செய்திகள் :

US: இந்தியர்களின் Green Card கனவுக்கு பெரிய தடை? - 179 ஆண்டுகள் வரை காத்திருப்பா?

post image

அமெரிக்காவில் வேலை அடிப்படையில் (Employment-based) கிரீன் கார்டு (Green Card) பெறக் காத்திருக்கும் இந்தியர்களுக்கு நீண்ட காலக் காத்திருப்பு ஏற்பட்டுள்ளதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. தற்போதைய நிலை தொடர்ந்து நீடித்தால், EB-2 பிரிவில் (Advanced degree அல்லது exceptional ability கொண்ட professionals) புதிதாக விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்குக் கிரீன் கார்டு கிடைக்க 179 ஆண்டுகள் வரை ஆகலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வேலை அடிப்படையிலான கிரீன் கார்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. மேலும், ஒரு நாட்டைச் சேர்ந்தவர்களுக்குப் பொதுவாக 7 சதவீத வரம்பு (Country Cap) உள்ளது. அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற விண்ணப்பிக்கும் இந்தியத் தொழில்முறை பணியாளர்களின் (Professionals) எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், விண்ணப்பங்கள் சேர்ந்து backlog தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Visa, Green Card
Visa, Green Card

தற்போதைய கணிப்பின்படி, இந்தியர்களுக்கு EB-1 பிரிவில் சுமார் 5 ஆண்டுகள், EB-2 பிரிவில் 179 ஆண்டுகள், EB-3 பிரிவில் 38 ஆண்டுகள் வரை காத்திருப்பு இருக்கலாம். EB-1 (மிக உயர்ந்த திறமை அல்லது சாதனை கொண்டவர்கள்), EB-2 (Advanced degree அல்லது exceptional ability கொண்ட professionals) மற்றும் EB-3 (Bachelor's degree professionals மற்றும் skilled workers போன்றவர்கள்) பிரிவுகளைச் சேர்த்து, இந்தியத் தொழில்முறை பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் என கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் நிலுவைப் பட்டியலில் (Backlog) இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 179 ஆண்டுகள் என்பது உறுதியான காத்திருப்பு காலம் அல்ல. தற்போதைய குடியேற்ற விதிமுறைகள் (Immigration Rules), விசா வரம்புகள் (Visa Limits) மற்றும் நிலுவைப் பட்டியல் தொடர்ந்து நீடிக்கும் என்ற அடிப்படையில் செய்யப்பட்ட ஒரு கணிப்பு மட்டுமே. எதிர்காலத்தில் விதிமுறைகள் அல்லது விசா எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டால், இந்த காத்திருப்பு காலமும் மாறக்கூடும்.

’தவெக ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நிலைக்காது’ – எடப்பாடி பழனிசாமி ஆரூடம்!

கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள் சினிமாவில் சட்டமன்ற காட்சி எப்படி இருக்குமோ... மேலும் பார்க்க

"இந்தத் தந்திரத்தில் நாங்கள் வீழ மாட்டோம்"- விஜய் உடனான சந்திப்பு குறித்து மாணிக்கம் தாகூர்

சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தவெக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில், பிரதமர் வேட்பாளர் தொடர்பாக கூட்டணிக்குள் விவாதங்கள் எழுந்திருக்கிறது. தவெகவினர் முதல்வர் விஜய்தான் அடுத்த பிர... மேலும் பார்க்க

திடீர் விசிட்; கண்ணாடி வழங்கிய முதல்வர் விஜய்; இறுகப் பற்றி நெகிழ்ந்த மூதாட்டி! | Photo Album

Vijay: ```கண்ணு உன்ன ரொம்ப பிடிக்கும்'னு சொன்னேன்!" - முதல்வர் சர்ப்ரைஸ் விசிட்; மூதாட்டி நெகிழ்ச்சி மேலும் பார்க்க

Vijay: ```கண்ணு உன்ன ரொம்ப பிடிக்கும்'னு சொன்னேன்!" - முதல்வர் சர்ப்ரைஸ் விசிட்; மூதாட்டி நெகிழ்ச்சி

ஒவ்வோர் ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட மறுத்ததால் மேட்டூர் அணையில் போதும... மேலும் பார்க்க

கிண்டி கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை மருத்துவமனை: ஆய்வுக்கு வந்த குரங்குகள் - கண்டுகொள்ளுமா அரசு?

சென்னை கிண்டியில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டது கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை.தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய நோயாளிகள் தங்களின் உயிரைக் காப்பாற்ற... மேலும் பார்க்க

FQL மோசடி: இளைஞர் தற்கொலை; 'தடுக்கத் தவறிய காவல்துறை பொறுப்பேற்க வேண்டும்' - அன்புமணி ராமதாஸ்

எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் இராசு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவம... மேலும் பார்க்க