செய்திகள் :

"சென்னையில் எங்கும் எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள்" - சென்னை தினத்தில் ஸ்டாலின்

post image

இன்று சென்னை தினம். அதுவும் 387-வது சென்னை தினம்.

சென்னை தினம் குறித்து தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவு...

"இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387!

101 அடி பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும், விமானத்தில் அமர்ந்துகொண்டு எட்டிப் பார்த்தாலும், தரையில் இருந்து பார்த்தாலும், சாலைக்கு அடியில் ஓடும் வடிகால்களைப் பார்த்தாலும் சென்னையில் எங்கும் எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள் இருக்கும்; தி.மு.க.வின் சாதனைகள் மட்டும்தான் இருக்கும்!

ஸ்டாலின் பகிர்ந்துள்ள புகைப்படம்
ஸ்டாலின் பகிர்ந்துள்ள புகைப்படம்

மேம்பாலங்கள், கோட்டங்கள், பூங்காக்கள், நவீன பேருந்து முனையங்கள், மெட்ரோ இரயில், IT Park, FinTech Tower, வானுயர்ந்து நிற்கும் மருத்துவமனை - நூலகக் கட்டடங்கள் எனக் கடந்த 60 ஆண்டுகாலச் சென்னை வரலாற்றை இரசித்து இரசித்துச் செதுக்கியவர்கள் நாங்கள்.

சட்டமன்ற உறுப்பினராக, மாநகரத் தந்தையாக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக என அத்தனை நிலைகளிலும் சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்!

தருமமிகு அன்புமிகு சென்னை வாழ்க!"

`சட்டமன்ற நேரலை பார்த்தோம்; JCD பிரபாகர் சிறப்பு என்றார்' - ஸ்டாலின் சந்திப்பு குறித்து வைரமுத்து

நேற்று திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து. இந்தச் சந்திப்பில் இருவரும் சட்டமன்றம் குறித்துப் பேசிக்கொண்டதைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வைரமுத்து.வைரமுத்துவின் பதி... மேலும் பார்க்க

கனடா குருத்வாராவில் தாக்குதல்: 2 பேர் காயம்; ஒருவர் கைது - Ideology கிரைமா இது?

கனடாவின் உள்ளூர் நேரப்படி, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) காலை 5 மணிக்கு, எட்மன்டனின் உள்ள நானக்சர் குருத்வாராவில் தாக்குதல் நடந்துள்ளது.இந்தத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.இந்தச் சம்பவத்திற்குக் கா... மேலும் பார்க்க

`ஹார்முஸ் அமெரிக்காவின் பிராந்தியமா?' - ட்ரம்ப் புதிய அதிரடி பேச்சு

இதுவரை ஹார்முஸ் நீர்ச்சந்தியை அமெரிக்காவின் பிராந்தியமாக மாற்றப் போகிறேன் என்றுதான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வந்தார்.ஆனால், தற்போது அமெரிக்காவின் பிராந்தியமாகவே ஹார்முஸ் நீர்ச்சந்தி ஆகிவிட்டது என்... மேலும் பார்க்க

"உலக நாடுகள் அமெரிக்காவின் தடைகளை பின்பற்றுவது, அவர்களுக்கு அடிபணிவதற்கு சமம்!" - ஈரான்

ஈரானுக்கு எதிராக ‘பொருளாதார D-Day’-வை அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.இதன் கீழ், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கும்.அமெரிக்காவின் இந்த அறிவ... மேலும் பார்க்க

’திமுக எம்.எல்.ஏ-க்கள் கார் வாங்க மறுத்ததற்கு இதுதான் காரணம்.!’ – செங்கோட்டையன் சொன்ன விளக்கம்

கோவை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சட்டமன்றத்தில் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். பேரவை தலைவர், த... மேலும் பார்க்க