செய்திகள் :

Nepal: ஒரே கட்டடத்துக்குள் 24 சடலங்கள்; சேற்றுக்குள் உறைந்த உடல்கள் - போராடி மீட்ட மீட்புக்குழு

post image

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் பல கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயிருக்கின்றன. பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில் சிக்கி, இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

தொடர்ந்து மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேபாளத்தின் ரசுவா எல்லைக்கு அருகே அமைந்துள்ள நுவாகோட் மாவட்டத்தின் பெட்ராவதி கிராமத்தில், பெருவெள்ளத்தால் சீறிப்பாய்ந்து வந்த சேறும் சகதியும் பல கட்டிடங்களை அடியோடு மூடியுள்ளன.

நேபாள் வெள்ளம்

அப்பகுதியில் காவல்துறை நடத்திய ட்ரோன் சோதனையின் போது, சேற்று வெள்ளத்தில் மூழ்கியிருந்த ஒரு மூன்று மாடி கட்டிடத்திற்குள் ஒருவரது சடலம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் இருந்து கிடைத்த தகர ஷீட்டுகள், மரக்கட்டைகள் மற்றும் கயிறுகளைப் பயன்படுத்தி, சகதி நிறைந்த ஆபத்தான வழியில் தற்காலிகப் பாதை அமைத்து அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தனர்.

அங்கு சென்ற மீட்புக் குழுவினருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளில் 12 பெண்கள், 11 ஆண்கள் மற்றும் ஒரு சிறுமி என மொத்தம் 24 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் பல உடல்கள் உறைந்துபோன சேற்றுக்குள் புதைந்திருந்ததால், மண்வெட்டி மற்றும் கடப்பாரை கொண்டு கடினமாகப் போராடியே உடல்கள் வெளியே எடுக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட கட்டிடம் பகுராம் அவஸ்தி என்பவருக்குச் சொந்தமானது. அதன் தரைதளத்தில் 'உத்தரகாயா மினி மார்ட்' என்ற அத்தியாவசியப் பொருட்கள் அங்காடி இயங்கி வந்தது.

நேபாள் வெள்ளம்
நேபாள் வெள்ளம்

வெள்ளம் சூழ்ந்தபோது பாதுகாப்பு தேடி மக்கள் இந்த பெரிய கட்டிடத்திற்குள் தஞ்சமடைந்தனரா, அல்லது அங்காடிக்கு வந்த வாடிக்கையாளர்களா, அல்லது வெள்ளத்தின் பெருக்கெடுப்பில் அடித்து வரப்பட்டு கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டனரா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

நுவாகோட் காவல் கண்காணிப்பாளர் பிபின் ரெக்மி, ``நாங்கள் ஆய்வு செய்ய முடிந்த பகுதிகளில் இருந்து மட்டுமே 24 உடல்களை மீட்டுள்ளோம். கட்டிடத்தின் சில பகுதிகளை இன்னும் அடைய முடியவில்லை, அங்கேயும் சோதனைகள் தொடர வேண்டியுள்ளது" என வேதனையுடன் தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் யார் என்பதை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கோவை: அடுத்தடுத்து 20 சிலிண்டர்கள் வெடித்து விபத்து - தீக்கிரையான 50 வீடுகள்!

கோவை நவஇந்தியா பகுதியில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்குவதற்காக அப்பகுதியில் தகரத்திலான தற்காலிக குடியிருப்புகள்... மேலும் பார்க்க

Nepal: `நேபாளத்துக்கு மீண்டும் 72 மணி நேரத்தில் ஆபத்து' - சீனா எச்சரிக்கை | முழு விவரம்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில், அங்கு மற்றொரு இயற்கை பேரிடர் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக சீனா எச்சரித்துள்ளது. நேப... மேலும் பார்க்க

Nepal: ”கடைசியாக எடுத்த போட்டோவை அனுப்பினார்” - அம்மாவைப் பற்றி தகவல் கிடைக்காததால் மகன் வேதனை

கும்பகோணம் நாகேஸ்வரன் வீதியில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்ஸி மூலம் கடந்த 23ம் தேதி தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பாக தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், சிதம்பரம், மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட... மேலும் பார்க்க

கரூர்: லாரிகள் நேருக்கு நேர் மோதல்; இரண்டு டிரைவர்களும் பரிதாபமாக உயிரிழப்பு - குளித்தலை சோகம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலம் திருச்சி -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மயிலாடுதுறை மாவட்டம், சேந்தங்குடியை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் (48). இவர், கரூர் பகுதியில் இருந்து டிப்பர் லாரியில... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: வென்டிலேட்டர் வெடித்து மருத்துவமனையில் தீவிபத்து: 3 குழந்தைகள் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலையில் குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த பிரிவில் வெண்டிலேட்டர் ஒன்று திடீரென வெடித்தது. இதனால் அங்கு தீப்பிடித்துக்கொண்டது. மருத்துவ... மேலும் பார்க்க

கொல்கத்தா: ஹோட்டலில் அதிகாலையில் தீவிபத்து; சிகிச்சைக்கு வந்த 9 வங்கதேசத்தினர் பலியான சோகம்

கொல்கத்தாவில் உள்ள ப்ரீ ஸ்கூல் தெருவில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை 2 மணிக்குத் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. மிகவும் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் இத்தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்து ... மேலும் பார்க்க