செய்திகள் :

தஞ்சை: 12ம் வகுப்பு படிக்கும் 2 சிறுமியருக்கு பாலியல் தொல்லை; 64 வயது முதியவர் போக்சோ வழக்கில் கைது

post image

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பிலால் நகரைச் சேர்ந்தவர் 64 வயதான நாகூர்பிச்சை. இவர் டீக்கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

அந்த டீக்கடை வழியாக 12ம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய சிறுமியர் இருபர் செல்வது வழக்கம். அப்போது, நாகூர் பிச்சை அந்தச் சிறுமிகளைக் கிண்டல் செய்து வந்துள்ளார்.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர்
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர்

இரண்டு சிறுமிகளும் தாத்தா வயதுடையவர் விளையாட்டாகப் பேசுகிறார் என்று நினைத்து தாத்தா என்று அழைத்து அவரிடம் சிரித்துப் பேசி வந்தனர். இந்நிலையில், கடந்த 30ம் தேதி மாலை இரு சிறுமிகளும் டீ குடிக்க சென்றுள்ளனர்.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட நாகூர் பிச்சை, டீ கொடுக்கும் போது இரட்டை அர்த்தத்தில் பேசி சிறுமிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் சிறுமிகள் இரண்டு பேரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், இதில் ஒரு சிறுமி தனது உறவினரிடம் இதனைச் சொல்லி அழுதிருக்கிறார்கள். இதையடுத்து உறவினர்கள் தைரியம் கொடுக்க, இரண்டு சிறுமிகளும் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்தனர்.

அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நாகூர் பிச்சையைக் கைது செய்தனர்.

`முதல்வர் விஜய் பவுண்டேஷன்: தொழில் தொடங்க கடனுதவி' - சைபர் கிரிமினல்கள் புது வழியில் மோசடி!

இணைய தளம் மூலம் மோசடி செய்பவர்கள் தங்களது மோசடிக்கு புதுப்புது வழிகளை கண்டுபிடிக்கின்றனர். சமீபத்தில் தொடங்கப்பட்ட வாக்காளர்கள் சரிபார்ப்பு திட்டமான எஸ்.ஐ.ஆர் மூலம்கூட சைபர் கிரிமினல்கள் பொதுமக்களை ஏம... மேலும் பார்க்க

அமெரிக்காவில் கேரள பெண்கள் இருவர் படுகொலை; வேலை இழந்த விரக்தியில் தோழி செய்த கொடூரம்!

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், மண்ணுத்தி முடிக்கோட்டைச் சேர்ந்த ஹரிதாஸ் - சுஷ்மா தம்பதியின் மகள் அஞ்சனா ஹரி (35), திருவனந்தபுரம் கேசவதாசபுரம் காக்கநாடு லேனைச் சேர்ந்த ஜிஜி மேத்யூ மற்றும் மறைந்த பெ... மேலும் பார்க்க

சென்னை: ஒடிசா பெண் கொலை; உடலை கூறு போட்ட காதல் ஜோடி - பிரியாணி போல வேக வைத்தது ஏன்? |பகீர் தகவல்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹயத்துன்நிஷா (38). திருமணமான இவர், கணவரைப் பிரிந்து சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்தநிலையில்தான், ஹயத்துன்நிஷாவின் தலையைத் தவிர மற்ற உ... மேலும் பார்க்க

பெற்ற மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததால் பிறந்த குழந்தை - தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டிக்கு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 57 வயதான கந்தன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவரின் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு உயிரிழந்தார். அதையடுத்த... மேலும் பார்க்க

FQL முதலீட்டு மோசடி: நத்தம் அருகே இளைஞர் தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்; போலீசார் தடியடி

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் FQL என்கிற ஆப்பில் முதலீடு செய்தால் 40 நாட்களில் இரட்டிப்பான லாபம் கிடைக்கும் எனப் பொதுமக்களை நம்ப வைத்து சுமார் 1000 கோடிக்கு அதிகமான பணம் முறைகேடு செய்துள்... மேலும் பார்க்க

குமரி: மூதாட்டியை கொலை செய்து தீவைத்து எரித்த இளைஞர் - தற்கொலை போன்று காட்ட முயன்றது அம்பலம்

கன்னியாகுமரி மாவட்டம் ​நாகர்கோவில் வடிவீஸ்வரம் தேரடியை சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி சின்னம்மாள் (77). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இதனால் சின்னம்மாள் வீட்டில் தனியாக ... மேலும் பார்க்க