செய்திகள் :

சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வன்னி அரசு!

post image

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அண்ணா நகர் என்ற பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி அமைந்துள்ளது. இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினர் சிலர், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணா நகர் பகுதிக்கு 21 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்தை இயக்கவிடாமல் தடுத்து வந்தனர். இதனால் அண்ணாநகர் பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இது குறித்து, பொதுமக்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தியும், அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை.

இதனிடையே சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசுவிடம் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரது தலையீட்டின் காரணமாக ஜூன் மாதம் முதல் அண்ணா நகருக்கு 21 என்ற பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர்கள் வன்னியரசு மற்றும் சம்பத்குமார் ஆகியோர் கெம்பனூர் பகுதிக்கு வந்து அண்ணாநகர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் அண்ணா நகரில் இருந்து பொதுமக்களுடன் அமைச்சர்கள் இருவரும் பேருந்தில் ஏறி கெம்பனூர் வரை சென்றனர்.

அமைச்சர்கள் வன்னி அரசு, சம்பத் குமார்
அமைச்சர்கள் வன்னி அரசு, சம்பத் குமார்

இதனைத் தொடர்ந்து வன்னியரசு மற்றும் சம்பத்குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் சம்பத்குமார், "அண்ணா நகர் பகுதி மக்களின் நீண்ட கால போராட்டம் மற்றும் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை பின்பற்றும் முதல்வர் எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவார்." என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் வன்னி அரசு "இருபது ஆண்டுகளுக்கு மேலாக அண்ணா நகருக்கு அரசுப் பேருந்து செல்லவில்லை. கடந்த கால அரசுகள் எவ்வித கவலையும் இல்லாமல் அவர்கள் போக்கில் செயல்பட்டார்கள். ஆனால் இன்று போகாத ஊருக்கும், போகாத பேருந்து செல்கிறது என்றால் அது மிகப்பெரிய சாதனை. இது ஒரு நல்ல முன்னெடுப்பு. தொடர்ந்து இது போன்ற செயல்களை செய்ய வேண்டும் என்று என்னை முதல்வர் பாராட்டினார்.

சமூக நல்லிணக்கமே இந்த அரசின் பிரதான செயல்பாடு. அரசு அதிகாரிகள் மக்களுடைய சேவகர்கள். அதிகாரிகள் சாதிய பாகுபாட்டுடனோ, அந்த கண்ணோட்டத்திலோ செயல்படுவார்கள் என்றால் அவர்கள் அரசுப் பணியில் நீடிக்க முடியாது. அதிகாரிகள் அவர்களாகவே அந்தந்த பகுதிகளில் பிரச்னை இருந்தால் முன்வந்து அதனை களைய வேண்டும்” என்றார்.

வாரிய தலைவர் பதவிக்கு 5 'அன்பு பரிசு'கள்; முதல்வருக்கு நெருக்கத்தில் ஜரூராக நடக்கிறதா வசூல் வேட்டை?

'யாராவது லஞ்சம் கேட்டா உங்க அண்ணன் விஜய்யோட ஆட்சி நடக்குதுன்னு சொல்லுங்க...' என முதல்வர் விஜய் கரூரில் பேசியிருந்தார். ஆனால், கோட்டையில் முதல்வரின் நெருக்கமான வட்டத்திலேயே ஒரு முக்கிய புள்ளியின் பெயரி... மேலும் பார்க்க

"தேர்தலுக்கு 5 வருஷம் காத்திருக்க தேவையில்ல; திமுகவுக்கு ஆசை காட்டும் பாஜக.!"- கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் திருப்பத்தூரில் இன்று (ஜூலை. 18) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "என்னுடைய புரிதல் என்னவென்றால் திமுகவுடன், பாஜக பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது. 'தொ... மேலும் பார்க்க

`என் போராட்டங்கள் அண்ணன் விஜய்க்கு தெரிந்திருந்தால்..!’ - தவெகவில் நீக்கப்பட்ட பெண் வழக்கறிஞர்

`அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டுதான் நியமிக்கிறார்கள்' என்று, த.வெ.க-வின் விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி சென்னை உயர் நீத... மேலும் பார்க்க

’எவ்வளவு அவதூறு பரப்பினாலும் வைகோவை நேசித்துக் கொண்டே இருப்போம்’ - அமைச்சர் வன்னி அரசு விளக்கம்!

கோவை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் வருத்தமளிக்கின்றது என திருமாவளவன் சொல்லியிப்பது குறித்த கேள்வ... மேலும் பார்க்க

`கரூர் கம்பெனி வேலைக்காரர்கள்போல் நடத்தப்பட்டோம்'- திமுகவிலிருந்து கோவை மாநகராட்சி கவுன்சிலர் விலகல்

கோவை மாநகராட்சி 22 வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு செல்வக்குமார் என்பவர், தி.மு.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “2020 ஆம் ஆண்டிலிருந்து திராவிடன் அறக்கட்டளையைத்... மேலும் பார்க்க

'BC மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் அதிகாரம் இல்லை!' - பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சர்ச்சை பதில்!

ஆணவப்படுகொலைகளுக்கு எதிராகவும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சர்ச்சைக்குரிய... மேலும் பார்க்க