செய்திகள் :

கிருஷ்ணகிரி: கஞ்சா வழக்குகளில் தொடர்ந்து சிக்கிய பெண்; குண்டர் சட்டத்தைப் பிரயோகித்த கலெக்டர்

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய பெண் 'Drug Offender' பிரிவின் கீழ் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

கஞ்சா பார்சல்கள்
கஞ்சா (ஃபைல் படம்)

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று கிருஷ்ணகிரி அருகே பாஞ்சாலியூர் பகுதியில் காரில் கஞ்சா கடத்தப்படுவதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன்பேரில், இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில், எஸ்.ஐ அன்பழகன், எஸ்.எஸ்.ஐ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உள்ளிட்ட போலீஸ் டீம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது அங்கு வந்த பதிவு எண் இல்லாத டாடா இன்டிகா காரிலிருந்து ஆண் ஒருவர் தப்பியோட, காரில் இருந்த கவிதா என்ற பானுமதியைப் பிடித்தனர்.

காரை சோதனை செய்ததில் 1.250 கிலோ கஞ்சாவும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காருடன் ரூ.70,650 ரொக்கமும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட கவிதா, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

மேலும், கவிதா மீது 2021 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் சிப்காட், ஓசூர் டவுன், கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் மற்றும் கந்திகுப்பம் காவல் நிலையங்களில் கஞ்சா தொடர்பான 4 வழக்குகள் இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

கவிதா என்ற பானுமதி
கவிதா என்ற பானுமதி

இதில், கந்திகுப்பம் காவல் நிலையத்தில் 200 கிலோ கஞ்சா தொடர்பான குற்றச்சம்பவத்தில் அவருக்குத் தொடர்பு இருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போதைப்பொருள் தொடர்பான குற்ற வழக்குகளில் தொடர்புடையவராக இருந்ததைக் கருத்தில் கொண்டு, கவிதா மீது தடுப்புக் காவல் நடவடிக்கை மேற்கொள்ள கிருஷ்ணகிரி எஸ்.பி அனிதா, டி.எஸ்.பி ராமச்சந்திரன் ஆகியோர் பரிந்துரை செய்ததன் அடிப்படையில், கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் 28.08.2026 அன்று குண்டர் சட்டத்தைப் பிறப்பித்தார்.

உத்தரவின்படி வேலூர் சிறப்பு பெண்கள் சிறையில் கவிதாவிடம் குண்டர் சட்ட உத்தரவின் நகல் வழங்கப்பட்டது. இதன் மூலம் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டவர் 2வது முறையாக தப்பி ஓட்டம்; போலீஸாரின் அலட்சியம்தான் காரணமா?

தூத்துக்குடி மாப்பிளையூரணியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரின்மகன் நிரஞ்சன். கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி விளாத்திகுளம் மீனாட்சிபுரத்தில் அடிதடி பிரச்னை தொடர்பாக விளாத்திகுளம் காவல் நிலையம் போலீஸார் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: பால் வேன் மோதியதால் 4 சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி பழனிச்சாமி -அஞ்சம்மாள். இவர்கள், கணவாய் மேடு பகுதியில் சாலையோரமாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள்.இவர்களின் ... மேலும் பார்க்க

கும்பகோணம்: காதலிக்க மறுத்த பள்ளி ஆசிரியை; பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட கேரள ஜிம் பயிற்சியாளர்

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், மதுர் பகுதியைச் சேர்ந்தவர் சுமன்ராஜ் (36). ஜிம்மில் பயிற்சியாளராக உள்ளார். சுமன்ராஜுக்குத் திருமணம் ஆகி ஹித்தாச்சி என்ற மனைவியும் 7 வயதில் பெண் குழந்தையும், ஒன்பது மா... மேலும் பார்க்க

விவாகரத்து, 7 மாத கர்ப்பம்: கடத்தி மரத்தில் கட்டி தீவைக்கப்பட்ட பஞ்சாப் பெண் சோசியல் மீடியா பிரபலம்

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் மஞ்ஜீத் கவுர்(28). சோசியல் மீடியா பிரபலமான கவுர் கடந்த ஜூலை மாதம் சண்டிகரில் மதுபானக்கடை ஒன்றுக்கு அருகில் தனக்கு தெரிந்த இரண்டு பேரால் காரில் கடத்திச்செல்லப்பட்டார். மொரி... மேலும் பார்க்க

ஆம்பூர்: பச்சிளம் குழந்தை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை; தாய், தந்தையால் அரங்கேறிய கொடூரம்; 4 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மாங்காதோப்பு பாஷா நகர்ப் பகுதியில் வசிக்கும் டீ மாஸ்டர் தொழிலாளி ரஹமத்துல்லா, வயது 38. இவரின் மனைவி ஹவாமா. இவர்களுக்குத் திருமணமாகி 17 ஆண்டுகளாகிறது. ஏற்கெனவே இரு ஆண் ப... மேலும் பார்க்க

வாணியம்பாடி: கிணற்றில் மிதந்த 2 சிறுவர்களின் பிணம்; கிராமத்தையே அலறவிட்ட சம்பவம்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஆலங்காயம் பெத்தூர் கிராமத்தில், சுகுணா பிரகாசம் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணறு அமைந்திருக்கிறது. இந்த கிணற்றிலிருந்து நிலத்தின் உரிமையாளர் தண்ணீர்... மேலும் பார்க்க