செய்திகள் :

`இனி மா.செ எண்ணிக்கை 110... அதிகபட்ச வயது 70; பதவிகளுக்கு புது ரூல்ஸ்!' - திமுக செயற்குழுவில் அதிரடி

post image

தமிழ்நாட்டின் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதற்குச் சொல்லப்படும் முக்கியக் காரணங்களில் ஒன்று - திமுக சீனியர்கள் இன்னும் இளைஞர்களுக்கு வழிவிடாததே ஆகும்.

இந்த மாதிரியான குறைகளைக் கண்டுபிடிக்கக் குழு ஒன்றை அமைத்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

அந்தக் குழுவின் பரிந்துரைப்படி, இன்று (ஆகஸ்ட் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் - திமுக

>‌ கழகத்தின் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, கிளைக்கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக்கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.

> சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரங்களிலும், சூழலுக்கு ஏற்ப பிற மாநகராட்சிகளிலும் வட்டக்கழகங்களை வலிமைப்படுத்திடக் கிளைக்கழகம் அமைக்கப்படுகிறது. 45 வயதுக்கு மிகாதவர் கிளைச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே இப்பொறுப்பை வகிக்க முடியும்.

> சென்னை மாநகராட்சியின் வட்டக்கழகங்கள் சராசரியாக 10 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் சராசரியாக 5 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். மாநகர-நகர-பேரூர் வட்டக்கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.

> பேரூர் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே பொறுப்பை வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது.

அறிவாலயம்
அறிவாலயம்

சென்னை மாநகராட்சியில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். பகுதிக் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.

> நகரக் கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகளைக் கொண்டிருக்கும். நகரக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது.

> சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் உருவாக்கப்பட வேண்டும். ஒன்றியக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.

> வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. பிரிக்கும்போது ஒரு தொகுதி மட்டும் எஞ்சியிருப்பின் அதே வருவாய் மாவட்டத்தில் பொருத்தமான கழக மாவட்டத்துடன் மூன்றாவது தொகுதியாக இணைக்கப்படும். மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது.ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும். இனி மாநகரச் செயலாளர் என்ற பொறுப்பு இருக்காது.

திமுக / ஸ்டாலின் / உதயநிதி ஸ்டாலின்
திமுக / ஸ்டாலின் / உதயநிதி ஸ்டாலின்

> கழகத்தலைவர் 110 மாவட்டங்களை அறிவித்தவுடன், மாவட்டச் செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளின்படி 15 நாட்களுக்குள் ஒன்றியம்-நகரம்-பகுதி-வட்டக்கழகங்கள் பிரிக்கப்பட வேண்டும். தலைமைக்கழகத்தால் அனுப்பி வைக்கப்படும் பிரதிநிதி முன்னிலையில் மீண்டும் மாவட்டச் செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு, பிரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டுத் தலைமைக்கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

‘இந்தியாவிலேயே எங்கும் 'இது' நடந்திருக்காது; தலைமைச் செயலாளர் பதவி விலக வேண்டும்' - பெ.சண்முகம்

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக இடதுசாரிகளுக்கு எதிரான சில காட்சிகள் அரங்கேறின.இதை எதிர்த்து இன்று (22.08.2026) தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டனப் போராட்டத்தை நடத்தியது மார்க்சிஸ்ட் கம... மேலும் பார்க்க

"சென்னையில் எங்கும் எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள்" - சென்னை தினத்தில் ஸ்டாலின்

இன்று சென்னை தினம். அதுவும் 387-வது சென்னை தினம். சென்னை தினம் குறித்து தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவு..."இருப... மேலும் பார்க்க

`சட்டமன்ற நேரலை பார்த்தோம்; JCD பிரபாகர் சிறப்பு என்றார்' - ஸ்டாலின் சந்திப்பு குறித்து வைரமுத்து

நேற்று திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து. இந்தச் சந்திப்பில் இருவரும் சட்டமன்றம் குறித்துப் பேசிக்கொண்டதைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வைரமுத்து.வைரமுத்துவின் பதி... மேலும் பார்க்க

கனடா குருத்வாராவில் தாக்குதல்: 2 பேர் காயம்; ஒருவர் கைது - Ideology கிரைமா இது?

கனடாவின் உள்ளூர் நேரப்படி, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) காலை 5 மணிக்கு, எட்மன்டனின் உள்ள நானக்சர் குருத்வாராவில் தாக்குதல் நடந்துள்ளது.இந்தத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.இந்தச் சம்பவத்திற்குக் கா... மேலும் பார்க்க

`ஹார்முஸ் அமெரிக்காவின் பிராந்தியமா?' - ட்ரம்ப் புதிய அதிரடி பேச்சு

இதுவரை ஹார்முஸ் நீர்ச்சந்தியை அமெரிக்காவின் பிராந்தியமாக மாற்றப் போகிறேன் என்றுதான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வந்தார்.ஆனால், தற்போது அமெரிக்காவின் பிராந்தியமாகவே ஹார்முஸ் நீர்ச்சந்தி ஆகிவிட்டது என்... மேலும் பார்க்க