"கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?" - திமுக ஊழல் ஆதாரம் குறித்த கேள்விக்கு அருண்ராஜ...
நடிகர் யஷ் பேசும்போது சரிந்து விழுந்த ஸ்பீக்கர்; 'Toxic' பட விழாவில் விபத்து; மாணவர்கள் காயம்
நடிகர் யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி, ஹைதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டி பல்கலைக்கழகத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆயிரக்கணக்கான மாணவர்களும், ரசிகர்களும் திரண்டிருந்தனர். நிகழ்ச்சியின்போது நடிகர் யஷ் மேடையில் ரசிகர்களிடையே உரையாற்றியபோது மேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ராட்சத ஸ்பீக்கர் பெட்டியும், விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த இரும்புச் சட்டகமும் திடீரென சரிந்து, அருகிலிருந்த மாணவர்கள் மீது விழுந்தன.
இதில் இருவர் காயமடைந்தனர். ஒரு மாணவி மயக்கமடைந்தார். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் கொண்டு செல்லப்பட்டனர்.
అంతా ఓకేనా? అందరూ సేఫ్ కదా?
— TeluguOne (@Theteluguone) August 23, 2026
ఫ్యాన్స్ SAFETY కోసం స్పీచ్ ఆపేసిన @TheNameIsYash#Toxic#Yashpic.twitter.com/TIZSwP4bGp
கூட்டத்தில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கவனித்த நடிகர் யஷ், தனது பேச்சை நிறுத்தி மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று விசாரித்தார். பெரிய அளவில் அசம்பாவிதம் எதுவும் இல்லை என ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்த பிறகே அவர் தனது பேச்சைத் தொடர்ந்தார்.
முன்னதாக, கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் நெரிசலைத் தவிர்க்கவும் மாணவர்களைப் பின்னோக்கி நகருமாறு காவல்துறை எச்சரித்திருந்தும், பலர் மேடையின் அருகிலேயே திரண்டிருந்தனர்.
கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக மாணவர்கள் மேடையின் அருகில் நெருங்கியதும், ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டிருந்த அமைப்புகளின் மீது சிலர் ஏற முயன்றதுமே இந்த விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.














