செய்திகள் :

'கண்ணின் இமை போல என்னைக் காத்து' - 41வது திருமண நாளில் மனைவியை நினைவுகூர்ந்த ஜேடிசி பிரபாகர்

post image

ஆயிரம் விளக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான ஜே.சி.டி. பிரபாகரின் மனைவி கிரேஸ் ஜெயந்தி கடந்த 2023-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். இவர்களுக்கு இன்று 41-வது திருமண நாள்.

JCD Prabhakar - Grace Jayanthi
JCD Prabhakar - Grace Jayanthi

அதையொட்டி, கிரேஸ் ஜெயந்தியின் கல்லறையில் அஞ்சலி செலுத்தி, அவரை நினைவுகூர்ந்திருக்கிறார் ஜே.சி.டி. பிரபாகர்.

41-வது திருமண நாளையொட்டி அவருடைய மனைவி குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், "41 ஆண்டுகள்… ஒரு திருமண வாழ்க்கையின் நினைவுகள் மட்டுமல்ல; என் வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் என்னுடன் பயணிக்கும் அன்பின் நினைவுகள்.

கண்ணின் இமை போல என்னைக் காத்து, அன்பிலும் அக்கறையிலும், ஆலோசனைகளிலும், வழிகாட்டுதலிலும் என்னை அரவணைத்த என் வாழ்க்கைத் துணையை, இந்த 41-ஆம் திருமண நாளில் நெஞ்சம் நிறைந்த அன்புடன் நினைவுகூர்கிறேன்.

என் இன்பத்திலும் துன்பத்திலும், வெற்றியிலும் சோதனைகளிலும் என்னுடன் நின்ற அந்த அன்பும் அரவணைப்பும் என் வாழ்வின் மிகப் பெரிய வரம். காலம் கடந்தாலும் சில உறவுகள் மறைவதில்லை.

அவை நினைவுகளாக மட்டும் இல்லாமல், நம் வாழ்வின் ஒரு பகுதியாகவே தொடர்ந்து வாழ்கின்றன. இன்று அவர் என்னுடன் இல்லை. ஆனால், அவர் தந்த அன்பும், அவர் விட்டுச் சென்ற நினைவுகளும் என் ஒவ்வொரு நாளிலும் என்னுடன் இருக்கின்றன.

41 ஆண்டுகள் கடந்தாலும், உன்னை நினைக்கும் அன்பும் நன்றியும் என்றும் மாறாது. என்றும் என் நெஞ்சில்…" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

"இப்போ அவர் ரீல்ஸ் பண்றாரு; இந்த நோயை முதல்ல இறக்கி வைப்போம்!" - சென்னையில் பிரகாஷ் ராஜ்

சென்னையில் நடைபெற்ற அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டில், பாஜக அரசை விமர்சித்தும், ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்தும் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியிருக்கிறார்.Prakash Rajஅந்த மாநாட்டில் பிரகாஷ் ராஜ் பேச... மேலும் பார்க்க

"இனியும் தாமதிக்காமல் ஆணவக்கொலைக்கு எதிரான தனிச்சட்டம் இயற்ற வேண்டும்" - நீலம் பண்பாட்டு மையம்

கேளம்பாக்கம் தையூரில் 22 வயதான பிரவீன் என்பவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியைக் கைதுசெய்ய இளைஞர்கள் பலர் ஓ.எம்.ஆர் பகுதியி... மேலும் பார்க்க

`துகாராமுக்கு நன்றி' - அதிரடி ரெய்டுகள்; சுத்தத்துக்கு மாறும் மும்பை ஹோட்டல்கள், வடாபாவ் கடைகள்!

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக ஐ.ஏ.எஸ் அதிகாரி துகாராம் முண்டே பதவிக்கு வந்த பிறகு மாநிலம் முழுவதும் அதிரடி ரெய்டு நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் பால் கலப்படத்திற்கு எதிராக... மேலும் பார்க்க

தலைமைச் செயலக கட்டடப் பணி: ``எந்த விதிமீறலும் இல்லை" - தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் மேற்கோள்ளப்படும் கட்டடப் பணிகள் மற்றும் ஒப்பந்தப் புள்ளிகள் தொடர்பாக ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு விள... மேலும் பார்க்க

"கஜானா காலி எனக் கூறிவிட்டு முதல்வர் இதை அறிவிக்கிறார்!" - கேள்வி எழுப்பும் திமுக எழிலன்

விசிக சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி கோரிக்கையைத் தொடர்ந்து முதல்வர் விஜய், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனமும், அந்த வாகனத்தைப் பராமரிக்கத் தொகையும், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கென நியமித்துக் கொள்ள... மேலும் பார்க்க

'திமுக கூட்டத்தில் பங்கேற்ற ஷாநவாஸ் விசிக மாநாட்டை புறக்கணித்தது ஏன்?' - குமுறும் விசிக தொண்டர்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டில் பங்கேற்காதது கட்சிக்குள் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. 'ஷாநவாஸிடம் கட்சித் தலைவர் திருமா விளக்கம் கேட்க... மேலும் பார்க்க