செய்திகள் :

கிண்டி கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை மருத்துவமனை: ஆய்வுக்கு வந்த குரங்குகள் - கண்டுகொள்ளுமா அரசு?

post image

சென்னை கிண்டியில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டது கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை.

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய நோயாளிகள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நம்பிக்கையுடன் இந்த மருத்துவமனையை நாடுகின்றனர்.

இங்கு மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் சிறப்பாகச் சிகிச்சையளித்தாலும், மருத்துவமனையின் நிர்வாகமும் தூய்மைப் பராமரிப்பும் அதலபாதாளத்திற்குச் சென்று கொண்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

​முந்தைய ஆட்சிக் காலத்தில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை, கடந்த ஆட்சியின் இறுதிப் பகுதியில் தொடங்கிய தொய்வு காரணமாக இன்று மிக மோசமான ஒரு சூழ்நிலையை எட்டியுள்ளது.

நோயாளிகளின் நலனைக் காக்க வேண்டிய மருத்துவமனையில், தரைப்பராமரிப்பு தொடங்கி அடிப்படை வசதிகள் வரை பல இடங்களில் சுகாதாரக்கேடு கோரத்தாண்டவம் ஆடுகிறது.

​இத்தகைய அவலங்களின் உச்சக்கட்டமாக, இன்று மதியம் இம்மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் உள்ள இதயவியல் (Cardiology) சிகிச்சைப் பிரிவிற்குள்ளேயே இரண்டு குரங்குகள் நுழைந்துள்ளன.

அங்கு வைக்கப்பட்டிருந்த குப்பை கூளங்களையும் கழிவுகளையும் அவை திறந்தவெளி மேடைகளைப் போலக் கிளறி, மிகவும் நிம்மதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்த காட்சி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் உறையச் செய்தது.

​உயர்தர நோயாளிகள் சிகிச்சை பெறும் இதயவியல் போன்ற மிக முக்கிய மருத்துவப் பிரிவிற்குள்ளேயே குரங்குகள் சுதந்திரமாகத் திரிவது, இம்மருத்துவமனையின் பராமரிப்பு எந்தளவிற்குச் சீரழிந்துள்ளது என்பதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.

தீவிர நோய்த்தொற்று ஏற்படக் கூடிய இத்தகைய இடங்களில் விலங்குகள் நுழைவது நோயாளிகளின் உயிருக்கு எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்பதைச் சம்பந்தப்பட்ட நிர்வாகம் சிந்திக்க வேண்டும்.

​கோடிக்கணக்கில் பொதுமக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட இத்தகைய உன்னதமான மருத்துவமனைகள் முறையான பராமரிப்புமின்றி, நிர்வாகத்தின் அலட்சியத்தினாலும் சீரழிவது கண்டிக்கத்தக்கது.

உடனடியாகத் தமிழக அரசும், சுகாதாரத்துறையும் தலையிட்டு, கிண்டி பன்னோக்கு மருத்துவமனையின் தூய்மைப் பணியை மேம்படுத்தவும், அடிப்படை சுகாதாரக் கட்டமைப்பை மீட்கவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.!

Vijay: ```கண்ணு உன்ன ரொம்ப பிடிக்கும்'னு சொன்னேன்!" - முதல்வர் சர்ப்ரைஸ் விசிட்; மூதாட்டி நெகிழ்ச்சி

ஒவ்வோர் ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட மறுத்ததால் மேட்டூர் அணையில் போதும... மேலும் பார்க்க

FQL மோசடி: இளைஞர் தற்கொலை; 'தடுக்கத் தவறிய காவல்துறை பொறுப்பேற்க வேண்டும்' - அன்புமணி ராமதாஸ்

எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் இராசு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவம... மேலும் பார்க்க

`சரியும் ராகுல் பிம்பம்; திக்குமுக்காடும் காங்கிரஸ்?' மாணிக்கம் தாகூர், விஜய் சந்திப்பு; பின்னணி!

பிரதமர் வேட்பாளர் - விஜய்நடிகராக இருந்து அரசியல் தலைவராக உருவெடுத்த த.வெ.க தலைவர் சி.ஜோசப் விஜய், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். இந்த நிலையில், சமீபத்தி... மேலும் பார்க்க

கழிவுகள் கொட்டும் இடமாக மாறிய வாழவாய்க்கால்: கேள்விக்குறியான சுகாதாரம்; முகம்சுளிக்கும் மக்கள்!

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பிரதான சாலையையொட்டி அமைந்துள்ள வாழவாய்க்கால் பகுதியில் பல்வேறு வகையான கழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருவதாக பொதுமக... மேலும் பார்க்க

"Excellent, சட்டமன்றத்தில் தனக்குக் கிடைக்கும் நேரத்தை..!"- சௌமியா அன்புமணியைப் பாராட்டிய கமல்ஹாசன்

பாமக எம்எல்ஏ செளமியா அன்புமணியை நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பாராட்டி இருக்கிறார். சட்டமன்றத்தில் மக்களின் பிரச்னைகளைச் சரியான தரவுகளோடு சௌமியா அன்புமணி பேசி வருகிறார். பலரும் ... மேலும் பார்க்க