செய்திகள் :

‘இந்தியாவிலேயே எங்கும் 'இது' நடந்திருக்காது; தலைமைச் செயலாளர் பதவி விலக வேண்டும்' - பெ.சண்முகம்

post image

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக இடதுசாரிகளுக்கு எதிரான சில காட்சிகள் அரங்கேறின.

இதை எதிர்த்து இன்று (22.08.2026) தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டனப் போராட்டத்தை நடத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

சென்னையில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் பெ. சண்முகம், ``இடதுசாரி மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கவும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை ஒடுக்கவும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு வன்மையான கண்டனத்திற்குரியது.

சிபிஎம் போராட்டம்
சிபிஎம் போராட்டம்

கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி, தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற சட்டம்-ஒழுங்கு குறித்த கூட்டத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவின் அடிப்படையில், கல்லூரி கல்வி ஆணையர் மற்றும் உயர்கல்வித்துறைச் செயலாளர் ஆகியோர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குச் சுற்றறிக்கைகளை அனுப்பியுள்ளனர்.

ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்றதொரு சம்பவம் இந்தியாவிலேயே வேறு எங்கும் நடைபெற்றது இல்லை. தலைமைச் செயலாளரின் இந்த நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது.

ஜனநாயகத்திற்கும் அரசியல் சாசனத்திற்கும் விரோதமாகச் செயல்படும் அவர், தலைமைச் செயலாளர் என்ற உயர் பதவியில் நீடிப்பதற்கு தகுதியுமற்றவர். ஆகவே, 'தமிழக அரசு உடனடியாக அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்". என்றார்.

`இனி மா.செ எண்ணிக்கை 110... அதிகபட்ச வயது 70; பதவிகளுக்கு புது ரூல்ஸ்!' - திமுக செயற்குழுவில் அதிரடி

தமிழ்நாட்டின் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதற்குச் சொல்லப்படும் முக்கியக் காரணங்களில் ஒன்று - திமுக சீனியர்கள் இன்னும் இளைஞர்களுக்கு வழிவிடாததே ஆகும்.இந்த மாதிரியான... மேலும் பார்க்க

"சென்னையில் எங்கும் எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள்" - சென்னை தினத்தில் ஸ்டாலின்

இன்று சென்னை தினம். அதுவும் 387-வது சென்னை தினம். சென்னை தினம் குறித்து தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவு..."இருப... மேலும் பார்க்க

`சட்டமன்ற நேரலை பார்த்தோம்; JCD பிரபாகர் சிறப்பு என்றார்' - ஸ்டாலின் சந்திப்பு குறித்து வைரமுத்து

நேற்று திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து. இந்தச் சந்திப்பில் இருவரும் சட்டமன்றம் குறித்துப் பேசிக்கொண்டதைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வைரமுத்து.வைரமுத்துவின் பதி... மேலும் பார்க்க

கனடா குருத்வாராவில் தாக்குதல்: 2 பேர் காயம்; ஒருவர் கைது - Ideology கிரைமா இது?

கனடாவின் உள்ளூர் நேரப்படி, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) காலை 5 மணிக்கு, எட்மன்டனின் உள்ள நானக்சர் குருத்வாராவில் தாக்குதல் நடந்துள்ளது.இந்தத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.இந்தச் சம்பவத்திற்குக் கா... மேலும் பார்க்க

`ஹார்முஸ் அமெரிக்காவின் பிராந்தியமா?' - ட்ரம்ப் புதிய அதிரடி பேச்சு

இதுவரை ஹார்முஸ் நீர்ச்சந்தியை அமெரிக்காவின் பிராந்தியமாக மாற்றப் போகிறேன் என்றுதான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வந்தார்.ஆனால், தற்போது அமெரிக்காவின் பிராந்தியமாகவே ஹார்முஸ் நீர்ச்சந்தி ஆகிவிட்டது என்... மேலும் பார்க்க