செய்திகள் :

Insidious: Out of the Further Review: அதிரடி க்ளைமாக்ஸும் அமானுஷ்யமும்! புதிய `இன்சிடியஸ்' எப்படி?

post image
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற `இன்சிடியஸ்' (Insidious) ஹாரர் யுனிவர்ஸில் ஆறாவது பாகமாக வந்திருக்கிறது `இன்சிடியஸ்: அவுட் ஆஃப் தி ஃபர்தர்'. `தி ரெட் டோர்' படத்துக்குப் பிறகு நடக்கும் இந்தக் கதை, லேம்பர்ட் குடும்பத்தைத் தாண்டி வேறொரு குடும்பத்தின் கதையைப் பேசுகிறது.
Insidious: Out of the Further Review

தாயின் துர்மரணத்துக்குப் பின், தன் பழைய வீட்டிலேயே மகள் மாயாவுடன் வசிக்கிறார் பல் மருத்துவர் ஜெம்மா. அங்கே அந்த வீட்டில் அமானுஷ்ய நிகழ்வுகள் அரங்கேற, மறைந்த அமானுஷ்ய ஆராய்ச்சி நிபுணர் எலிஸின் (Elise) ஆன்மாவின் உதவியுடன் தன்னைப் பற்றிய உண்மையை அறிகிறார். அதாவது ஆன்மாக்களின் உலகத்திற்கு (The Further) சென்று வருவது மட்டுமன்றி, நிஜ உலகத்திலிருந்து அங்கும், அங்கிருந்து நிஜ உலகிற்கும் எந்தப் பொருட்களையும் எடுத்துவரும் 'கூரியர்' (Courier) என்ற அபூர்வ சக்தி தனக்கு இருப்பதை உணர்கிறார் ஜெம்மா. அவரின் இந்தச் சக்தியைப் பயன்படுத்தி நிஜ உலகைக் கைப்பற்றத் துடிக்கும் அசுர ஆன்மாக்களிடமிருந்து ஜெம்மாவும் அவரது மகளும் தப்பித்தார்களா, அவர்களுக்கு எலிஸ் எப்படித் துணையாக நிற்கிறார் என்பதே திகில் நிறைந்த திரைக்கதை.

கதாநாயகியாக அமிலியா ஈவ் மற்றும் அவரது மகளாக நடித்திருக்கும் ஐலேண்ட் ஆஸ்டின் ஆகிய இருவரும் பயத்தையும் எமோஷனையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி முழுப் படத்தையும் தாங்கிப் பிடிக்கிறார்கள். வழக்கம்போல 'எலிஸ்' பாத்திரத்தில் வரும் லின் ஷே, தனது அனுபவமிக்க கம்பீர நடிப்பால் தோன்றும் இடங்களிலெல்லாம் சிலிர்க்க வைக்கிறார். அதேசமயம், நாயகியின் காதலனாக வரும் போலீஸ் அதிகாரி பாத்திரம், வழக்கமான ஹாலிவுட் சினிமாக்களின் டெம்ப்ளேட் எல்லைக்குள்ளேயே நின்றுவிடுகிறது. கிளேராக இவர்களுக்கு உதவும் மைஸி ரிச்சர்ட்ஸன்-செல்லர்ஸ் ஆறுதல்!

Insidious: Out of the Further Review
ஒலி வடிவமைப்பு (Sound Editing) மற்றும் பேய்களுக்கான விஷுவல் எஃபெக்ட்ஸ் (Ghost SFX) படத்திற்கு மிகப்பெரிய பலம். வெறும் சத்தங்களால் மட்டும் மிரட்டாமல், சூழலின் நிசப்தத்தைக் கொண்டே பயத்தை மெல்ல மெல்ல ரசிகர்களிடம் கடத்தும் யுக்தியை இயக்குநர் ஜேக்கப் சேஸ் திறம்படக் கையாண்டிருக்கிறார்.
`இன்சிடியஸ்' உலகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறது இந்தப் பாகம். ஆன்மாக்களின் உலகத்திற்குச் சென்று வருபவர்களை (Travellers) மட்டுமே பார்த்த நமக்கு, இரு உலகங்களுக்கும் இடையே பொருட்களைப் பரிமாறும் `கூரியர்' கான்செப்ட் புதுமையான அனுபவம்.
Insidious: Out of the Further Review
Insidious: Out of the Further Review

தலையணை கோட்டைக்குள் விரிவடையும் அந்த ஹாரர் சேஸிங், நாய்க்கும் பேய்க்குமான அந்த 'ஸ்விட்ச்', நாயகி சந்திக்கும் முதல் திடுக்கிடல் எனத் திகில் காட்சிகள் அட்டகாசமாக ஒர்க்-அவுட் ஆகியுள்ளன. குறிப்பாக, எதிர்பாராத திருப்பங்களுடன் முடியும் அந்தப் பரபர க்ளைமாக்ஸ் திரையரங்கில் ஒரு நிறைவான ஹாரர் விருந்தைப் படைக்கிறது. துர் ஆன்மாவைச் சமாளிக்க ஜெம்மா எடுக்கும் அந்த முடிவு எதிர்பாராத மாஸ் சினிமா ட்விஸ்ட்!

அதே சமயம், சிங்கிள் மதர், இருண்ட குடும்ப வரலாறு என வழக்கமான ஹாலிவுட் டெம்ப்ளேட் பின்னணிக் கதையே இதிலும் தொடர்கிறது. ஜெம்மாவின் அம்மாவின் பார்வையில் வெளிப்படும் ட்விஸ்ட் நன்றாக இருந்தாலும், அதை எளிதில் யூகித்துவிட முடிகிறது. சில சுவாரஸ்யமான திருப்புமுனை காட்சிகள் சிறப்பாக எழுதப்பட்டிருந்தாலும், அவற்றை வழக்கமான பாணியிலேயே படமாக்கியுள்ளனர்.

Insidious: Out of the Further Review
Insidious: Out of the Further Review

பல் மருத்துவமனை காட்சிகளும், அதீத ரத்தம் தெறிக்கும் கோரமான காட்சிகளும் தேவையற்ற "ஃபில்லர்"களாகவே தோன்றுகின்றன. பேய்க்குத் துணைநிற்கும் மூன்று மனிதர்களின் பாத்திரம் வழக்கமானது என்றாலும், கடைசி அரை மணிநேரத்தில் அவர்களைச் சரியாகப் பயன்படுத்தி த்ரில்லைக் கூட்டியுள்ளனர்.

இன்சிடியஸ் ஃபிரான்சைஸுக்குப் புதியதொரு பாதையைக் காட்டி, அதை உயிர்ப்புடன் இருக்க வைத்திருக்கும் ஒரு மிரட்டலான ஹாரர் அனுபவம் இது!

Tom Holland: `ஸ்பைடர் மேனுக்கு கல்யாணம்' - நீண்ட நாள் காதலியான நடிகையை கரம்பிடித்தார்!

ஹாலிவுட் நட்சத்திரங்களான ஜெண்டயா (Zendaya) மற்றும் டாம் ஹாலண்ட் (Tom Holland) ஆகியோர் 'ஸ்பைடர்மேன்' படங்களில் ஜோடியாக நடித்து உலகளவில் பிரபலமானவர்கள். 2016 முதல் காதலித்து வந்த இந்த ஜோடி, தங்கள் ரகசிய... மேலும் பார்க்க

Spider-Man: Brand New Day Review: பிரெண்ட்லி நெய்பர்ஹுட் ஹீரோவாக கலங்கடிக்கும் பீட்டர் பார்க்கர்!

இளசுகளும் பெருசுகளும் ஒரே அளவில் கொண்டாடும் ஸ்பைடர் மேன், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளித்திரைக்குத் திரும்பியிருக்கிறார். கடந்த படத்தின் முடிவில், பீட்டர் பார்க்கர் யார் என்பதையே உலகம்... மேலும் பார்க்க