செய்திகள் :

'இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பொது சிவில் சட்டம் அவசியம்'- எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்

post image

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் பேசியிருக்கிறார்.

1993-ஆம் ஆண்டில் மத அடிப்படையில் கொடுமைகளை அனுபவித்த ஒரு ஹிந்து குடும்பத்தில் வாழ்க்கையை மையமாக வைத்து தஸ்லிமா நஸ்ரின் எழுதிய 'லஜ்ஜா' நாவல், வங்கதேசத்தில் கடுமையான எதிர்ப்பலைகளைக் கிளப்பியது. அதனால் அவர் தனது சொந்த நாட்டை விட்டு வெளியேற நேரிட்டது.

தஸ்லிமா நஸ்ரின்
தஸ்லிமா நஸ்ரின்

அதன் பிறகு, மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் குடியேறிய அவர், 'த்விகண்டிதோ' என்ற தலைப்பில் தனது சுயசரிதை நூலை வெளியிட்டார். இந்தச் சுயசரிதை நூல் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியதுடன், வன்முறை வெடிப்பதற்கும் காரணமாக அமைந்தது.

இதன் விளைவாக அவர் இந்தியாவிலிருந்தும் வெளியேறினார். இந்நிலையில் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் கொல்கத்தா வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். " கடந்த 40 ஆண்டுகளாக பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக நான் குரல் எழுப்பி வருகிறேன்.

இந்தச் சட்டம் நாகரிகமான நாட்டில் மிகவும் அவசியம். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு அந்தச் சட்டம் தேவை. அனைவருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டும். பெண்கள் பெரிய அளவில் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். அந்தப் பாகுபாட்டில் பெருமளவை பொது சிவில் சட்டம் மூலம் நீக்க முடியும்.

தஸ்லிமா நஸ்ரின்
தஸ்லிமா நஸ்ரின்

மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் ஆட்சி என்னை மாநிலத்தில் இருந்து வெளியேற்றியது. அதன் பின்னர் அமைந்த திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி, நான் மேற்கு வங்கம் திரும்ப அனுமதிக்கவில்லை. தற்போது அமைந்துள்ள பாஜக ஆட்சி, நான் மேற்கு வங்கம் திரும்ப அனுமதித்துள்ளது. இந்த வித்தியாசங்களில் கவனம் செலுத்துவதைவிட, நான் மீண்டும் மேற்கு வங்கம் வரமுடிந்ததை கொண்டாட வேண்டும் என்றே கருதுகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

"இடைத்தேர்தலுக்காக வெறியோடு காத்துக் கொண்டிருக்கிறேன்"- சீமான் ஆவேசம்

நாம் தமிழர் கட்சியில் புதிதாக 1,000 பேர் இணையும் நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட். 2) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "நடிகருக்கும் தலைவருக... மேலும் பார்க்க

'நம் விவசாயிகளை கைது செய்த மகாராஷ்டிர அரசிடம் விளக்கத்தை முதல்வர் கேட்க வேண்டும்'- உதயநிதி

காவிரி நீர் பிரச்னை மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக ரயிலில் சென்ற தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகளை மகாராஷ்டிர மா... மேலும் பார்க்க

60,000 பேர் எல்லை தாண்டல், பல உயிரிழப்புகள்... சியூட்டாவில் இப்போது என்ன நிலை?

மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள் சுமார் 60,000 பேர் நுழைந்த சம்பவம், சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல உயிரிழப்புகளுக்கும் கடுமையான மனிதாபிமான நெருக்கடிக்கும் க... மேலும் பார்க்க

கயிறு இழுக்கும் போட்டியில் நிலைத்தடுமாறி விழுந்த அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்; சுதாரித்த காவலர்கள்!

சேலம் மாவட்டம், அம்மாபேட்டை அருகில் உள்ள ஹோலி கிராஸ் தனியார் பள்ளியில் விளையாட்டு விழா போட்டிகள் இன்று நடைபெற்றன. அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்கிற முறையில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமை... மேலும் பார்க்க

நீட் போராட்டம், காவிரி: "அப்பப்பா… எவ்வளவு துரோகங்கள்!" - தயாநிதி மாறன் மறைமுக சாடல்

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நீண்ட கால திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைந்தது. அதன் பின், தவெக உடன் கூட்டணி அமைத்தது காங்கிரஸ். இதன் பிறகு, திமுகவும், காங்கிரஸ் மாறி ம... மேலும் பார்க்க