செய்திகள் :

`காலனிக்காரனுங்க உட்கார்ந்ததால் நாற்காலியைக் கொளுத்திட்டேன்’ - முன்னாள் ஊராட்சித் தலைவரின் சாதிவெறி

post image

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் ஒன்றியத்துக்குட்பட்ட கொசவன்புதூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் சந்திரபாபு, வயது 52. இவர் அந்த ஊராட்சியின் முன்னாள் மன்றத் தலைவராக இருந்தவர். தற்போது, இவரின் மனைவி புவனேஸ்வரி கொசவன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.

இந்த நிலையில், அப்பகுதியில் வசிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த இருவர் சமீபத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்து தலைவர் புவனேஸ்வரிடமும், அவரின் கணவர் சந்திரபாபுவிடமும் பேசிவிட்டுச் சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் அமர்ந்த நாற்காலிகளை தூக்கி வெளியே போட்டு தீ வைத்து எரித்திருக்கிறார் சந்திரபாபு. நாற்காலிகளை எரித்ததை சந்திரபாபுவே தனது செல்போனில் வீடியோ பதிவு செய்திருக்கிறார்.

தீ வைக்கப்பட்ட நாற்காலி

அந்த வீடியோவில் பக்கத்திலிருந்த நபரிடம் பேசும் சந்திரபாபு `காலனிக்காரனுங்க உட்கார்ந்துட்டானுங்க. அதான் நாற்காலியைக் கொளுத்திட்டேன்’ என்று கூறியதோடு, அச்சில் ஏற்ற முடியாத தகாத வார்த்தைகளாலும் பட்டியல் சமூக மக்கள் பற்றிப் பேசுகிறார். சுமார் 2 நிமிடங்கள் நீடிக்கும் அந்த வீடியோவில் நாற்காலி முழுவதுமாக எரிந்து உருகிப்போகிறது.

இந்த வீடியோவை சந்திரபாபுவே சமூக வலைதள பக்கங்களிலும் பதிவு செய்திருக்கிறார். இதனால், அப்பகுதியில் சமூக பதற்றமும் ஏற்படும் அச்சம் உருவானது. இதையடுத்து, `சட்டம் - ஒழுங்கு பாதிப்பு ஏற்படும்’ எனக் கருதிய கிராம நிர்வாக அலுவலர், கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், சந்திரபாபு மீது `வன்கொடுமை’ தடுப்பு சட்டப்பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளியில் பிரியாணி சண்டை; 4 மணிநேரம் வெயிலில் நிற்க வைத்த ஆசிரியர்? - மாடியிலிருந்து குதித்த மாணவி

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள வித்யா நிகேதன் பள்ளியில் 11வது வகுப்பு படிக்கும் ஜான்வி(16) என்ற மாணவி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார். இதையடுத்து அம்மாணவி அங்குள்ள தனியா... மேலும் பார்க்க

மூதாட்டிகள் டார்கெட்; ஆடம்பர வாழ்க்கைக்காக நகை பறித்த காதல் ஜோடி கைது – கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

கோவை வெள்ளலூர் கறிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 30ம் தேதியன்று சரஸ்வதி என்ற மூதாட்டி தனது உறவினர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த கருப்பு நிற முகமூடி அணிந்த அடையாளம் தெ... மேலும் பார்க்க

`திருமணம் செய்ததாகக்கூறி தப்ப முடியாது' - சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி

கேரள மாநிலம் ​பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு பகுதியில் 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, 27 வயது இளைஞர் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு மன்னார்க்காடு போலீஸார் போக்ஸோ வழ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: 16 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை - 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கடந்த 30ம் தேதி, தனது பாட்டி ஊரில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு ஏற்கனவே பழக்... மேலும் பார்க்க

சென்னை: காதல் மனைவியைக் கொலைசெய்த கணவன்; போதையில் வெறிச்செயல்!

சென்னை கொளத்தூர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் சரண்ராஜ். கூலித் தொழிலாளி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொளத்தூரில் உள்ள மாவு மில்லில் வேலைப் பார்த்தபோது அங்கு வேலை செய்த முத்துமாரியம்மாளை (38) காதலித... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை: சிக்கிய `4' முடிகளால் திருப்பம்; 17 ஆண்டுகளாக தொடரும் விசாரணை!

குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த சங்கீதா (7) என்ற சிறுமி, 2009ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பாபுநகரில் வசித்து வந்த சங்கீதா பக்கத்து வீ... மேலும் பார்க்க