செய்திகள் :

"எம்பி-க்களே இல்லாத தவெக-வை எப்படி இந்தியாக் கூட்டணில் சேர்ப்பது?" - மாணிக்கம் தாகூர் கேள்வி

post image

கோவை விமானநிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது, “தற்போது 23 கட்சிகள் இந்தியாக் கூட்டணியில் தொடர்கின்றன.

தவெகவுக்கு எப்போது எம்.பிக்கள் வருகிறார்களோ, அப்போது நாங்கள் அவர்களை இந்தியாக் கூட்டணியில் இணைந்து கொள்ளச் சொல்லுவோம். எம்.பி.க்களே இல்லாத தவெகவை எப்படி இந்தியாக் கூட்டணில் தற்போது சேர்க்க முடியும்?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

விஜய்யைப் பொறுத்தவரை 106 இடங்கள் கிடைத்ததும், அவரை முதலில் தொடர்புகொண்டு பேசியது ராகுல் காந்தி. தான் முதல்வராக வேண்டும் என்பதற்காக ராகுல்காந்தியிடம் ஆதரவு கேட்டார் விஜய்.

தவெகவின் இன்றைய அமைச்சர்களுக்கு அது நன்றாகத் தெரியும். அவர்கள் அமைச்சர் ஆவதற்கும், ஆட்சி அமைப்பதற்கும் முதலில் ஆதரவு தெரிவித்தது காங்கிரஸ் கட்சி. இல்லாவிட்டால், அமித்ஷா தவெக ஆட்சியை வர விடாமல் செய்திருப்பார்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

கட்சியை உடைத்து, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியிருப்பார்கள். இந்த நிலை அனைவருக்கும் தெரியும். நாடாளுமன்றத் தேர்தல் வரட்டும், விஜய் சரியான முடிவை எடுப்பார்” என்று தெரிவித்திருக்கிறார்.

"கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?" - திமுக ஊழல் ஆதாரம் குறித்த கேள்விக்கு அருண்ராஜ் கிண்டல் பதில்

முழுமையாக 100 நாட்களைக் கடந்துவிட்ட த.வெ.க ஆட்சியில், தமிழக சட்டசபையில், ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்குமான விவாதங்களில் அனல் பறக்கின்றன. 'லஞ்சம், ஊழல் அற்ற ஆட்சியைக் கொடுப்பேன்' எனச் சூளுரைக்கிற... மேலும் பார்க்க

"தமிழர்களின் உயிர் அல்பமானது கிடையாது" - கொதிக்கும் ஜோதிமணி

காவிரி விவகாரம், கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டது போன்றவைத் தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் எம்.பி., ஜோதிமணியைப் பேட்டி கண்டோம்."காவிரி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியி... மேலும் பார்க்க

Vijay: "இன்றைய CM... வருங்கால PM... முதல்வர் விஜய்தான் வருங்கால பிரதமர்" - அமைச்சர் ஜெகதீஸ்வரி

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர் என தவெகவினர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் சரத்குமார், விஜய்தான் அடுத்த பிர... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: 'பேய் விரட்டும்' போராட்டம்; எலுமிச்சம்பழம், தாயத்து, சிலுவை கட்டிய த.வா.க-வினர்!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் ஒன்றியம் மாங்குடி கிராமத்தில் கடந்த 1995-ஆம் ஆண்டு அரசு துணை சுகாதார நிலையம் திறக்கப்பட்டது. சுமார் 5,000 மக்கள் தொகை கொண்ட இந்த க... மேலும் பார்க்க

'அமைச்சருக்கு முன்பாக அறிவிப்பை வெளியிட்ட சேகர் பாபு!' - 'ஸ்பை' அதிகாரி; தவிப்பில் அமைச்சர் ரமேஷ்?

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்திருந்தது. அறநிலையத்துறையின் மீதான விவாதத்தின் போது அமைச்சர் பேசும் முன்பே '106 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிடவிருக்கிறார்' என முன்னாள் அமைச்சர் சே... மேலும் பார்க்க

‘எங்களுக்கு கார் வேண்டாம், எம்.பி அலுவலகம் வேண்டும்’ – ஜோதிமணி எம்.பி கோரிக்கை

கோவை திவ்யோதயா அரங்கில் நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் நடந்தது என்ன என்ற தலைப்பில் விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்பராயன், கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, கன்னி... மேலும் பார்க்க