செய்திகள் :

TIME100: சென்னை IIT-ல் படித்தவர்... இன்று உலக AI ஆராய்ச்சியின் முக்கிய குரல்! Anima Anandkumar யார்?

post image

சென்னை ஐஐடி-யில் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர், இன்று உலக செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் மிக முக்கியக் குரலாகவும் கவனம் ஈர்க்கும் விஞ்ஞானிகளில் ஒருவராகவும் வலம் வருகிறார். கால்டெக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், அறிவியல் ஆராய்ச்சியில் AI பயன்பாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் ஆய்வாளராகவும் செயல்பட்டு வரும் அனிமா ஆனந்த்குமார், பிரபல 'டைம்' (TIME) வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டுக்கான 'TIME100 AI' பட்டியலில் பெருமையுடன் இடம்பெற்றுள்ளார்.

யார் இந்த அனிமா ஆனந்த்குமார்?

கர்நாடகாவின் மைசூரைச் சேர்ந்த அனிமா ஆனந்த்குமார், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Madras) எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். 2004-ல் தனது பட்டப்படிப்பை முடித்த அவர், பின்னர் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தின் (Cornell University) உயர் கல்வியைத் தொடர்ந்தார். அங்கு முனைவர் பட்டம் பெற்ற பிறகு எம்.ஐ.டி-யில் (MIT) ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார்.

தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் (Caltech) கம்ப்யூட்டிங் அண்ட் மேத்தமேட்டிக்கல் சயின்சஸ் துறையின் பிரென் பேராசிரியராகச் செயல்பட்டு வருகிறார். இதற்கு முன்பு 'அமேசான் வெப் சர்வீசஸ்' (AWS) மற்றும் 'என்விடியா' (NVIDIA) போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களிலும் AI ஆராய்ச்சியில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

அறிவியலுக்காக AI!

இன்று AI பெரும்பாலும் சாட்பாட்கள் (Chatbots), இமேஜ் ஜெனரேஷன் (Image Genration )போன்ற பொதுவான பயன்பாடுகளுடன் மக்களிடம் அறிமுகமாகியுள்ளது. ஆனால், அனிமா ஆனந்த்குமாரின் ஆராய்ச்சி இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இயற்பியல் மற்றும் அறிவியல் சார்ந்த சிக்கல்களைத் தீர்க்க AI எப்படிப் பயன்படுத்தப்படலாம் என்பதில்தான் அவரது முக்கியக் கவனம் உள்ளது.

குறிப்பாக, 'நியூரல் ஆபரேட்டர்கள்' (Neural Operators) மற்றும் 'ஃபோரியர் நியூரல் ஆபரேட்டர்கள்' தொடர்பான அவரது ஆய்வுகள், சிக்கலான அறிவியல் கணக்கீடுகளை மின்னல் வேகத்தில் செய்யும் புதிய வழிகளை உருவாக்கியுள்ளன. பாரம்பரிய கணினி முறைகளில் அதிக நேரம் எடுக்கும் வானிலை, திரவ இயக்கம் மற்றும் பிற இயற்பியல் சிமுலேஷன்களை AI உதவியுடன் வேகமாக கணிக்க முடியுமா என்பதற்கான ஆராய்ச்சிகளில் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

வானிலை முன்னறிவிப்பில் புதிய சாத்தியம்

அவரது ஆராய்ச்சிக் குழு உருவாக்கியுள்ள 'ஃபோர்காஸ்ட்நெட்' (FourCastNet) போன்ற AI அடிப்படையிலான வானிலை முன்னறிவிப்பு மாதிரிகள், உலகளாவிய வானிலை மாற்றங்களை விரைவாக ஆய்வு செய்வதற்கான புதிய சாத்தியங்களை உருவாக்கியுள்ளன.

பாரம்பரிய முறைகளில் அதிக கணினி வளங்களும் நேரமும் தேவைப்படும் நிலையில், AI உதவியுடன் பல்வேறு வானிலை நிலவரங்களை மிகக் குறுகிய நேரத்தில் கணக்கிட்டு ஆய்வு செய்ய முடியும். எதிர்காலத்தில் புயல், வெப்ப அலை உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே துல்லியமாகப் புரிந்துகொள்வதிலும் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கலாம்.

TIME100 AI என்றால் என்ன?

செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தில் தாக்கம் செலுத்தி வரும் உலகின் முக்கிய நபர்களை அடையாளப்படுத்தி 'டைம்' (TIME) வெளியிடும் பட்டியல்தான் 'TIME100 AI'. இதில் AI ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி, தொழில்நுட்ப நிறுவனத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் இந்தத் துறையின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களும் இடம்பெறுகின்றனர்.

2026 பட்டியலில் இடம்பெற்றுள்ள அனிமா ஆனந்த்குமார், AI-யை வெறும் டிஜிட்டல் உலகிற்குள் மட்டும் சுருக்கிவிடாமல், அறிவியல் கண்டுபிடிப்புகளை வேகப்படுத்தும் மாபெரும் கருவியாக மாற்றும் பணிக்காகக் கவனம் பெற்றுள்ளார்.

ஆராய்ச்சியிலிருந்து உலகளாவிய கொள்கை வரை...

AI ஆராய்ச்சிக்கு அப்பாலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எதிர்காலப் பயன்பாடுகள் தொடர்பான உலகளாவிய விவாதங்களிலும் அனிமா ஆனந்த்குமார் தீவிரமாகப் பங்காற்றி வருகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாளரின் அறிவியல் ஆலோசனைக் குழுவிலும் (Secretary-General's Scientific Advisory Board) இவர் இடம்பெற்றுள்ளார்.

சென்னை ஐஐடியில் தொடங்கிய இவரது கல்விப் பயணம், இன்று AI, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய அறிவியல் கொள்கை எனப் பல தளங்களில் விரிந்துள்ளது. மனிதர்களைப் போலப் பேசும் AI-க்கு அப்பால், இயற்கை உலகைப் ஆழமாகப் புரிந்துகொள்ளவும் அறிவியல் சிக்கல்களைத் துரிதமாகத் தீர்க்கவும் AI எப்படி உதவும் என்ற கேள்விக்கான அத்தியாவசியப் பதில்களைத் தேடும் அனிமா ஆனந்த்குமாரின் பயணம் பலருக்கும் உத்வேகம் தருவதாகும்.!

ஸ்மார்ட்போன், இன்டர்நெட் இல்லையா? இனி கவலை வேண்டாம் - பட்டன் போனிலேயே UPI மூலம் பணம் அனுப்பலாம்!

ஸ்மார்ட்போன் இல்லாமல் UPI மூலம் பணம் அனுப்ப முடியாது என்ற நிலையை மாற்றகூடிய வகையில் இன்டர்நெட் வசதி இல்லாமலேயே பணம் அனுப்பவும், கடைகளில் பணம் செலுத்தவும் உதவும் ‘PhonePe UPI 123Pay’ என்ற புதிய சேவையை ... மேலும் பார்க்க

AI கண்காணிப்பு... லேசர் தாக்குதல்: கொசுக்களை விரட்ட அதிநவீன 'அயர்ன் டோம்'!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கொசுக்களால் பரவும் 'வெஸ்ட் நைல் வைரஸ்' (West Nile Virus) பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுக்கு எதிராக அறிவியலாளர்கள் புதுமையானதொரு ஆயுதத்தை... மேலும் பார்க்க

Roman Telescope: பிரபஞ்சத்தின் இருண்ட ரகசியங்களைத் தேடும் நாசாவின் $4 பில்லியன் ‘ரோமன்’ டெலஸ்கோப்!

பிரபஞ்சத்தின் விரிவாக்கம் மற்றும் கண்ணுக்குத் தெரியாத மர்மமான 'டார்க் மேட்டர்' (Dark Matter), 'டார்க் எனர்ஜி' (Dark Energy) ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக நாசா (NASA) தயாரித்துள்ள 'நான்சி கிரேஸ் ரோமன் ஸ்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவர்களுக்கு 1 வருடம் இலவச Gemini — Google-ன் புதிய AI சலுகை: யார்... எப்படி பெறலாம்?

கல்லூரி மாணவர்களின் படிப்பை AI மூலம் எளிதாக்கும் வகையில், Google தனது Gemini AI plans-ல் சிறப்பு student offer-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் தகுதியுள்ள கல்லூரி மாணவர்கள் Google AI Plus subscri... மேலும் பார்க்க

Claude-ன் கண்ணுக்குத் தெரியாத Watermark: “AI எழுதியதை இனி மறைக்க முடியாதா?”

Anthropic நிறுவனம் தனது Claude AI மூலம் உருவாக்கப்படும் text-ல் மனிதர்களால் எளிதில் கண்டறிய முடியாத “Invisible Watermark” ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 2, 2026 முதல் Claude models-ல் இந்த water... மேலும் பார்க்க

LED TV பழுதைச் சரிசெய்ய புதிய கருவி: "7 வினாடிகளில் பிரச்னையைக் கண்டறியும்"- அசத்திய கரூர் இளைஞர்கள்

கரூர் மாவட்டம், வெள்ளியணை கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. டி.வி மெக்கானிக்கான இவரது மகன்கள் சுரேஷ், பிரசாந்த் இருவரும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரு... மேலும் பார்க்க