செய்திகள் :

Toxic: "என் மகன் தீவிரவாதி இல்லை; அவர் பேருந்து ஓட்டுநரின் மகன்!" - யஷின் தாயார் பதில்

post image

நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'டாக்ஸிக்' திரைப்படம், எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்று வருகின்றது.

இப்படத்தின் ரிலீஸூக்குப் பிறகு சோஷியல் மீடியாவில் யஷ் குறித்து பகிரப்படும் விமர்சனங்களுக்கும், தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் யஷ் குறித்து சொன்ன விஷயத்திற்கும் யஷின் தாயார் புஷ்பா அருண் குமார் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

Toxic
Toxic

கடந்த 2023-ஆம் ஆண்டு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பேசுகையில், "கே.ஜி.எஃப் படத்திற்கு முன்பு யஷ் யார்? அவர் எவ்வளவு பெரிய ஹீரோ?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ஒரு படத்தின் பிரமாண்டமும் தயாரிப்பும்தான் அந்தப் படத்தை வெற்றிபெற வைப்பதாக அவர் கூறியிருந்தார். இந்த விவகாரம் அப்போது பெரும் பேச்சாக மாறிய நிலையில், தற்போது மீண்டும் இணையத்தில் வைரலானது.

இதுகுறித்து யஷின் தாயார் புஷ்பா, "என் மகன் ஒன்றும் தீவிரவாதி இல்லை. கே.ஜி.எஃப் படத்திற்கு முன்பே கன்னட சினிமாவில் 'கூக்ளி', 'டிராமா', 'மிஸ்டர் அண்ட் மிசஸ் ராமாச்சாரி' எனத் தொடர்ந்து ஐந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய முன்னணி நடிகராகத்தான் அவன் இருந்தான்.

அப்படி இருக்கும்போது, கே.ஜி.எஃப்-க்கு முன்பு யஷ் யார் என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை. என் மகன் சினிமா பின்னணியோ அல்லது பண பலமோ உள்ள குடும்பத்தில் பிறந்தவன் அல்ல. அவன் ஒரு பேருந்து ஓட்டுநரின் மகன்.

Yash with his mother
Yash with his mother

தனது சொந்த உழைப்பாலும் திறமையாலும் மட்டுமே இந்த உயரத்தை அடைந்திருக்கிறான். ஒரு தாயாக அவனை நினைத்துப் பெருமைப்படுகிறேன்" என்றவர், "யஷ் யார், எங்கிருந்து வந்தான் என்று கேள்வி கேட்பவர்களுக்கு அவர்களின் மொழியிலேயே பதில் சொல்ல எனக்குத் தெரியும்.

ஆனால், அதைத் துணிச்சலோடு நேருக்கு நேர் கேட்க வேண்டும். என் மகனின் வளர்ச்சியைத் தடுக்கவும், அவன் நடிப்பில் வெளியாகியுள்ள 'டாக்ஸிக்' படத்திற்கு எதிராகத் திட்டமிட்டு சிலர் தவறான பிரச்சாரங்களைச் செய்து வருகிறார்கள்.

ஆனால், மக்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவு இருக்கும் வரை என் மகனின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது" எனப் பேசியிருக்கிறார்.

Toxic: 'டாக்ஸிக்' படத்தை எதிர்மறையாக விமர்சனம் செய்தால் நோட்டீஸ் அனுப்பப்படுகிறதா!? - பின்னணி என்ன?

யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் அளித்த யூடியூபர்கள் மற்றும் சோஷியல் மீடியா கிரியேட்டர்களுக்குப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி வருவதாக வெ... மேலும் பார்க்க

Toxic Review: ஒன்லி ஆக்ஷன், நோ எமோஷன் - எப்படியிருக்கிறது யஷ்ஷின் `டாக்சிக்' பிரமாண்டம்?

கோவா, போர்த்துக்கீசியர்களின் பிடியிலிருக்கும் சமயத்தில் தன் தம்பி ராயா (யஷ்) தான், அடுத்து கோவாவை ஆட்சி செய்ய வேண்டும் என விரும்புகிறார் அக்கா கங்கா (நயன்தாரா). பிறகு கோவாவில் சர்க்கஸ் அமைக்க வரும் நா... மேலும் பார்க்க

Toxic: 'Daddy's home' - யஷ் முதல் ருக்மினி வசந்த் வரை; 'டாக்ஸிக்' பட நிகழ்வு | Photo Album

நடிகர் யஷ் பேசும்போது சரிந்து விழுந்த ஸ்பீக்கர்; 'Toxic' பட விழாவில் விபத்து; மாணவர்கள் காயம் மேலும் பார்க்க

நடிகர் யஷ் பேசும்போது சரிந்து விழுந்த ஸ்பீக்கர்; 'Toxic' பட விழாவில் விபத்து; மாணவர்கள் காயம்

நடிகர் யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி, ஹைதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டி பல்கலைக்கழகத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்... மேலும் பார்க்க

Toxic: "சினிமாவை சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள்; நாங்கள் ஒன்றும்..." - 'டாக்ஸிக்' பட விழாவில் யஷ்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டாக்ஸிக்’. இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் ... மேலும் பார்க்க

Toxic: "அதில் என் மனைவிக்கு சங்கடம் இருக்க தான் செய்யும்.!" - ரொமேன்ஸ் காட்சிகள் குறித்து யஷ்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' படம், இம்மாதம் 26-ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் பேன் இந்தியா படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் ஆகியோர் மு... மேலும் பார்க்க