செய்திகள் :

'ஹார்முஸில் கண்ணிவெடிகள்' - ஈரானை அமெரிக்கா தாக்கியது ஏன்? ஈரானின் பதிலடி என்ன?

post image

கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) தான், அமெரிக்கா, ஈரான் மீது ‘ஆபரேஷன் எக்கனாமிக் அவுட்காஸ்ட்’-ஐ அறிவித்தது.

இது ஈரான் மீதான பொருளாதாரத் தடை ஆகும்.

ஈரான் போர் அப்போதிலிருந்து ராணுவ நடவடிக்கைகளில் இருந்து பொருளாதாரத் தடைகளுக்கு மாறியது.

இனி அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ராணுவத் தாக்குதல் இருக்காது என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், மீண்டும் தாக்குதல் தொடங்கியுள்ளது.

நேற்று (ஆகஸ்ட் 30), அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரான்- அமெரிக்கா
ஈரான்- அமெரிக்கா

அமெரிக்கா என்ன சொல்கிறது?

இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குக் கொடுத்துள்ள தகவல்: “இன்று அதிகாலை லாராக் தீவிலிருந்த ஈரானின் இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.

இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை ஹார்முஸ் நீர்ச்சந்திக்குள் கடல் கண்ணிவெடிகளைத் தாங்கிச் செல்லும் ராக்கெட்டுகளை ஏவுவதற்குத் தயாராகி வந்தது அமெரிக்கப் படைகளுக்குத் தெரிந்தது.

அதனால்தான் இந்தத் தாக்குதல் தற்போது நடந்துள்ளது.”

ஈரானின் எச்சரிக்கை

அமெரிக்காவின் இந்தத் தாக்குதலை ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் அரசின் செய்தி நிறுவனங்களின் தகவலின்படி, ஈரானிய ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர், “லாராக் தீவு மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு எங்களின் பதிலடி என்பது நிச்சயம் உண்டு” என்று தெரிவித்திருக்கிறார்.

"அது தவெக-வின் விருப்பம்; ஆனால் மக்களுக்கான ஆட்சியை ராகுல் காந்திதான் தர முடியும்" - விஜய் வசந்த் MP

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஈராச்சி கிராமத்திலுள்ள பரிமேழலகர் இந்து நடுநிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் விஜய் வ... மேலும் பார்க்க

"ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆன தியேட்டர்கள் காத்து வாங்கியது" - எடப்பாடி பழனிசாமி பேச்சு

"சட்டமன்றத்தில் ஆளும்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தங்கள் சொந்தப் பிரச்னைகளைத்தான் பேசி வருகிறார்கள். மக்கள் பிரச்னைகளைப் பற்றி அதிமுக மட்டும்தான் பேசுகிறது" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி ... மேலும் பார்க்க

"ராகுல்தான் பிரதமர்; தவெக உடன்படாவிட்டால் ராஜினாமா செய்வோம்"- காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் சபதம்!

தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்ற நிலையில் புதிதாக பல நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர்களை அவர் நியமித்தார். அத... மேலும் பார்க்க

திமுக: தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் புதிய மாவட்டங்கள்! - கருத்து கேட்க ஸ்டாலின் முடிவு

தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க ஆட்சியைப் பறிகொடுத்த நிலையில், கட்சியை வலுப்படுத்தும் வகையில் தி.மு.க-வில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின். அதன் ஒரு பகுதிய... மேலும் பார்க்க

"தலித் மக்களுக்கான சட்டபூர்வ உரிமைகளை தவெக அரசு செயல்படுத்த வேண்டும்!" - திருமாவளவன் வலியுறுத்தல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பெரம்பலூர், ஸ்ரீமுஷ்ணம், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையி... மேலும் பார்க்க

‘ஒன்றிய அரசை எதிர்க்க தைரியம் இருக்கிறதா?’ - விஜய் அரசுக்கு அப்பாவு கேள்வி!

தவெக அரசு மத்திய அரசின் சில திட்டங்களை எதிர்க்கவில்லை என்றும், கேள்வி கேட்கவில்லை என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் அப்பாவு. அந்தப் பதிவு... 202... மேலும் பார்க்க