செய்திகள் :

Mettur dam: 4 டிஐஜிக்கள், 4 ஆயிரம் போலீஸார்; சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையைத் திறக்கும் முதல்வர்

post image

காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டம் மேட்டூரில் கட்டப்பட்டிருக்கும் பிரமாண்ட அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு குடிநீர் மற்றும் வேளாண் பயன்பாடுகளுக்குத் திறந்து விடப்படுகிறது.

காவிரி ஆற்றுப்படுகையில் சுமார் 15 லட்சம் ஏக்கருக்கு மேல் இந்த அணைக்கட்டு மூலம் பாசன வசதி பெற்று வருகின்றன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் நடப்பாண்டில் குறுவை சாகுபடிக்கான தண்ணீரை ஜூன் மாதம் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையால் கபினி அணை நிரம்பியதைத் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து தற்போது 90 அடியை எட்டியிருக்கிறது. சம்பா சாகுபடிக்கான தண்ணீரை முதல்வர் ஜோசப் விஜய் நாளை காலை திறந்து வைக்க உள்ளார்.

மேட்டூர் அணையில் காவல்துறையினர்
மேட்டூர் அணையில் காவல்துறையினர்

செப்டம்பர் முதல் நாளான நாளையிலிருந்து அடுத்த 45 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு மேட்டூர் கோட்டாட்சியர் அலுவலகம் முதல் அணைக்கட்டு வரை சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசுச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஒரு ஐ‌.ஜி, 4 டி.ஐ.ஜி, 15 எஸ்.பி, 15 கூடுதல் எஸ்.பி, 35 துணை எஸ்.பி, 4 ஆயிரம் போலீஸார் எனப் பெரும் படையே முதலமைச்சர் ஜோசப் விஜய் மேட்டூர் அணையைத் திறப்பதற்கான விழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.

Congress: "2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்!" - அமைச்சர் விஸ்வநாதன்

2029-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார் எனக் கேட்கப்பட்ட கேள்விக்குத் திருச்சியில் அமைச்சர் விஸ்வநாதன் பதிலளித்திருக்கிறார். அமைச்சர் விஸ... மேலும் பார்க்க

சர்வதேச உதவிகளை மறுத்த நேபாள அரசு: அழுத்தத்துக்குப் பிறகு முடிவில் மாற்றம்! - காரணம் என்ன?

நேபாள நாட்டின் போடேகோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் இதுவரை 550-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பேரிடர் மேலாண... மேலும் பார்க்க

Nepal Flood: "மக்களை அழைத்து வருவதே எங்களின் முதல் இலக்கு!'' - மீட்பு பணிகள் குறித்து வெங்கட நாராயணா

நேபாளத்தில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மீட்புப் பணிகளும் அங்குப் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணிகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்தி வரு... மேலும் பார்க்க

'கொளத்தூர் தொகுதியை சேகர் பாபுவிடமிருந்து பறிக்கும் திமுக?' - கட்சி மறுசீரமைப்பை தொடஙகிய ஸ்டாலின்!

கட்சி மாவட்ட எண்ணிக்கையை 110-ஆக உயர்த்தி பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலை அறிவித்திருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இந்நிலையில், கொளத்தூர் தொகுதியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை சேகர்பாபுவிடமிரு... மேலும் பார்க்க

மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிப்பதாக புகார்!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மஞ்சள் மற்றும் கறுப்பு நிறத்தி... மேலும் பார்க்க

பரந்தூர் : வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான விவாதம்! தமிழகத்துக்கு லாபமா, நஷ்டமா?

சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் தொடக்கம் முதலே சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. முந்தைய திமுக ஆட்சியின்போது முன்வைக்கப்பட்ட இந்தத் திட்டத்துக்கு பரந்தூர் மற்றும் சு... மேலும் பார்க்க