செய்திகள் :

Mettur Dam: `93 ஆண்டுக்கால மேட்டூர் அணை வரலாற்றில் இது 62- வது‌ முறை!' - அதிகாரிகள் சொல்வதென்ன?

post image

தமிழ்நாட்டில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கும் அதிகமாக சாகுபடி மேற்கொள்ளப்படும் காவிரி ஆற்றுப்படுகையின் உயிர் நாடியாக விளங்குகிறது, மேட்டூர் அணை. சேலம் மாவட்டம், மேட்டூரில் அமைந்துள்ள இந்த பிரமாண்ட அணையில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கான தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் சம்பா சாகுபடிக்கான தண்ணீரை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று காலை திறந்து வைத்தார். 91 அடியாக நிறைந்துள்ள மேட்டூர் அணையில் இருந்து அடுத்த 45 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

முதலமைச்சர் விஜய்

இது குறித்து தெரிவித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், ``கேரளா, கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வத்து அதிகரித்து நிரம்பியது. கபினி, கே.ஆர்.எஸ் அணைகளிலிருந்து உபரிநீர் திறப்பால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 91 அடியை எட்டியுள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் விஜய் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12- ம் தேதிதான் அணை திறக்கப்படுவது வழக்கம் என்றாலும் அதிக மழைப்பொழிவு காரணமாக 11 முறை முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் 93 ஆண்டுக்கால வரலாற்றில், காலதாமதமாக 62- வது முறையாக இன்று பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது" என்றனர்.

சேகர் பாபு, மா.சுப்பிரமணியனுக்கே முன்னுரிமை - கொதிப்பில் உதயநிதி! தலைநகர் திமுக-வில் என்ன நடக்கிறது?

தலைநகர் தி.மு.க-வில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் முடிவெடுத்திருந்தாலும், இன்னமும் சீனியர்கள் ஆதிக்கம் அதீதமாக இருப்பதாக குமுறத் தொடங்கியிருக்கிறார்கள் உதயநிதி ஆத... மேலும் பார்க்க

`சம்பளம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம்' - அதிமுக-வுக்கு தேர்தல் பணியாற்றிய நிறுவன ஊழியர்கள் வேதனை!

சென்னை தேனாம்பேட்டையில் இயங்கி வரும் மெய்நிகர் மீடியா நிறுவனம், நிறுவனங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சமூக வலைதளப் பக்கங்களில் விளம்பரங்களை செய்து தரும் நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. சத்யமூர்த்த... மேலும் பார்க்க

Mettur dam: 4 டிஐஜிக்கள், 4 ஆயிரம் போலீஸார்; சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையைத் திறக்கும் முதல்வர்

காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டம் மேட்டூரில் கட்டப்பட்டிருக்கும் பிரமாண்ட அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு குடிநீர் மற்றும் வேளாண் பயன்பாடுகளுக்குத் திறந்து விடப்படுகிறது. காவிரி ஆற்றுப்படுகைய... மேலும் பார்க்க

Congress: "2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்!" - அமைச்சர் விஸ்வநாதன்

2029-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார் எனக் கேட்கப்பட்ட கேள்விக்குத் திருச்சியில் அமைச்சர் விஸ்வநாதன் பதிலளித்திருக்கிறார். அமைச்சர் விஸ... மேலும் பார்க்க

சர்வதேச உதவிகளை மறுத்த நேபாள அரசு: அழுத்தத்துக்குப் பிறகு முடிவில் மாற்றம்! - காரணம் என்ன?

நேபாள நாட்டின் போடேகோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் இதுவரை 550-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பேரிடர் மேலாண... மேலும் பார்க்க

Nepal Flood: "மக்களை அழைத்து வருவதே எங்களின் முதல் இலக்கு!'' - மீட்பு பணிகள் குறித்து வெங்கட நாராயணா

நேபாளத்தில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மீட்புப் பணிகளும் அங்குப் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணிகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்தி வரு... மேலும் பார்க்க