செய்திகள் :

மூதாட்டிகள் டார்கெட்; ஆடம்பர வாழ்க்கைக்காக நகை பறித்த காதல் ஜோடி கைது – கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

post image

கோவை வெள்ளலூர் கறிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 30ம் தேதியன்று சரஸ்வதி என்ற மூதாட்டி தனது உறவினர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த கருப்பு நிற முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் அவரருகில் வந்து, ’கிளினிக் எப்போது திறப்பார்கள்?’ எனவும், ’மருத்துவரின் வீடு எங்குள்ளது?’ எனக் கேட்டுள்ளார். மருத்துவரின் வீடு உள்ள திசையை சரஸ்வதி காண்பித்தபோது, திடீரென அவரது கழுத்தில் அணிந்திருந்த சுமார் 4 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.

இதனால் மூதாட்டி கீழே விழுந்த நிலையில், அருகிலிருந்தவர்கள் அவரை பிடிக்க முயற்சித்தும் தப்பிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போத்தனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமரா காட்சி மூலம் நகை பறிப்பிற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கண்டறிந்தனர். மேலும், குற்றவாளிகள் தங்களது அடையாளத்தை மறைப்பதற்காக முகமூடி அணிந்திருந்ததும், வாகனத்தின் பதிவு எண்ணை மறைப்பதற்காக கருப்பு நிற டேப்பை பயன்படுத்தியிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கே.ஜி. சாவடி அருகே உள்ள ஒரு கல்லூரியில் பயிலும் கல்லூரி மாணவனையும், இதற்கு உதவிய அவரது காதலியையும் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் இணைந்து ஆடம்பரமாக வாழ்வதற்காகவும், மாணவனுக்கு இருந்த கடனை அடைப்பதற்காகவும் வயதான பெண்களை குறிவைத்து நகைகளை பறித்தது தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இருவருக்கும் வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

`காலனிக்காரனுங்க உட்கார்ந்ததால் நாற்காலியைக் கொளுத்திட்டேன்’ - முன்னாள் ஊராட்சித் தலைவரின் சாதிவெறி

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் ஒன்றியத்துக்குட்பட்ட கொசவன்புதூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் சந்திரபாபு, வயது 52. இவர் அந்த ஊராட்சியின் முன்னாள் மன்றத் தலைவராக இருந்தவர். தற்போது, இவரின் மனைவி புவனேஸ்வரி க... மேலும் பார்க்க

பள்ளியில் பிரியாணி சண்டை; 4 மணிநேரம் வெயிலில் நிற்க வைத்த ஆசிரியர்? - மாடியிலிருந்து குதித்த மாணவி

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள வித்யா நிகேதன் பள்ளியில் 11வது வகுப்பு படிக்கும் ஜான்வி(16) என்ற மாணவி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார். இதையடுத்து அம்மாணவி அங்குள்ள தனியா... மேலும் பார்க்க

`திருமணம் செய்ததாகக்கூறி தப்ப முடியாது' - சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி

கேரள மாநிலம் ​பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு பகுதியில் 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, 27 வயது இளைஞர் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு மன்னார்க்காடு போலீஸார் போக்ஸோ வழ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: 16 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை - 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கடந்த 30ம் தேதி, தனது பாட்டி ஊரில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு ஏற்கனவே பழக்... மேலும் பார்க்க

சென்னை: காதல் மனைவியைக் கொலைசெய்த கணவன்; போதையில் வெறிச்செயல்!

சென்னை கொளத்தூர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் சரண்ராஜ். கூலித் தொழிலாளி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொளத்தூரில் உள்ள மாவு மில்லில் வேலைப் பார்த்தபோது அங்கு வேலை செய்த முத்துமாரியம்மாளை (38) காதலித... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை: சிக்கிய `4' முடிகளால் திருப்பம்; 17 ஆண்டுகளாக தொடரும் விசாரணை!

குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த சங்கீதா (7) என்ற சிறுமி, 2009ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பாபுநகரில் வசித்து வந்த சங்கீதா பக்கத்து வீ... மேலும் பார்க்க