செய்திகள் :

'நிறைய பேருக்கு நீரிழிவு நோய்; எனவே சர்க்கரை விலை உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது' - பீகார் அமைச்சர்

post image

நாட்டில் சர்க்கரை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ சர்க்கரை விலை 65 ரூபாயை தாண்டிவிட்டது. இதனால் மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து வரி இல்லாமல் சர்க்கரை இறக்குமதிக்கு அனுமதி கொடுத்து இருக்கிறது. நாட்டில் போதிய மழை இல்லாத காரணத்தால் சர்க்கரை உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சர்க்கரை விலை உயர்வு குறித்து பீகார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஸ்ராவன் குமார் தெரிவித்து இருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சர்க்கரை விலை உயர்வு குறித்து அவர் அளித்த பேட்டியில்,''நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சர்க்கரை எடுத்துக்கொள்வது குறைவாக இருக்கிறது.

ஒவ்வொருவரும் நீரிழிவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் சர்க்கரை விலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நினைக்கிறேன். எனவே சர்க்கரை விலை உயர்வு குறித்து கவலைப்பட வேண்டியதில்லை''என்றார்.

அமைச்சரின் இக்கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அமைச்சரின் கருத்து வைரலாகி இருக்கிறது. அமைச்சரின் கருத்து குறித்து பீகார் சுயேட்சை எம்பி பப்பு யாதவ் கூறுகையில், ``சர்க்கரை விலை உயர்வு குறித்த அமைச்சரின் வினோதமான விளக்கம் கண்டிக்கத்தக்கது.

எவ்வளவு நெய் ஊற்றினாலும் மாட்டுச் சாணமே ருசியாக இருக்கும். இப்படிப்பட்ட அமைச்சரிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? காஸ், தக்காளி விலை ஏறியபோது ஸ்மிருதி இரானி உட்பட பல முக்கிய தலைவர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் இன்று சர்க்கரை விலை உயரும்போது சர்க்கரை நோய் என்று பேசுகிறார்கள். மிகப்பெரிய சர்க்கரை நோய் அரசுதான்" என்று தெரிவித்தார்.

விலை உயர்வு மகிழ்ச்சியளிக்கிறது

பீகார் அமைச்சர் விஜய் குமார் சின்ஹாவும் விலை உயர்வை ஆதரித்து பேசி இருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ``விவசாயிகளின் உற்பத்தி விலை உயரும்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன். சர்க்கரை விலையில் கணிசமான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது, இதற்கான காரணத்தை விசாரிக்க வேண்டும். சர்க்கரை உற்பத்திக்கு பொறுப்பான அமைச்சர் ஒருவர் இருக்கிறார். இது குறித்து அவரிடம் தகவல் கேட்போம். விவசாயிகளின் விளைபொருட்களின் விலை உயரும்போது தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்றார்.

`இன்னும் உயிரோட இருக்கிறாரா?' - 38 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 105 வயது முதியவரை விடுவிக்க உத்தரவு

மேற்கு வங்கத்தில் ஒரு முதியவர் தனது 105 வயதில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1920ம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம் தொடங்கிய ஆண்டில் பிறந்த ராசிக் சந்திர மண்... மேலும் பார்க்க

ரூ.335 கோடிக்கு அயர்லாந்தில் 19-ம் நூற்றாண்டு கோட்டையை வாங்கிய மார்க் சக்கர்பெர்க்! - என்ன ஸ்பெஷல்?

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க், அயர்லாந்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். தென்கிழக்கு அயர்லாந்தில் அமைந்துள்ள 'ஸ்ட்ரான்சலி கோட்டை' ... மேலும் பார்க்க

திருப்பூரில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்! Photo Album

திருப்பூரில் கல்லூரி மாணவ மாணவிகள் ஓணம் கொண்டாட்டம்திருப்பூரில் கல்லூரி மாணவ மாணவிகள் ஓணம் கொண்டாட்டம்திருப்பூரில் கல்லூரி மாணவ மாணவிகள் ஓணம் கொண்டாட்டம்திருப்பூரில் கல்லூரி மாணவ மாணவிகள் ஓணம் கொண்டாட... மேலும் பார்க்க

`லாபத்தில் 10% பங்கு கேட்டார்'- ஸ்பிரிட் படத்திலிருந்து தீபிகா படுகோனே நீக்கப்பட்டதன் பின்னணி என்ன?

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஆரம்பத்தில் ஸ்பிரிட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் இப்படத்தில் நடிக்க தீபிகா படுகோனோ பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். பகலில் மட்டும் 8 மணி நேரம் ... மேலும் பார்க்க

பாலியே அமைதியாகும் ஒரு நாள்... ‘Nyepi’யை அவமதித்த சுற்றுலாப் பயணிக்கு ஓராண்டு சிறை!

ஓராண்டு சிறை! பாலி சுற்றுலாப் பயணிக்கு நடந்தது என்ன?Instagram-ல் ஒரு பதிவு...பாலியில் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் ‘ந்யேபி’ (Nyepi) அமைதியின் நாளன்று, அதன் விதிகளை மீறி சமூக வலைதளத்தில் அவதூறு வீடி... மேலும் பார்க்க

Vikram: கிப்பன் குரங்கு விவகாரம்; ஆப்பிரிக்க பூனை உட்பட 11 விலங்குகளை வண்டலூருக்கு மாற்றும் வனத்துறை

அரிய வகை மனித குரங்கு இனமான லார் கிப்பன் குட்டியுடன் விளையாடிய வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கினார், நடிகர் விக்ரம். வனத்துறையினரால் அடுத்தடுத்து நடத்தப்பட்ட விச... மேலும் பார்க்க