செய்திகள் :

"இந்தத் தந்திரத்தில் நாங்கள் வீழ மாட்டோம்"- விஜய் உடனான சந்திப்பு குறித்து மாணிக்கம் தாகூர்

post image

சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தவெக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில், பிரதமர் வேட்பாளர் தொடர்பாக கூட்டணிக்குள் விவாதங்கள் எழுந்திருக்கிறது.

தவெகவினர் முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர் என தொடர்ச்சியாக கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில், அதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது.

இதனிடையே நேற்று (ஆக.31) சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்யை மாணிக்கம் தாகூர் சந்தித்து பேசியிருந்தார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூரிடம் இந்தச் சந்திப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "நாங்கள் கூட்டணி கட்சிகள், மரியாதை நிமித்தமாகத் தான் சந்தித்தோம். நான் வேறு கூட்டணிக் கட்சி தலைவர்களைச் சந்தித்திருந்தால் அதில் அரசியல் இருக்கும். இந்தச் சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை.

உண்மையான உறவுகளைப் பிரிக்கும் தந்திரங்களை செய்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தந்திரத்தில் நாங்கள் வீழ மாட்டோம். இந்தத் தந்திரங்கள் தோற்கடிக்கப்படும்.

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. தமிழகத்தின் முதல்வராக விஜய் தொடர வேண்டும். அவர் நல்லாட்சி செய்து கொண்டிருக்கிறார்.

விஜய் - ராகுல் காந்தி
விஜய் - ராகுல் காந்தி

ஊழலற்ற ஆட்சியை அவர் தொடர்ந்து வழங்க வேண்டும். அதற்கு அவருடன் காங்கிரஸ் கட்சி துணை நிற்கும். ராகுல் காந்தியை பொறுத்தவரை விஜய் உடனான உறவு சகோதரத்துவமான உறவு. இவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு பலமாக இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

’தவெக ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நிலைக்காது’ – எடப்பாடி பழனிசாமி ஆரூடம்!

கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள் சினிமாவில் சட்டமன்ற காட்சி எப்படி இருக்குமோ... மேலும் பார்க்க

திடீர் விசிட்; கண்ணாடி வழங்கிய முதல்வர் விஜய்; இறுகப் பற்றி நெகிழ்ந்த மூதாட்டி! | Photo Album

Vijay: ```கண்ணு உன்ன ரொம்ப பிடிக்கும்'னு சொன்னேன்!" - முதல்வர் சர்ப்ரைஸ் விசிட்; மூதாட்டி நெகிழ்ச்சி மேலும் பார்க்க

Vijay: ```கண்ணு உன்ன ரொம்ப பிடிக்கும்'னு சொன்னேன்!" - முதல்வர் சர்ப்ரைஸ் விசிட்; மூதாட்டி நெகிழ்ச்சி

ஒவ்வோர் ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட மறுத்ததால் மேட்டூர் அணையில் போதும... மேலும் பார்க்க

கிண்டி கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை மருத்துவமனை: ஆய்வுக்கு வந்த குரங்குகள் - கண்டுகொள்ளுமா அரசு?

சென்னை கிண்டியில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டது கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை.தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய நோயாளிகள் தங்களின் உயிரைக் காப்பாற்ற... மேலும் பார்க்க

FQL மோசடி: இளைஞர் தற்கொலை; 'தடுக்கத் தவறிய காவல்துறை பொறுப்பேற்க வேண்டும்' - அன்புமணி ராமதாஸ்

எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் இராசு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவம... மேலும் பார்க்க

`சரியும் ராகுல் பிம்பம்; திக்குமுக்காடும் காங்கிரஸ்?' மாணிக்கம் தாகூர், விஜய் சந்திப்பு; பின்னணி!

பிரதமர் வேட்பாளர் - விஜய்நடிகராக இருந்து அரசியல் தலைவராக உருவெடுத்த த.வெ.க தலைவர் சி.ஜோசப் விஜய், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். இந்த நிலையில், சமீபத்தி... மேலும் பார்க்க