செய்திகள் :

சென்னை: ஒடிசா பெண் கொலை; உடலை கூறு போட்ட காதல் ஜோடி - பிரியாணி போல வேக வைத்தது ஏன்? |பகீர் தகவல்

post image

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹயத்துன்நிஷா (38). திருமணமான இவர், கணவரைப் பிரிந்து சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்தநிலையில்தான், ஹயத்துன்நிஷாவின் தலையைத் தவிர மற்ற உடல் பாகங்கள் சிவப்பு நிற சூட்கேஸில் ஆக்ரா ரயில் நிலையத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி கிடைத்தது. அதுதொடர்பான விசாரணையில்தான் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதுதொடர்பாகக ஹயத்துன்நிஷாவைக் கொலை செய்ததாக அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த காதல் ஜோடி மானிக் உத்தின், அவரின் காதலி பசுமதி மாஜி ஆகியோரை கூடுவாஞ்சேரி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

கூடுவாஞ்சேரி வீட்டிலிருந்து மீட்கப்பட்ட நிஷாவின் உடல் பாகங்கள்

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸாரிடம் பேசினோம்.

``சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் பொது பெட்டியில், அநாதையாகக் கிடந்த சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்றை கடந்த 3-ம் தேதி ஆக்ரா ரயில்வே போலீஸார் கண்டெடுத்தனர். அதைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் தலையில்லாத பெண்ணின் உடல் இருந்தது. அதுகுறித்து விசாரித்தபோதுதான், கொலை செய்யப்பட்ட பெண் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயத்துன்நிஷா என்பதும், அவர் சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ஹயத்துன்நிஷா வசித்து வந்த வாடகை வீட்டில் சோதனை நடத்தினோம். அப்போது பிரியாணி செய்யும் டப்ராவில் வேக வைக்கப்பட்டிருந்த உடல் உறுப்புகள், ரத்தம் உள்ளிட்டவைகள் இருந்தன. அவற்றை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தோம்.

கொலை செய்யப்பட்ட ஒடிசா பெண்

இதற்கிடையில் ஹயத்துன்நிஷாவின் சடலத்தை சூட்கேஸில் வைத்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் வைத்தது யாரென்று சி.சி.டி.வி-க்கள் மூலம் ஆய்வு செய்தோம். அப்போது இளைஞர் ஒருவரும் இளம்பெண் ஒருவரும் சூட்கேஸை ரயிலில் வைத்துச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் கிடைத்தன. அவர்கள் எங்கிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தார்கள் என்று விசாரித்தபோது கூடுவாஞ்சேரியிலிருந்து பூங்கா நகர் ரயில் நிலையத்துக்கு பயணிகள் மின்சார ரயிலில் வந்ததை சி.சி.டி.வி மூலம் உறுதிப்படுத்தினோம்.

இந்தச் சூழலில்தான் கூடுவாஞ்சேரியில் ஹயத்துன்நிஷாவின் சில உடல் பாகங்கள் பிரியாணி டப்பராவில் கிடைத்தன. உடனடியாக கூடுவாஞ்சேரியில் ஹயத்துன்நிஷா தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று சி.சி.டி.வி-யில் கிடைத்த இளைஞர், இளம்பெண் குறித்து விசாரித்தபோது அவர்கள் குறித்த விவரங்கள் கிடைத்தன.

கூடுவாஞ்சேரி வீட்டின் முன்பு போலீஸ் டீம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹயத்துன்நிஷாவின் வீட்டுக்கு அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மானிக் உத்தின் லஸ்கர் (Manik Uddin Laskar) என்பவரும், அவருடைய காதலி பசுமதி மாஜி என்பவரும் வந்து தங்கியிருந்த தகவல் கிடைத்தது. ஹயத்துன்நிஷா கொலைக்குப்பிறகு இருவரும் தலைமறைவாகியிருந்தனர். அவர்களைத் தேடி வந்த நிலையில், கொலை நடந்து 24 நாள்களுக்குப் பிறகு மணிப்பூரில் வைத்து இருவரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தோம்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், குரோம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோதுதான் டெய்லரான மானிக் உத்தினுக்கு ஹயத்துன்நிஷாவுடன் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. நாளடைவில் இருவரும் நெருங்கிப் பழகியதில் ஹயத்துன்நிஷா கர்ப்பமடைந்திருக்கிறார். தன்னுடைய கர்ப்பத்துக்கு மானிக் உத்தின்தான் காரணம் எனக் கூறிய ஹயத்துன்நிஷா, தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி அவரை வற்புறுத்தியிருக்கிறார். இந்த விவகாரம் மானிக் உத்தினின் காதலி பசுமதி மாஜிக்குத் தெரியவர, பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

காதலி பசுமதி மாஜி

ஒருகட்டத்தில், தங்களின் வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் ஹயத்துன்நிஷாவை கொலை செய்துவிட்டால் பிரச்னை முடிந்துவிடும் என மானிக் உத்தினும் பசுமதி மாஜியும் முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி, ஹயத்துன்நிஷாவைத் திருமணம் செய்துகொள்ள சம்மதிப்பதுபோல மானிக் உத்தினும், அவருடைய காதலி பசுமதி மாஜியும் நடித்திருக்கிறார்கள். இதை நம்பிய ஹயத்துன்நிஷா, மானிக் உத்தின், பசுமதி மாஜி ஆகியோரை கூடுவாஞ்சேரி வீட்டில் தங்க அனுமதியளித்திருக்கிறார்.

சம்பவத்தன்று ஹயத்துன்நிஷாவுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து கொலை செய்த இருவரும், சடலத்தை எப்படி அகற்றுவது என யூடியூப் வீடியோக்களை பார்த்திருக்கிறார்கள். அப்போது சடலத்தை துண்டு, துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்தால் எளிதில் அப்புறப்படுத் விடலாம் என காதல் ஜோடி முடிவு செய்திருக்கிறது. இதற்காக ஹயத்துன்நிஷாவின் சடலத்தை குளியலைறக்கு எடுத்துச் சென்ற மானிக் உத்தின், மட்டன் வெட்டும் கத்தியைப் பயன்படுத்தி தலை, கை, கால்கள், இடுப்பு பகுதி என துண்டு துண்டாக வெட்டியிருக்கிறார். பின்னர் அவைகளை சூட்கேஸில் வைத்து அடைத்திருக்கிறார். ஆனாலும் சில உடல் பாகங்களை சூட்கேஸிக்குள் வைக்க முடியவில்லை.

இதையடுத்து, சதையை தனியாக பிரித்தெடுத்திருக்கிறார். அதோடு ஹயத்துன்நிஷாவின் தலையிலிருந்த முடிகளை வெட்டி மொட்டையடித்திருக்கிறார். பின்னர், கண், காது, மூக்கு ஆகியவற்றையும் சிதைத்திருக்கிறார். அவற்றை பிரியாணி செய்யும் டப்பராவில் போட்டு தண்ணீர் ஊற்றி சில வேதிய பொருட்களையும் மாவையும் கலந்து வேக வைத்திருக்கிறது இந்தக் காதல் ஜோடி. அதன்பிறகு சூட்கேஸில் எலும்புகளை அடைத்த காதல் ஜோடி, அதை கூடுவாஞ்சேரி வீட்டிலிருந்து ரயில் நிலையத்துக்கு இழுத்துச் சென்றிருக்கிறார்கள்.

பின்னர் சென்ட்ரலுக்கு செல்ல, பூங்கா ரயில் நிலையத்துக்கு பயணிகள் மின்சார ரயில் மூலம் வந்திருக்கிறார்கள். அதன்பிறகு சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த காதல் ஜோடி, ஹயத்துன்நிஷாவின் உடல் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸை சென்ட்ரலிருந்து டெல்லி புறப்பட தயாராக இருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவில்லாத ரயில் பெட்டியில் வைத்துவிட்டு இருவரும் கூடுவாஞ்சேரி வீட்டுக்கு திரும்ப வந்திருக்கிறார்கள். அதன்பிறகு அங்கிருந்து இருவரும் அஸ்ஸாம் மாநிலத்துக்குத் தப்பிச் சென்றிருக்கிறார்கள். ஆக்ரா ரயில் நிலையத்தில் அந்தச் சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்ட பிறகுதான் ஹயத்துன்நிஷா கொலை செய்யப்பட்ட விவரம் வெளிச்சத்துக்கு வந்தது. ஹயத்துன்நிஷாவை கொடூரமாக கொலை செய்த காதல் ஜோடியின் பின்னணி குறித்து விசாரிக்க இருவரும் போலீஸ் காவலில் எடுக்கவுள்ளோம்" என்றனர்.

மானிக் உத்தின் லஸ்கர்

இந்தக் கொலை எப்படி துப்பு துலங்கியது என போலீஸ் கமிஷனர் பிரேமானந்த் சின்காவிடம் கேட்ட போது, ``ஆக்ரா ரயில் நிலையத்தில் கிடைத்த தலையில்லாத பெண்ணின் உடல் பாகங்களை வைத்து சி.சி.டி.வி மற்றும் சில தடயங்கள் மூலம் இந்தக் கொலையை துப்பு துலக்கியிருக்கிறோம். இந்த கொலைக்கு கர்ப்பம் மட்டும்தான் காரணமா என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம். மேலும் ஹயத்துன்நிஷாவுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக கைதான காதல் ஜோடி தெரிவிக்கிறார்கள். பிரேத பரிசோதனை முடிவில்தான் ஹயத்துன்நிஷா எப்படி இறந்தார் என்ற தகவல் தெரியவரும். அதோடு ஹயத்துன்நிஷாவின் தலை இதுவரை கிடைக்கவில்லை. அதுதொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார். 

`முதல்வர் விஜய் பவுண்டேஷன்: தொழில் தொடங்க கடனுதவி' - சைபர் கிரிமினல்கள் புது வழியில் மோசடி!

இணைய தளம் மூலம் மோசடி செய்பவர்கள் தங்களது மோசடிக்கு புதுப்புது வழிகளை கண்டுபிடிக்கின்றனர். சமீபத்தில் தொடங்கப்பட்ட வாக்காளர்கள் சரிபார்ப்பு திட்டமான எஸ்.ஐ.ஆர் மூலம்கூட சைபர் கிரிமினல்கள் பொதுமக்களை ஏம... மேலும் பார்க்க

அமெரிக்காவில் கேரள பெண்கள் இருவர் படுகொலை; வேலை இழந்த விரக்தியில் தோழி செய்த கொடூரம்!

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், மண்ணுத்தி முடிக்கோட்டைச் சேர்ந்த ஹரிதாஸ் - சுஷ்மா தம்பதியின் மகள் அஞ்சனா ஹரி (35), திருவனந்தபுரம் கேசவதாசபுரம் காக்கநாடு லேனைச் சேர்ந்த ஜிஜி மேத்யூ மற்றும் மறைந்த பெ... மேலும் பார்க்க

தஞ்சை: 12ம் வகுப்பு படிக்கும் 2 சிறுமியருக்கு பாலியல் தொல்லை; 64 வயது முதியவர் போக்சோ வழக்கில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பிலால் நகரைச் சேர்ந்தவர் 64 வயதான நாகூர்பிச்சை. இவர் டீக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். அந்த டீக்கடை வழியாக 12ம் வகுப்பு படிக்கும் 16 வயது... மேலும் பார்க்க

பெற்ற மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததால் பிறந்த குழந்தை - தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டிக்கு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 57 வயதான கந்தன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவரின் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு உயிரிழந்தார். அதையடுத்த... மேலும் பார்க்க

FQL முதலீட்டு மோசடி: நத்தம் அருகே இளைஞர் தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்; போலீசார் தடியடி

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் FQL என்கிற ஆப்பில் முதலீடு செய்தால் 40 நாட்களில் இரட்டிப்பான லாபம் கிடைக்கும் எனப் பொதுமக்களை நம்ப வைத்து சுமார் 1000 கோடிக்கு அதிகமான பணம் முறைகேடு செய்துள்... மேலும் பார்க்க

குமரி: மூதாட்டியை கொலை செய்து தீவைத்து எரித்த இளைஞர் - தற்கொலை போன்று காட்ட முயன்றது அம்பலம்

கன்னியாகுமரி மாவட்டம் ​நாகர்கோவில் வடிவீஸ்வரம் தேரடியை சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி சின்னம்மாள் (77). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இதனால் சின்னம்மாள் வீட்டில் தனியாக ... மேலும் பார்க்க