செய்திகள் :

BWF உலக சாம்பியன்ஷிப்: இறுதி வரை போராடிய ட்ரீசா–காயத்ரி… வெண்கலம் வென்று அசத்தல்

post image

புதுடெல்லி: உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து வரலாறு படைக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டாலும், இந்திய பேட்மிண்டனுக்கு பெருமை சேர்த்திருக்கிறது ட்ரீசா ஜாலி–காயத்ரி கோபிசந்த் ஜோடி. சீனாவின் நம்பர் 1 ஜோடியிடம் அரையிறுதியில் போராடி தோல்வியடைந்த இந்திய ஜோடி, வெண்கலப் பதக்கத்துடன் தொடரை நிறைவு செய்தது.

புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில், உலகின் நம்பர் 1 ஜோடியான லியு ஷெங்ஷு–டான் நிங் ஜோடியை ட்ரீசா–காயத்ரி எதிர்கொண்டனர்.

முதல் கேமில் அசத்திய இந்திய ஜோடி

போட்டி தொடக்கம் முதலே இரு ஜோடிகளும் கடுமையாகப் போராடினர். முக்கியமான கட்டங்களில் நிதானமாக விளையாடிய ட்ரீசா–காயத்ரி, சீன ஜோடியின் தாக்குதல் ஆட்டத்துக்கு திறம்பட பதிலடி கொடுத்தனர். தொடர்ந்து புள்ளிகளைக் கைப்பற்றிய இந்திய ஜோடி, முதல் கேமை 21–18 என்ற கணக்கில் கைப்பற்றி 1–0 என முன்னிலை பெற்றது.

ஆட்டத்தை சமன் செய்த சீனா

இரண்டாவது கேமிலும் தொடக்கத்தில் இரு ஜோடிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் கேம் முன்னேறியபோது லியு–டான் ஜோடி வேகத்தை அதிகரித்தது. இந்திய வீராங்கனைகளின் தாக்குதல் ஆட்டத்தை கட்டுப்படுத்திய சீன ஜோடி, தொடர்ந்து புள்ளிகளைக் குவித்தது.

இதனால் இரண்டாவது கேமை 21–13 என வென்ற லியு–டான், போட்டியை 1–1 என சமன் செய்தது.

தீர்மானிக்கும் கேமில் ஆதிக்கம்

வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது கேமில் ஆரம்பம் முதலே சீன ஜோடி ஆதிக்கம் செலுத்தியது. அவர்களின் வேகம் மற்றும் துல்லியமான ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க ட்ரீசா–காயத்ரி முயன்றபோதிலும், புள்ளி வித்தியாசத்தை குறைக்க முடியவில்லை.இறுதியில் 21–8 என மூன்றாவது கேமையும் கைப்பற்றிய லியு ஷெங்ஷு–டான் நிங் 2–1 என்ற கேம் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம்

காலிறுதியில் உலக தரம் 4-இல் உள்ள சீன ஜோடியான ஜியா யி ஃபான்–ஜாங் ஷு ஷியான் அணியை 16–21, 21–15, 21–13 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்திருந்தனர்.

இதன்மூலம் 2011-ல் ஜ்வாலா குட்டா–அஷ்வினி பொன்னப்பா வெண்கலம் வென்ற பிறகு, உலக சாம்பியன்ஷிப் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது.

"வறுமையை உதைத்துத் தள்ளிய கால்பந்து வீரங்கனை"- ஸீனாவின் வரலாறு கேரள பாடத்திட்டத்தில் இடம்பிடித்தது!

கேரள மாநிலம், எர்ணாகுளம் சளிக்கம்வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சி.வி.ஸீனா. தற்போது 56 வயதாகும் அவரது விடாமுயற்சி நிறைந்த வாழ்க்கை, கேரள அரசின் 11-ம் வகுப்பு மலையாளப் பாடப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.... மேலும் பார்க்க

BWF: உலக சாம்பியனையே வீழ்த்திய ஆயுஷ் ஷெட்டி; முதல் நாளிலேயே 5-க்கு 5; இந்தியாவின் மிரட்டல் தொடக்கம்!

புதுடெல்லியில் நடைபெற்று வரும் 2026 BWF உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறார் இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி. ஆண்கள் ஒற்றையர் பிரிவ... மேலும் பார்க்க

ஆலப்புழா: கோப்பையின் பின்னால் மறைந்திருக்கும் நிதிச் சுமை; புகழ்பெற்ற படகுப் போட்டிகளின் மறுபக்கம்!

கேரளாவின் ஆலப்புழை மாவட்டம், கைனகரி கிராமத்தின் படகு சங்கம் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டது."முப்பத்தைந்து ஆண்டு இடைவெளி... ஒரே இரவில் கை நழுவிய சாம்பியன் அணி... ஆனாலும் தோற்றுப்போக மறுத்த ஒரு அணி!" — 2... மேலும் பார்க்க

மீண்டும் சர்வதேச டென்னிஸ் மேடையாகும் சென்னை... நவம்பரில் தொடங்குகிறது WTA 250!

சென்னை நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் மைதானத்தில், வரும் நவம்பர் 2 முதல் 8-ம் தேதி வரை WTA 250 சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும், மொத்தத்தில் மூன்... மேலும் பார்க்க

சேலம் விறகு வியாபாரியின் மகள் காமன்வெல்த் வாள்வீச்சில் வரலாற்றுச் சாதனை! யார் இந்த கனகலட்சுமி?

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்தவர் பரஞ்சோதி. விறகு வியாபாரியான இவரின் மகள் கனகலட்சுமி வாள்வீச்சில் திறமை வாய்ந்த வீராங்கனையாக சிறு வயது முதலே களமாடி வருகிறார். தமிழ்நாடு அளவில் நடைபெற்ற வாள்வீச்ச... மேலும் பார்க்க

சீறிப்பாய்ந்த குதிரைகள்; அசரவைத்த போட்டியாளர்கள் - ஈரோட்டில் கவனம் ஈர்த்த குதிரையேற்றப் போட்டி!

ஈரோடு, திண்டலில் உள்ள ஹார்ஸ் ரைடிங் கிளப்பில் ஆகஸ்ட் 9, 10 ஆகிய இரண்டு நாள்கள் அகில இந்திய அளவிலான குதிரையேற்றப் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது.ஈரோட்டில் முதன்முறையாக நடைபெற்ற இப்போட்டியில், ஊட்டி, ம... மேலும் பார்க்க