செய்திகள் :

Man Eater: 130 கண்காணிப்பு கேமிராக்கள், 13 கூண்டுகள்; 11-வது நாளாகப் போக்கு காட்டும் ஆட்கொல்லி புலி

post image

மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதியில் 2 நபர்களை புலி தாக்கி கொன்றதுடன் அவர்களின் உடல் பாகங்களையும் தின்றுள்ளது.

மனிதர்களை வேட்டையாடி பழகிய அந்தப் புலியை ஆட்கொல்லியாக அறிவித்த வனத்துறை, அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் பணியில் களமிறங்கியிருக்கிறது.

வயது முதிர்வு அல்லது உடலில் ஏற்படும் காயங்கள் காரணமாக காட்டில் வேட்டையாடும் திறனை இழந்து மனிதர்களைத் தின்னும் குறிப்பிட்ட அந்தப் புலியின் நடமாட்டத்தைக் கண்டறிய ஓவேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 130 தானியங்கி கண்காணிப்பு கேமிராக்களை வனத்துறையினர் பொருத்தியுள்ளனர்.

நவீன டிரோன் கேமிராக்கள் மூலமும் தேடி வருகின்றனர். மேலும் கர்நாடகாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பிரத்யேகமான கூண்டுகள் உட்பட 13 கூண்டுகளை காட்டில் நிறுவியுள்ளனர்.

புலியைத் தேடும் பணி
புலியைத் தேடும் பணி

மயக்க மருந்து நிரப்பப்பட்ட துப்பாக்கிகளுடன் கால்நடை மருத்துவர்கள், டைகர் டிராக்கர்ஸ் எனப்படும் கால் தடங்கள் மூலம் புலிகளின் இருப்பிடத்தைப் பின்தொடர்ந்து கண்டறியும் முதுமலை பழங்குடிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் களத்தில் உள்ளனர்.

இரண்டு கும்கி யானைகளையும் தேடுதல் பணிக்குப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த 11 நாள்களாகத் தொடரும் இந்தத் தேடுதல் பணியில் குறிப்பிட்ட அந்தப் புலியை அடையாளம் காண முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

புலியின் இருப்பிடத்தைக் கண்டறிந்து சுற்றிவளைக்க முடியாத சூழல் நிலவுவதால் அடுத்து யாரைவது அந்தப் புலி தாக்கினால் நிலைமை இன்னும் மோசமாகும் என்கிற அச்சத்தில் இருக்கிறது மாவட்ட நிர்வாகம்.

"அவ்வளவு பெரிய பனியும் பாறைகளும் கீழே விழுந்ததால்தான் அந்த அதிர்வுகள்.!" - நேபாள வெள்ளம் விளக்கம்

நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 26), நேபாளத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இப்போது வரை வெளியாகி உள்ள தகவலின்படி, இந்த வெள்ளத்தில் 469 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்புக் குழு தேடி வ... மேலும் பார்க்க

காக்க வந்த கரைகள்... கழுத்தை நெரித்த கதை: `கோசி திட்டம்' ஒரு வரலாற்றுப் பிழையா?

இயற்கையின் மாபெரும் சக்திகளில் ஒன்றான ஆறுகள், சில சமயங்களில் தங்களின் வழக்கமான பாதையை விட்டு விலகி, திடீரென ஒரு புதிய வழியில் பயணிக்கத் தொடங்கும். புவியியலில் இந்த நிகழ்வு 'அவல்ஷன்' (Avulsion) என்று அ... மேலும் பார்க்க

மருதமலை: பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைந்து வரும் குட்டை – நடவடிக்கை எடுக்குமா வனத்துறை?

கோவை மருதமலை அடிவாரப் பகுதியில் உள்ள குட்டை ஒன்று தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கிய நிலையில் காணப்படுகிறது. குட்டையின் நீர்ப்பரப்பில் ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுக... மேலும் பார்க்க

கூடலூர்: யானைக் காட்டில் ஆட்கொல்லி புலியைத் தேடி அலையும் வனத்துறை! | Photo Album

ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை ஆட்கொல்லி புலியை பிட... மேலும் பார்க்க

பாண்டி மெரினா பின்னால் குவியும் குப்பைகள்... மாங்குரோவ் காடுகளை நோக்கி நகரும் கழிவுகள்!

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் இடங்களில் பாண்டி மெரினாவும் ஒன்று.ஆனால், இந்தப் பகுதியின் பின்புறம் சென்றால் நிலைமை சற்று மாறுபட்டதாக இருக்கிறது. உப்பளம் பகுதியில் இருந்து வரும... மேலும் பார்க்க