிடன் அறக்கட்டளையைத்... மேலும் பார்க்க

'BC மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் அதிகாரம் இல்லை!' - பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சர்ச்சை பதில்!

ஆணவப்படுகொலைகளுக்கு எதிராகவும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சர்ச்சைக்குரிய... மேலும் பார்க்க